முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ட்ரோன் மூலம் டெலிவரி செய்யும் Amazon நிறுவனத்தின் கனவு திட்டத்தில் சிக்கல்

ட்ரோன் மூலம் டெலிவரி செய்யும் Amazon நிறுவனத்தின் கனவு திட்டத்தில் சிக்கல்

amazon drone delivery

amazon drone delivery

Amazon Prime Air Drone Delivery | அமேசான் நிறுவனம் தனது கனவு திட்டமான ட்ரோன் மூலம் டெலிவரி செய்யும் திட்டத்திற்காக இதுவரை 2 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ட்ரோன்களைப் பயன்படுத்தி வேகமாக டெலிவரி செய்வது அமேசானின் கனவுத் திட்டங்களில் ஒன்றாகும். அமேசான் நிறுவனத்தின் ஆளில்லா விமானங்கள் டெலிவரி ஸ்டேஷனில் இருந்து வானத்தில் பல மைல்கள் தூரம் பறந்து சென்று, சாலையில் போக்குவரத்து நெரிசல்கள் உட்பட எந்த தடையும் இல்லாமல் டெலிவரி சேவையாற்ற வேண்டுமென அமேசான் நிறுவனம் முயன்று வருகிறது.

2013 ஆம் ஆண்டில், அமேசான் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெசோஸ் ட்ரோன் டெலிவரி பற்றிய தனது திட்டத்தை அறிவித்தார். அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் பைலட் ட்ரோன் டெலிவரிகளுக்கு ஒப்புதல் அளித்த பிறகு, அமேசான் வாடிக்கையாளர்களின் ட்ரோன் மூலம் டெலிவரி பெறும் கனவு அதிகரிக்க ஆரம்பித்தது.

ஆனால் ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின் படி, அமேசானின் இத்திட்டம் குறித்து பல ஆண்டுகளாக அமேசான் நிறுவனம் எவ்வித அப்டேட்டையும் வெளியிடாதது. அந்நிறுவனம் ட்ரோன் டெலிவரி திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள யதார்த்த சிக்கல்களை எதிர்த்து போராடுவதாக குறிப்பிட்டுள்ளது.

அமேசான் நிறுவனம் தனது கனவு திட்டத்திற்காக இதுவரை $2 பில்லியனுக்கும் அதிகமான தொகையை செலவிட்டுள்ளது. உலகெங்கிலும் உள்ள 1000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த திட்டத்தின் பின்னணியில் பணியாற்றி வருகின்றனர். அமேசான் எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இருப்பதாக ப்ளூம்பெர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் அமேசான் நிறுவனம் சோதனை செய்த ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானது, ட்ரோன்கள் குறித்த பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வரும் மாதங்களில் மீண்டும் ட்ரோன்களை சோதனை செய்ய அந்நிறுவனம் முயற்சித்து வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read : நிலவில் 800 கோடி மக்களுக்கு போதுமான ஆக்சிஜன் - ஆய்வில் புதிய தகவல்

கடந்த ஆண்டு 2500 ட்ரோன் டெலிவரி சோதனைகள் நடத்த திட்டமிடப்பட்டு அது நடக்காமல் போன நிலையில், 2022க்குள் 12,000 விமானங்களை இயக்க அமேசான் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. பிப்ரவரியில், 200 விமானங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. மேலும் பரிசோதனை செய்வதற்கான இடங்களைக் கண்டறியவும் அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

இதற்கிடையில், ட்ரோன் டெலிவரிக்காக பணிபுரியும் குழு உறுப்பினர்களிடையே பணி அழுத்தம் மற்றும் பிற பிரச்சனைகள் குறித்து புகார்கள் எழுந்தது அமேசான் நிறுவனத்திற்கு அடுத்த தலைவலியை கொடுத்துள்ளது.

Also Read : சத்தமின்றி இந்த 2 ஆப்ஸ்களை நீக்கிய இன்ஸ்டாகிராம்!

அமேசானின் முன்னாள் மற்றும் தற்போதைய ஊழியர்கள் ப்ளூம்பெர்க்கிடம், பாதுகாப்பை விட வேகமாக திட்டத்தை தொடங்குவதே நிறுவனத்தின் முன்னுரிமை என்று கூறியுள்ளனர். அமேசான் நிறுவனத்தின் ட்ரோன் திட்ட மேலாளர், பாதுகாப்பு குறித்த தனது அச்சத்தை மேலாளரிடம் பேசியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டதாக கடந்த மாதம் தெரிவித்ததும் சர்ச்சையை உருவாக்கியது.

அமேசானின் முன்னாள் ட்ரோன் விமான உதவியாளர் டேவிட் ஜான்சன், முழு குழுவும் இல்லாமல், போதுமான உபகரணங்கள் இல்லாமல் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டியுள்ளார். சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அமேசான் நிறுவனம் பணியாளர்களுக்கு மிகக் குறைந்த நேரத்தை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அமேசான் நிறுவனம் மறுத்துள்ளது.

Also Read : ஃபேஸ்புக், யூடியூப்புக்கு வருகிறது மிகப்பெரிய சவால்... சீன ஆப் அதிரடி

2013ல் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் செயல்படுத்தியிருந்தால், 2022க்குள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த முறையை அமல்படுத்தியிருக்கலாம். அமேசான் மட்டுமல்ல, வால்மார்ட், கூகுள் விங் மற்றும் யுனைடெட் பார்சல் சேவை போன்ற நிறுவனங்களும் தங்கள் சொந்த ட்ரோன் சேவையை கொண்டுள்ளன.

First published:

Tags: Amazon, Drone