Prime Day sale - அதிரடி சலுகைக்கான அமேசான் ப்ரைம் டே சேல் தேதிகள் அறிவிப்பு

அமேசான் ப்ரைம் டே

அமேசான் நிறுவனத்தின் பிரைம் டே சேல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு பொருட்கள் அதிரடி சலுகை விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

  • Share this:
    2021 ஆம் ஆண்டுக்கான பிரைம் டே சேல் தேதிகளை அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் பிரைம் டே சேல் விற்பனைகள் அடுத்த நாள் வரை நீடிக்கிறது. இந்த ஆண்டு இரண்டு நாட்கள் பிரைம் டே சேல் நடைபெற இருப்பதால் பல்வேறு பொருட்களுக்கு அதிரடி சலுகைகள் மற்றும் கூடுதல் பம்பர் பரிசுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தகவல் வெளியிட்டுள்ள அமேசான் நிறுவனம், வாடிக்கையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கு உகந்த அளவில் பிரைம் டே சேல் இருக்கும் எனக் கூறியுள்ளது.

    குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவலால் நலிவடைந்த, வாழ்வாதார பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் சிறு குறு வியாபாரிகள், நெசவாளர்கள், தொழில் முனைவோர்கள், உற்பத்தியாளர்கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு பயன்படும் வகையில் இந்த பிரைம் டே சேல் இருக்கும் என தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் பிரைம் டே சேல் விற்பனையின் 5வது ஆண்டு இதுவாகும். இதனை சிறப்பிக்கும் வகையில் அனைத்து பிரிவுகளிலும் டிஸ்கவுண்ட்ஸ் மற்றும் டீல்ஸ்கள் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜூலை 26 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு இந்த விற்பனை தொடங்கி ஜூலை 27 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இதுவரை சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களை எதிர்பார்க்காத அளவில் கூடுதல் சலுகைகளுடன் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும், ஒட்டுமொத்தமாக 300 புதிய புரொடக்டுகள் அறிமுகமும் செய்யப்பட உள்ளன

    https://twitter.com/AmazonNews_IN/status/1413073612060315648?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1413073612060315648%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fgadgets.ndtv.com%2Finternet%2Fnews%2Famazon-prime-day-sale-date-july-26-27-discounts-deals-offers-categories-announcement-twitter-2482139

    அமேசான் பிரைம் டே சேலுக்கான டீல்கள் ஜூலை 8 ஆம் தேதி முதலே தொடங்கியுள்ளன. ஜூலை 24 ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் அமேசான் வெப்சைட்டில் டீல்களை தொடரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கு பிரத்யேக சலுகைகளும், டீல்களும் கொடுக்கப்படுகின்றன. புதிய அறிவிப்புகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பொருட்களை பிரைம் சந்தாதாரர்கள் மட்டுமே வாங்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆகிவற்றில் வெளியாகும் புதிய மாடல்களை உடனடியாக அமேசான் சந்தாதாரர்கள் வாங்க முடியும்.

    அமேசான் இந்தியாவின் தலைமை அதிகாரி அமித் அகர்வால் இதுகுறித்து பேசும்போது, அமேசான் பிரைம் டே சேலில் சிறுகுறு மற்றும் உள்ளூர் வியாபாரிகளுக்கான விற்பனையை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். கொரோனா வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் அவர்களுடன் இணைந்து, விற்பனைகள் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான ஒரு சிறு முயற்சி என தெரிவித்துள்ள அவர், இந்த இரண்டு நாட்களில் விற்பனையாளர்களும், வாடிக்கையாளர்களும் மகிழும் வகையில் சேல்ஸ் மற்றும் டீல்ஸ்கள் இருக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    பிரைம் சந்தாதாரர்கள் பயன்படுத்தும் ஹெச்.டி.எப்.சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கு 10 விழுக்காடு டிஸ்கவுண்ட்டுகளும், இ.எம்.ஐ வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. அமேசான் பே-வை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.1000-க்கான காஷ்பேக் ஆஃபர் கொடுக்கப்படுகிறது. அமேசான் பே மூலம் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களுக்கு 5 ரிவார்ட் பாயிண்டுகளும் உண்டு.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முன்கூட்டியே அமேசான் பிரைம் டே சேல் விற்பனைக்கு திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனா வைரஸ் பரவலால் ஒத்திவைக்கப்பட்ட இந்த மெகா விற்பனை ஜூலை 26 ஆம் தேதி தொடங்குகிறது.
    Published by:Karthick S
    First published: