இனி கைரேகை தான் ‘டிக்கெட்’: பயன்பாட்டுக்கு வரும் அமேசானின் அட்டகாசமான கருவி!

அமேசான் ஒன்

அமேசான் ஒன் கருவி மூலம் பார்வையாளர்களின் கைரேகை சேகரிக்கப்பட்டு அதனை டிக்கெட்டாக அவர்கள் பயன்படுத்த முடியும். ங்கள் விவரங்களை எப்போது வேண்டுமானாலும் அழிக்க வாடிக்கையாளர்கள் கோர முடியும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.

  • Share this:
    அமேசான் நிறுவனம் தனது அமேசான் ஒன்  கருவியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது. இந்த கருவி மூலம் ஒருவரின் கைரேகையை டிக்கெட்டாக பயன்படுத்த முடியும் என்பது இதன்  சிறப்பு.

    உலகின் மிகப்பெரிய  சில்லறை வர்த்தக நிறுவனமான அமேசான், சில்லறை வர்த்தகத்துடன், செயற்கை நுன்னறிவு, கருவிகள் உருவாக்கம், ஓடிடி தளம் போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் உருவாக்கியுள்ள கருவிதான் அமேசான் ஒன். பொதுவாக , வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை எளிதாக வழங்கவே அனைத்து நிறுவனங்களும் முயன்று வருகின்றன. அந்த முயற்சியின் வெளிபாடுதான் அமேசான் ஒன்.

    அமேசான் ஒன் மூலம் மக்கள் தங்கள் உள்ளங்கையை பயன்படுத்தி  பணம் செலுத்த முடியும், திரையரங்கு, ஸ்டேடியம்  போன்ற இடங்களுக்கு நுழைய முடியும். இந்த சேவை மிகவும் பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்,  சிறப்பு வழிமுறைகள்,கருவிகள்  ஆகியவற்றை பயன்படுத்தி ஒருவரின் கைரேகை  கையொப்பத்தை உருவாக்குகிறது.  அமேசான் நிறுவனத்திற்குள் இந்த கருவி பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது பொதுவெளியில்  அறிமுகப்படுத்த அமேசான் முடிவு செய்துள்ளது.

    இதையும் படிங்க: பட்ஜெட் விலையில் இந்தியாவில் விற்பனையாகும் சிறந்த 5G ஸ்மார்ட்போன்களின் பட்டியல்!


    அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள  டென்வெர் ( Denver) நகரில் உள்ள  ரெட் ராக்ஸ் ஆம்பிதியேட்டர் ( Red Rocks Amphitheatre) என்னும்  இசை நிகழ்ச்சி அரங்கில் இந்த திட்டத்தை சோதித்து பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.  டிக்கெட் நிறுவனம் AXS உடன் இணைந்து இந்த பரிசோதனை முயற்சியில் அமேசான் ஈடுபடவுள்ளது.

    மேலும் படிக்க: பிளிப்கார்ட்டில் ஐபோன் 12 சீரிஸ் ஃபோன்களுக்கு மாபெரும் தள்ளுபடி... விலைப்பட்டியல் இங்கே!


    அமேசான் ஒன் கருவி மூலம் பார்வையாளர்களின் கைரேகை சேகரிக்கப்பட்டு அதனை டிக்கெட்டாக அவர்கள் பயன்படுத்த முடியும்.  இதன் மூலம் நேரத்தை சேமிக்க முடியும்.  மேலும், தங்கள் விவரங்களை எப்போது வேண்டுமானாலும் அழிக்க வாடிக்கையாளர்கள் கோர முடியும் என்றும் அமேசான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Murugesh M
    First published: