இனி அமேசான் மூலமாகவும் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்யலாம்..!

வெளியீட்டு ஆஃபராக 200 ரூபாய்க்கு அதிகமானத் தொகையில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 70% அல்லது 200 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர் உள்ளது.

இனி அமேசான் மூலமாகவும் திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்யலாம்..!
அமேசான் டிக்கெட் புக்கிங்
  • News18
  • Last Updated: November 4, 2019, 5:33 PM IST
  • Share this:
அமேசான் இந்தியப் பயனாளர்கள் இனி அமேசான் ஆப் மூலமாகவே திரைப்பட டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான் ‘புக் மை ஷோ’ உடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் மூலம் அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது இதர பயனாளர்களும் இந்த சேவையைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

திரைப்பட டிக்கெட் மட்டுமல்லாது ‘புக் மை ஷோ’ மூலம் முன்பதிவு செய்யக்கூடிய வகையிலான அத்தனை நிகழ்வுகளுக்கும் அமேசான் மூலமே டிக்கெட் முன்பதிவு செய்யலாம். அமேசான் ஆப் மூலமாக ஏற்கெனவே விமான டிக்கெட், பில் கட்டணம், மொபைல் ரீசார்ஜ் செய்யும் வசதிகள் உள்ளன.


இந்தச் சேவையை மொபைல் ஆப் அல்லது மொபைல் இணையம் மூலமாக மட்டுமே பயன்படுத்த முடியும். இதில் அமேசான் பே மூலமாகவும் டிஜிட்டல் பேமன்ட் முறைகளிலும் பணம் செலுத்த முடியும். ஐசிஐசிஐ அமேசான் பே க்ரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 2 சதவிகித கேஷ்பேக் ஆஃபர் கொடுக்கப்படுகிறது.

வெளியீட்டு ஆஃபராக 200 ரூபாய்க்கு அதிகமானத் தொகையில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 70% அல்லது 200 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர் உள்ளது. இந்த ஆஃபர் ஒரு பயனாளருக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்.

மேலும் பார்க்க: டார்க் மோட், நெட்ஃப்ளிக்ஸ் இணைப்பு... புதிய அப்டேட் வழங்கிய வாட்ஸ்அப்..!டிக்டாக்கை தடை செய்தால் சமூகத்தில் குற்றங்கள் குறைந்து விடுமா?
First published: November 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்