அமேசானின் பிரைம் வீடியோ சமீபத்தில் இந்தியாவில் மூவி ரென்டல் சர்விஸை (movie rental service) அறிமுகப்படுத்தி உள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட ஒரிஜினல் சீரிஸ் மற்றும் திரைப்படங்களை வெளியிடுவதாக அமேசான் உறுதி அளித்துள்ளது.
கிட்டத்தட்ட 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு மத்தியில் அமேசானுக்கு மதிப்புமிக்க சந்தை உள்ளது. இதனிடையே மூவி ரென்டல் சர்விஸை அறிமுகப்படுத்தி உள்ள அமேசான் பிரைம் வீடியோவால் அறிவிக்கப்பட்ட டைட்டில்களில் மேட் இன் ஹெவன், படால் லோக், மிர்சாபூர், தி ஃபேமிலி மேன் மற்றும் ப்ரீத்: இன்டூ தி ஷேடோஸ் போன்ற ஹிட் வெப் தொடர்களின் புதிய சீசன்களும் அடங்கும். இந்த ட்ரான்ஷேக்ஸ்னல் வீடியோ-ஆன்-டிமாண்ட் (TVOD - transactional video-on-demand) மூவி ரென்டல் சர்விஸின் மூலம் வாடிக்கையாளர்கள் இப்போது சமீபத்திய இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்களுக்கான ஆரம்ப அணுகலை (early access) பெறலாம்.
movie rental service-ன் அறிமுக விழாவில் பேசிய அமேசான் பிரைம் வீடியோ இந்தியா-வின் தலைவர் கௌரவ் காந்தி, இந்த சேவையை வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் எங்களின் திரைப்பட உரிம கூட்டாண்மைகளை இதன் மூலம் விரிவுபடுத்துகிறோம். இந்த சேவை வாடிக்கையாளர்களின் வரம்பையும், விருப்பத்தையும் விரிவுபடுத்தும். எங்களது புதிய இந்த சேவை வாடிகையாளர்கள் ஒரு நிலையான மாதாந்திர கட்டணத்திற்கு பதிலாக, விரும்பும் திரைப்படத்திற்கு பணம் செலுத்த அவர்களுக்கு உதவுகிறது.
இது திரைபடங்களுக்கு இன்னும் விரிவாக்கப்பட்ட அணுகலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கன்டென்ட்டை எவ்வாறு அணுக வேண்டும் மற்றும் பார்க்க வேண்டும் என்பதில் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் விருப்பத்தை அளிக்கும் என்றார்.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் இந்தியாவில் அதன் ஸ்ட்ரீமிங் சேவையை அறிமுகப்படுத்திய சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சேவை தற்போது தான் அறிமுகபடுத்தப்பட்டு உள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் பிரைம் வீடியோவில் முதலீட்டை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதாக அமேசான் நிறுவனம் கூறி உள்ளது.
Also read... விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் Xiaomi Pad 5-ன் விலை மற்றும் சிறப்பம்சங்கள்..
அமேசான் 3 இந்திய மொழிகளில் 41 ஒரிஜினல் சீரிஸ்களுக்கான பிளான்களை வெளியிட்டது. இதில் சிலவற்றை கரண் ஜோஹர் மற்றும் ஜோயா அக்தர் போன்ற முன்னணி பாலிவுட் இயக்குநர்கள் தயாரிக்க உள்ளனர். ஒரு திரைப்படத்தை ரென்டிங் எடுப்பதற்கான விலை ரூ.99 முதல் ரூ.499 வரை இருக்கும் என்று அமேசான் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. HD அல்லது Ultra HD 4K-ல் திரைப்படங்களை வாடகைக்கு எடுக்கலாம் என்றும் நிறுவனம் கூறி இருக்கிறது. இதனிடையே இந்தியாவில் உள்ளூர் கன்டென்ட்டை வாங்குவதற்கும், தயாரிப்பதற்கும் அமேசான் அதிக முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.