மொபைல்ஃபோன்களில் டிக்டாக்கை நீக்குங்கள் - ஊழியர்களுக்கு உத்தரவிட்ட அமேசான்..

அக்டோபர் 15 முதல் தற்போது வரையிலான ஒரு வாரகாலத்தில் 34,000 கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

அமேசான் தனது பணியாளர்களிடம், தங்களின் மொபைல்ஃபோன்களில் இருந்து டிக்டாக் ஆப்பை நீக்குமாறு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு வலியுறுத்தியிருப்பதாக Reuters தெரிவித்துள்ளனது.

 • Share this:
  அமேசான் தனது பணியாளர்களிடம், தங்களின் மொபைல்ஃபோன்களில் இருந்து டிக்டாக் ஆப்பை நீக்குமாறு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக குறிப்பிட்டு வலியுறுத்தியிருப்பதாக Reuters தெரிவித்துள்ளனது.

  அமேசான் நிறுவனத்தின் பணியாளர்கள் அமேசான் ஈமெயில் பயன்படுத்தும் ஸ்மார்ட்ஃபோனில் டிக்டாக் செயலியைப் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. ப்ரவுசரில் இருந்து மட்டுமே டிக்டாக்கைப் பயன்படுத்தலாம் என்றும் ஸ்மார்ட்ஃபோனில் பயன்படுத்துவதற்கு, ஜூன் மாதம் 10-ஆம் தேதி முதல் அனுமதி மறுக்கப்படுகிறது என்று அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

  ”அமேசான் நிறுவனம் இந்த சுற்றறிக்கையை அனுப்புவதற்கு முன்பாக எங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை. உரையாடல் நிகழ்ந்திருந்தால் அவர்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டிருக்கும்” என்று டிக்டாக் தெரிவித்துள்ளது.

  மேலும் பார்க்க:-

  ஃபேஸ்புக் விவரங்களைத் திருடும் 25 ஆப்ஸை தடைசெய்தது Google: Uninstall செய்ய வேண்டிய ஆபத்தான ஆப்ஸ் பட்டியல் இதோ..

  சீன செயலியான டிக்டாக், சீனாவுக்கு வெளியில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. சமீபத்தில் டிக்டாக் உட்பட பல சீன ஆப்ஸை இந்திய அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
  Published by:Gunavathy
  First published: