மைக்ரோசாஃப்ட், கூகுள் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளிய அமேசான்..!

மூன்றாம் இடத்தில் 92.6 சதவிகித வளர்ச்சியுடன் சீனாவின் அலிபாபா நிறுவனம் உள்ளது.

மைக்ரோசாஃப்ட், கூகுள் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளிய அமேசான்..!
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: July 31, 2019, 2:30 PM IST
  • Share this:
சர்வதேச அளவில் க்ளவுட் சேவைத் துறையில் மைக்ரோசாஃப்ட், கூகுள், அலிபாபா ஆகிய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்துக்கு வந்துள்ளது அமேசான்.

காட்னர் இன்கார்ப்பரேஷன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ரேங்க்கிங் பட்டியலில் அமேசானின் டாப் இடம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காட்னர் நிறுவன துணைத் தலைவர் சித் நாக் கூறுகையில், “க்ளவுட் சேவை சந்தையைப் பொறுத்தவரையில் கடுமையான போட்டிகள் நிலவுகிறது. இச்சேவைக்கான தேவையும் அதிகம்.

சர்வதேச நிறுவனங்கள் பெரும் போட்டியாக முன்னிறுப்பதால் தரமான மிகவும் வசதியான சேவையை அளிக்கும் நிறுவனம் மட்டுமே வெற்றியைப் பெற முடியும்” என்றார். சர்வதேச அளவில் இந்தக் குறிப்பிட்ட சந்தையில் டாப் 5 நிறுவனங்களின் பங்களிப்பு மட்டும் 76 சதவிகிதம். 2018-ம் ஆண்டில் 15.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் ஈட்டி அமேசான் நிறுவனம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.


2017-ம் ஆண்டைவிட 27 சதவிகித அதிக வளர்ச்சியை அமேசான் பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில்ல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் உடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் உள்ளது. மைக்ரோசாஃப்ட் 2017-ம் ஆண்டு 3.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மட்டுமே வருவாய் பெற்றிருந்தது. மூன்றாம் இடத்தில் 92.6 சதவிகித வளர்ச்சியுடன் சீனாவின் அலிபாபா நிறுவனம் உள்ளது.

மேலும் பார்க்க: இந்திய விமானப் படை தயாரிப்பில் வெளியாகிறது புதிய மொபைல் கேம்..!
First published: July 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்