• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • இந்தியாவில் 5-வது ஆல்-வுமன் பார்ட்னர் டெலிவரி ஸ்டேஷனை துவக்கிய அமேசான்!

இந்தியாவில் 5-வது ஆல்-வுமன் பார்ட்னர் டெலிவரி ஸ்டேஷனை துவக்கிய அமேசான்!

அமேசான்

அமேசான்

இந்த ஸ்டேஷன்கள் மூலம் பெண்கள் மட்டுமே அமேசான் வாடிக்கையாளர்களுக்கு வர்த்தக பொருட்களை வழங்க முடியும்.

  • Share this:
நாட்டில் 5-வது ஆல்-வுமன் பார்ட்னர் டெலிவரி ஸ்டேஷனை (all-women Partner Delivery Station) அமேசான் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது. பெண்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில், அமேசான் ஆந்திர பிரதேசத்தில் அனைத்து பெண்களும் பங்குதாரர் டெலிவரி நிலையத்தை தொடங்கியுள்ளது. சிறப்பான வேலை வாய்ப்புகளை பெண்களுக்கு வழங்குவதற்கான உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில் சமீபத்தில் ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தின் பிடுகுரல்லா நகரில் புதிதாக ஆல்-வுமன் பார்ட்னர் டெலிவரி ஸ்டேஷனை அமேசான் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

குண்டூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டு உள்ள இந்த புதிய நிலையம், Amazon's Delivery Service Partner (DSP)-ஆல் ஆப்ரேட் செய்யப்படும் என்று அமேசான் இந்தியா கூறி இருக்கிறது. தற்போது தமிழ்நாடு, குஜராத் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநில நகரங்களில் அமேசான் ஏற்கனவே 4 all-women Delivery Station-களை கொண்டுள்ளது. அமேசான் இந்தியா தனது முதல் all-women Delivery Station-ஐ முதலில் அறிமுகப்படுத்திய இடம் சென்னை ஆகும்.

இந்நிலையில் தற்போது ஆந்திராவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள டெலிவரி ஸ்டேஷன் ஐந்தாவது ஆகும். இந்த all-women Delivery Station அமேசான் இந்தியாவின் லாஜிஸ்டிக்ஸ் துறையில் பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளின் முக்கிய பகுதியாக இருக்கிறது. இந்த ஆல்-வுமன் டெலிவரி ஸ்டேஷன்களில் நிர்வாகம் மற்றும் டெலிவரி அசோசியேட் பொறுப்பு முழுவதும் பெண்களால் முழுமையாக நிர்வகிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.

இந்த ஸ்டேஷன்கள் மூலம் பெண்கள் மட்டுமே அமேசான் வாடிக்கையாளர்களுக்கு வர்த்தக பொருட்களை வழங்க முடியும். இந்தியாவில் தொடர்ந்து அமைக்கப்பட்டு வரும் ஆல்-வுமன் பார்ட்னர் டெலிவரி ஸ்டேஷன்களை பற்றி பேசிய அமேசான் இந்தியா நிறுவனத்தின் லாஸ்ட் மைல் ஆபரேஷன்ஸின் இயக்குனர் கருணா சங்கர் பாண்டே,, “ இந்தியாவில் ஐந்தாவது அனைத்து மகளிர் டெலிவரி ஸ்டேஷனை, ஆந்திராவில் அறிமுகப்படுத்தி இருக்கிறோம். இதற்காக பெருமிதம் கொள்கிறோம்.

Also read... சாஃப்ட்வேர் டெவலப்பர்களுக்கு உதவும் வகையில் API பாலிசியை மாற்றிய ட்விட்டர்!

எங்களது இந்த தொடர்ச்சியான ஆல்-வுமன் பார்ட்னர் டெலிவரி ஸ்டேஷன்களை விரிவுபடுத்தும் முயற்சி, பெண்களுக்கு அவர்களின் எல்லைகளை விரிவுபடுத்த உதவும் வளர்ச்சி வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒன்றாக இருக்கிறது. அமேசான் இந்தியாவின் ஆப்ரேஷன் நெட்வொர்க்கை வலுப்படுத்துவதிலும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதிலும் இந்தியா முழுவதும் உள்ள எங்கள் டெலிவரி சர்வீஸ் பார்ட்னர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிறைவான வேலை வாய்ப்புகளை வழங்குவதிலும், அவர்களை நிதி ரீதியாக மேம்படுத்துவதற்கான எங்கள் தீர்மானத்திலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனிடையே அமேசான் விரைவில் சென்னையில் ஒரு டெலிவரி ஸ்டேஷனை திறக்க திட்டமிட்டுள்ளது. இதை பெண்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களை கொண்டு நிர்வகிக்க வைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: