Home /News /technology /

Amazon Prime Day 2022 : ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது இந்த தவறுகளை மறந்தும் செய்ய வேண்டாம்

Amazon Prime Day 2022 : ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது இந்த தவறுகளை மறந்தும் செய்ய வேண்டாம்

மாதிரி படம்

மாதிரி படம்

"அமேசான்" என்ற வார்த்தையுடன் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட 1,900 டொமைன்களையும் அது கண்டறிந்தது.

    அமேசான் தனது பிரைம் டே விற்பனையை இந்தியாவில் ஜூலை 23 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் நடத்த உள்ளது. இந்த நேரத்தில் தான் பலரும் ஆன்லைன் ஷாப்பிங்கை அதிக அளவில் பயன்படுத்துவார்கள். அதே போன்று இந்த நேரத்தில் தான் பல வித சைபர் கிரைம்கள் உண்டாகும். குறிப்பாக ஃபிஷிங் போன்ற ஆன்லைன் மோசடிகளை சமீபத்தில் பார்த்து வருகிறோம். தினசரி அமேசான் தளத்தில் ஃபிஷிங் தொடர்பான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை செக் பாயிண்ட் ரிசர்ச் (CPR) கண்டறிந்துள்ளது. மேலும் இது குறித்த விரிவான தகவல்களையும் தெரிவித்துள்ளது.

    ஜூன் மாதத்தை ஒப்பிடும்போது ஜூலை முதல் வாரத்தில், இத்தகைய ஃபிஷிங் தாக்குதல்களில் 37 சதவீதம் அதிகரிப்பை CPR கண்டறிந்துள்ளது. "அமேசான்" என்ற வார்த்தையுடன் புதிதாகப் பதிவுசெய்யப்பட்ட 1,900 டொமைன்களையும் அது கண்டறிந்தது. இவற்றில் 9.5 சதவீதம் சந்தேகத்திற்கிடமான தளமாகவும் அல்லது தீங்கிழைக்க கூடிய தளம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரைம் டே 2021-க்கு முந்தைய வாரத்தில், 2,303 புதிய டொமைன்களைக் CPR கண்டறிந்துள்ளது, அவற்றில் 38 சதவீதம் தளங்கள் ஆபத்தானவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட மோசடிகளில் இருந்து ஆன்லைனில் ஷாப்பிங் செய்வோர் பாதுகாப்பாக இருக்க சில வழிமுறைகள் உள்ளது. அவற்றை பற்றி இனி பார்க்கலாம்.

    ஃபிஷிங் மின்னஞ்சல்கள் :

    பாதிப்பை தர கூடிய மின்னஞ்சல்களை முறையானதாகக் காட்ட, ஹேக்கர்கள் பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்துகின்றனர். மேலும் அவற்றை நீங்கள் அறிந்திருந்தால், ஃபிஷிங் தாக்குதல்களைக் கண்டறிந்து தவிர்ப்பது உங்களுக்கு எளிதாக இருக்கும். அதில் முதலாவது போலியான டொமைன்கள். ஒரு முறையான நிறுவனத்தின் தளத்தை அப்படியே காபி அடித்து போலியான ஒன்றை உருவாக்குவது பொதுவான மின்னஞ்சல் ஃபிஷிங் நுட்பங்களில் ஒன்றாகும். எடுத்துக்காட்டாக, help@company.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பதிலாக, ஹேக்கர்கள் help@cornpany.com ஐப் பயன்படுத்தி உங்களை ஏமாற்ற செய்யலாம்.

    சைபர் தாக்குதல்


    மின்னஞ்சல்களில் அதிக கவனம் செலுத்தவில்லை என்றால் எளிதில் ஏமாற்றப்படுவீர்கள். இதேபோல், help@company-support.com என்பதையும் ஹேக்கர்கள் பயன்படுத்தலாம். இதை பார்க்கும் போது சரியான ஒன்றாக தோன்றினாலும், இந்த டொமைன் சந்தேகத்திற்குரிய நிறுவனத்திற்கு சொந்தமானதாகவோ அல்லது தொடர்புடையதாகவோ இருக்காமல் போகலாம். எனவே மின்னஞ்சல்களில் கவனம் தேவை.

    தவறான மின்னஞ்சல்கள் :

    ஃபிஷிங் மின்னஞ்சல்கள் பெரும்பாலும் இலக்கணப் பிழைகள் மற்றும் எழுத்து பிழைகளை கொண்டிருக்கின்றன. எந்த வகையிலும், முறையான நிறுவனங்களின் மின்னஞ்சல்களில் இதுபோன்ற பிழைகள் இருக்க வாய்ப்பில்லை, மேலும் இது ஃபிஷிங் அஞ்சல்களைக் கண்டறிய எளிதான வழியாகும். எனவே உங்களுக்கு வரக்கூடிய மின்னஞ்சல்களில் எழுத்து பிழை போன்றவை இருந்தால் அதில் ஜாக்கிரதையாக இருங்கள்.

    Also Read : உங்கள் வாழ்வை எளிமையானதாக மாற்றும் கூகுள் அசிஸ்டெண்ட் வசதிகளை தவற விடாதீர்கள்.!

    ஆபத்தான இணைப்புகள் :

    பல ஃபிஷிங் தாக்குதல்கள், மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்ட லிங்க் மூலம் ஏற்படுகிறது. இந்த இணைப்பை கிளிக் செய்ததும் உங்களின் தகவல்கள் திருடப்படலாம் அல்லது வேறு ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இதை கண்டறிய, ஃபிஷிங் மின்னஞ்சல்களில் பெரும்பாலும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் இருக்கும். எடுத்துக்காட்டாக, விலைப்பட்டியலை வழங்க வேண்டிய மின்னஞ்சலில் .zip ஃபைல் இணைப்பு இருக்கலாம். இப்படி சந்தேகத்தை தர கூடிய இணைப்புகள் இருந்தால் அதை ஒருபோதும் திறக்க வேண்டாம்.



    உளவியல் தந்திரங்கள் :

    ஃபிஷிங் மின்னஞ்சல்கள், மால்வேரை நிறுவுதல் அல்லது முக்கியமான தகவல்களைப் பகிர்தல் போன்ற நம்பவைக்க கூடிய உளவியல் தந்திரங்களைப் பயன்படுத்துகின்றன. இந்த ஃபிஷிங் முறை, உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்கிற உணர்வை உருவாக்கி தவறான அவசர முடிவுகளை எடுக்க செய்கிறது. இதில் மற்றொரு மோசடி வழி என்னவென்றால், ஹேக்கர்கள் தாங்கள் சொல்வதைச் செய்யாவிட்டால் அச்சுறுத்துவது, அவர்களைப் பற்றிய முக்கியமான தகவல்களை வெளிப்படுத்துவது போன்ற வகையில் தொடர்பு கொள்வார்கள். சிலர் இந்த பயம் காரணமாக அவர்கள் சொல்வதை அப்படியே செய்து விடுவர்.

    இதில் இருந்து தப்பிக்க, உங்கள் உணர்வுகளை சரியான முறையில் கையாள கற்று கொள்ளுங்கள். இது போன்ற ஃபிஷிங் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க இதுவே சிறந்த வழி.
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி