Home /News /technology /

Amazon Prime Day Sale 2022 | சிறந்த டீல்கள் மற்றும் தள்ளுபடிகளைப் பெற டாப் 10 ஐடியா.!

Amazon Prime Day Sale 2022 | சிறந்த டீல்கள் மற்றும் தள்ளுபடிகளைப் பெற டாப் 10 ஐடியா.!

amazon

amazon

Amazon Prime Day Sale 2022 | 2 நாள் அமேசான் பிரைம் டே விற்பனையின் போது சிறந்த டீல்கள் மற்றும் தள்ளுபடிகளை எப்படிப் பெறுவது என்று யோசிக்கிறீர்களா? உங்கள் ஷாப்பிங் பட்டியலில் சிறிது காலமாக இருக்கும் பொருட்களை வாங்க உதவும் குறிப்புகள் சிலவற்றை பார்க்கலாம்....

மேலும் படிக்கவும் ...
அமேசான் ப்ரைம் டே சேல் 2022 ஜூலை 23 அன்று தொடங்குகிறது. உலக அளவில் பிரபலமான இ- காமர்ஸ் தளமான அமேசான் வருடந்தோறும் தனது ப்ரைம் கஸ்டமர்களுக்காக சிறப்பு விற்பனையை அறிவித்து வருகிறது. அதன் படி இந்த ஆண்டு ஜூலை 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ‘அமேசான் ப்ரைம் டே சேல்’ அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு நாட்களும் ப்ரைம் உறுப்பினர்களுக்கு பல வகையான தயாரிப்புகளில் சலுகைகள், தள்ளுபடிகள் மற்றும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படும். ஜூலை 23 முதல் அடுத்த 48 மணிநேரத்திற்கு - Amazon Prime Day விற்பனையில் 80% வரை தள்ளுபடி வழங்கப்படும். 2 நாள் அமேசான் பிரைம் டே விற்பனையின் போது சிறந்த டீல்கள் மற்றும் தள்ளுபடிகளை எப்படிப் பெறுவது என்று யோசிக்கிறீர்களா? உங்கள் ஷாப்பிங் பட்டியலில் சிறிது காலமாக இருக்கும் பொருட்களை வாங்க உதவும் குறிப்புகள் சிலவற்றை பார்க்கலாம்....

1. அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்:

அமேசான் பிரைம் டே சேல் ஆஃபர்களை அள்ள, நீங்கள் முதலில் ப்ரைம் உறுப்பினராக இருக்க வேண்டும். எனவே பப்ரைம் மெம்பர்ஷிப் இல்லை என்றால், உடனே அதனை பெறுங்கள். அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்பில் இலவச டெலிவரிகள், ஸ்மார்ட்போன் வாங்கும் போது சிறப்பு காப்பீடு மற்றும் பல நன்மைகள் உள்ளன. ப்ரைம் வீடியோவில், 8 மொழிகளில் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் Amazon Originals ஆகியவற்றுக்கான வரம்பற்ற அணுகல் கிடைக்கிறது. ப்ரைம் உறுப்பினர்கள் Amazon Music மூலம் 70 மில்லியன் பாடல்களை விளம்பரமின்றி கேட்டு மகிழலாம். ஒரு மாதத்திற்கு ரூ.179, மூன்று மாதங்களுக்கு ரூ.459 அல்லது ஒரு வருடத்திற்கு ரூ.1499 செலுத்துவதன் மூலமாக அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப்பை பெற முடியும். சில ஏர்டெல் மற்றும் வோடபோன் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை செய்யும் போது அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் இலவசமாகவும் கிடைக்கிறது.



2. அமேசான் அசிஸ்டெண்ட்டை பதிவிறக்கம் செய்யுங்கள்:

அமேசான் சிறப்பு சேல் பற்றிய அறிவிப்புகளை பெற அமேசான் அசிஸ்டண்ட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், இது உங்கள் கம்யூட்டர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. நீங்கள் பெரும்பாலும் ஆப் மூலமாக ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் நபர் இல்லை என்றால், இது உங்களுக்கு உபயோகமாக இருக்கும். விலைகளை ஒப்பிடவும், புதிய பொருட்களைக் கண்டறியவும், மதிப்பீடுகளைப் பார்க்கவும் மேலும் பலவற்றிற்கு அமேசான் அசிஸ்டண்ட் உதவுகிறது.

Also Read : ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது இந்த தவறுகளை மறந்தும் செய்ய வேண்டாம்


3. பேமெண்ட் (கிரெடிட்/டெபிட் கார்டு/யுபிஐ) விவரங்களைச் சேமிக்கவும்:

விற்பனை தொடங்கும் முன், உங்கள் கட்டண விருப்பங்களை தேர்வு செய்து சேமித்து வைத்துக்கொள்ளவும். இது நேரத்தை மிச்சப்படுத்தும் மற்றும் விரைவாக செக் அவுட் செய்ய உதவும். குறிப்பாக 'lightning deals' -யின் போது வேகமாக ஆஃபர்களை அள்ள உதவும்.

4. அமேசான் பே-யைப் பயன்படுத்துங்கள்:

உங்கள் Amazon Pay கணக்கில் பணத்தைச் சேர்த்து வையுங்கள். Amazon Pay பேலன்ஸைப் பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு அமேசான் சிறப்பு சலுகைகள் மற்றும் கேஷ்பேக்குகளை வழங்குகிறது.



 

5. கிரெடிட்/டெபிட் கார்டு சலுகைகளைத் தேடுங்கள்:

அமேசான் பிரைம் டே சேல் 2022 ஐசிஐசிஐ வங்கி மற்றும் எஸ்பிஐ கார்டுகள் அல்லது இஎம்ஐ பரிவர்த்தனைகள் மூலம் வாங்கும் போது 10 சதவீத உடனடி தள்ளுபடியை வழங்குகிறது.

Also Read : Blockchain Technology என்றால் என்ன? இதில் டெவலப்பராவதற்கு தேவையான திறன்கள் என்ன?

6. நல்ல டீல் கிடைத்தால் மிஸ் செய்யாதீர்கள்:

நீங்கள் வாங்க ஆசைப்பட்ட எந்த பொருளுக்காவது நல்ல டீல் கிடைத்தால், விலை இன்னும் குறையட்டும் என காத்திருக்காதீர்கள். குறிப்பாக ஸ்மார்ட் போன்கள், உபகரணங்கள் மற்றும் பிற மின்னணு பொருட்கள். பிரபலமான தயாரிப்புகள் பெரிய தள்ளுபடியில் பொதுவாக குறைந்த அளவுகளில் மட்டுமே இருக்கும். அவை கடைகளின் ஷோ விண்டோவில் உள்ள தயாரிப்புகளைப் போலவே, கவனத்தை ஈர்க்கவும், வாடிக்கையாளர்களை வாங்கவும் தூண்டும். இதனால் விற்பனை தொடங்கிய சில மணிநேரங்களில் அவற்றின் ஸ்டாக் முடியவோ அல்லது விலை உயரவோ வாய்ப்புள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

7. அமேசான் நோட்டிபிகேஷனை ஆன் செய்து வையுங்கள்:

உங்கள் அமேசான் ஆப்பில் நோட்டிபிகேஷனை 'ஆன்' செய்யப்பட்ட்டிருப்பதை உறுதிசெய்யவும். இது 'lightning deals' மற்றும் பலவற்றைப் பற்றிய அறிவிப்புகளை பெற உதவும். நோட்டிபிகேஷனைப் பெற, உங்கள் மொபைலில் உள்ள 'அமைப்புகள்' என்பதற்குச் சென்று, அமேசான் பயன்பாட்டிற்கான அறிவிப்புகளை மாற்றவும்.



8. ஜூலை 23 நள்ளிரவு வரை காத்திருக்க வேண்டாம்:

ஜூலை 23 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு விற்பனை தொடங்கும் போது, ​​தங்கள் விருப்பப்பட்டியலில் தயாரிப்புகளைச் சேர்க்கலாம். எனவே, நீங்கள் வாங்க விரும்பும் அனைத்து நல்ல டீல்கள் அல்லது பொருட்களை உங்கள் ஷாப்பிங் கார்ட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள். எல்லா டீல்கள் மற்றும் தள்ளுபடிகள் இப்போது காட்டப்படாமல் போகலாம் ஆனால் நீங்கள் செக் அவுட் செய்யும் போது, ​​புதுப்பிக்கப்பட்ட விலைக்கு அனைத்து பொருட்களையும் வாங்க இது எளிமையான வழியாகும்.

9. ஆஃபர் ஆரம்பிக்கும் முன்பே அலர்ட்டா இருங்கள்:

அமேசான் ஏற்கனவே இரண்டு நாள் விற்பனையின் போது அதிக தள்ளுபடிகள் கிடைக்கும் தயாரிப்புகள் மற்றும் வகைகளை பட்டியலிட்டுள்ளது. இணையதளத்தில் உலாவும் மற்றும் நீங்கள் ஆர்வமாக இருக்கும் ஆஃபர்களை முன்கூட்டியே தேர்வு செய்து வைத்துக்கொள்ளுங்கள். இது விற்பனை ஸ்டார்ட் ஆனதும், ஆஃபர்களை தட்டித்தூக்க உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Also Read : இந்த 8 ஆபத்தான ஆண்ட்ராய்டு ஆப்ஸ்களை உடனடியாக டெலீட் செய்யுங்கள்.!

10. லைட்னிங் டீல்ஸை மிஸ் செய்துவிடாதீர்கள்:

விற்பனை ஆரம்பித்ததும், லைட்னிங் டீல்ஸ் எனப்படும் மின்னல் ஆஃபர்களை தேடுங்கள். இந்த சலுகை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே இருக்கும் என்பதால், வழக்கமான சலுகைகளை விட சிறந்த தள்ளுபடிகளை வழங்குகின்றன. அமேசான் பிரைம் டே விற்பனை 2022 ஜூலை 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களில் தினமும் மாலை 4-6 மணி வரை வாவ் டீல்களை வழங்கும்.
Published by:Selvi M
First published:

Tags: Amazon, Amazon Prime, Offer

அடுத்த செய்தி