உலகின் மிகப்பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானில் இருந்து கடந்த ஓரிரு நாளில் சில பிரபல டெக் அக்சஸரி மேக்கர்கள் மற்றும் அவர்களது ப்ராடக்ட்கள் மறைந்து போயுள்ளன. இதற்கு காரணம் அவற்றை அமேசான் நிறுவனம் நீக்கி இருக்கிறது. அமேசான் தனது வெப்சைட்டிலிருந்து சுமார் 600 சீன பிராண்டுகளை நீக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர தடை செய்யப்பட்டுள்ள சீன பிராண்டுகளை சப்போர்ட் செய்த சுமார் 3,000 வணிகர்களின் அக்கவுன்ட்களை அமேசான் க்ளோஸ் செய்து இருக்கிறது. இந்த அதிரடி நடவடிக்கையை போலி ரிவியூக்கள் மற்றும் பிற பாலிசி மீறல்களுக்கு எதிராக அமேசான் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அலிபாபா குழுமத்திற்குச் சொந்தமான ஹாங்காங்கை சார்ந்த ஆங்கில மொழி செய்தித்தாள் நிறுவனமான சவுத் சீனா மார்னிங் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,
அமேசானால் தடை செய்யப்பட்டுள்ள பிராண்டுகள் மீண்டும் மீண்டும் ஊக்குவிக்கப்பட்ட விமர்சனங்களை தடை செய்யும் மறுஆய்வு கொள்கைகளை வேண்டுமென்றே மீறியுள்ளதால் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அமேசான் கூறி இருப்பதாக தெரிவித்துள்ளது.அமேசானின் இந்த அதிரடி நடவடிக்கை 5 மாதங்களுக்கு முன்பே தீவிரமாக தொடங்கிய போதும், Aukey மற்றும் Mpow பிராண்டுகளை தடை செய்த போது அதிக கவனம் பெற்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஏனெனில் இந்த பிராண்ட் விற்பனையாளர்கள் ரிவ்யூகளை கொடுக்கும் வாடிக்கையளர்களுக்கு பரிசு அட்டைகள் உட்பட வெகுமதிகளை வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல கொள்கைகளை மீறிய RAVPower, Vava உள்ளிட்ட சீன பிராண்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பின் அடிப்படையில் சுமார் 600 சீன பிராண்டுகளின் பொருட்களை அமேசான் தடை செய்துள்ளது. இந்த தடை பற்றி தெரிவித்துள்ள அமேசான் அதிகாரி ஒருவர், "எங்களது கஸ்டமர்களுக்கு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்கவே அவர்கள் நம்பிக்கையுடன் பொருட்களை வாங்க ரிவ்யூ கொடுக்கும் ஆப்ஷனை வைத்திருக்கிறோம். ஏற்கனவே குறிப்பிட்ட பிராண்டுகளின் பொருட்களை வாங்கியோர் கொடுக்கும் நேர்மையான ரிவ்யூக்கள், பிற வாடிக்கையாளர்களுக்கு பெரிய வழிகாட்டியாக இருக்கும்.
Also read... Big Billion Days 2021: ஃப்ளிப்கார்ட்டில் விரைவில் அறிமுகமாக உள்ள முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட் ஃபோன்கள்!
ஆனால் சில சீன பிராண்டுகள் இந்த ரிவ்யூ விஷயத்தில் கொள்கையை மீறி உள்ளன. எனவே தான் அவற்றை கண்டறிந்து தடை செய்து, அவற்றின் ப்ராடக்ட்களை நிரந்தரமாக நீக்கி இருக்கிறோம்" என்றார்.ஆசியா குளோபல் விற்பனைக்கான அமேசானின் துணைத் தலைவர் சிண்டி டாய் இந்த தடை பற்றி கூறுகையில், ஒரே நேரத்தில் 600 சீன நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தனிப்பட்ட தாக்குதல் இல்லை.
சீன பிராண்டுகளின் வளர்ச்சியை ஒடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல இது. எங்கள் நிறுவனத்தின் கொள்கைகளை மீறும் உலகில் எந்த நாட்டின் பிராண்டுகளுக்கும் இதே போன்ற தடை நடவடிக்கைகள் தான் எடுக்கப்பட்டு வருகிறது என்றார். உண்மையாக செயல்படும் நிறுவனங்களுக்கு எப்போதும் நாங்கள் வரவேற்பு அளிப்போம். அதே சமயம் தங்கள் நிறுவன தயரிப்புகளை போலி ரிவ்யூக்கள் உள்ளிட்ட கொள்கை மீறல் மூலம் சந்தைப்படுத்த நினைத்தால் கட்டாயம் உறுதியான நடவடிக்கைகள் எடுப்போம் என்றும் அமேசான் கூறி இருக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.