ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

அடி தூள்! அமேசான் பிரைமின் புதிய மொபைல் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம்!

அடி தூள்! அமேசான் பிரைமின் புதிய மொபைல் வெர்ஷன் இந்தியாவில் அறிமுகம்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Amazon Prime | நெட்ஃபிலிக்ஸ், டிஸ்னி போலவே அமேசான் பிரைம் மொபைலில் மட்டுமே பார்க்க கூடிய புதிய சந்தா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

அமேசான் பிரைம் இந்தியாவில் கூட முன்னணி ஓடிடி தளமாக செயல்படுகிறது. மற்ற ஓடிடி தளங்களுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் அமேசான் பிரைமுக்கு அதிக சந்தாதாரர்கள், மற்றும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு வரை மிகக்குறைந்த விலையில் ஓடிடி சந்தாவை வழங்கி வந்த அமேசான் பிரைம் அதன் விலையை கடந்த ஆண்டு அதிகரித்தது. இது பலருக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் பிரைமின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

டிஸ்னி, நெட்ஃபிலிக்ஸ் என்று இந்தியாவில் இயங்கும் மற்ற ஓடிடி தளங்கள் மொபைல் வெர்ஷன் வழங்குவது போலவே தற்பொழுது அமேசான் பிரைமும், மொபைலில் மட்டுமே பார்க்கக்கூடிய ஒரு சப்ஸ்கிரிப்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.இந்தியாவில் இயங்கும் பல்வேறு ஓடிடி தளங்கள் தொலைக்காட்சி, கணினி, டேப்லெட் மற்றும் மொபைல் என்று வெவ்வேறு சாதனங்களுக்கு ஏற்றவாறு வெவ்வேறு சந்தா திட்டங்களை வழங்கி வருகிறது.

அமேசான் பிரைமைப் பொறுத்தவரை, ஒரு மாதம், மூன்று மாதம், ஒரு வருடம் என்று கால அடிப்படையில்தான் பிரைம் திட்டங்கள் வழங்கப்பட்டிருந்தன. உங்களிடம் எந்த சாதனம் இருந்தாலும் அதில் நீங்கள் அமேசான் பிரைம் சந்தா செலுத்தி பார்க்கலாம். எல்லோருமே தொலைக்காட்சிகள் அல்லது கணினியில் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. எனவே பலரும் மொபைல் வெர்ஷன் திட்டத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.

Read More : வாட்ஸ்அப்பில் ஆன்லைனில் இருப்பதை யாருக்கும் தெரியாமல் மறைப்பது எப்படி.?

நெட்ஃபிலிக்ஸ், டிஸ்னி போலவே அமேசான் பிரைம் மொபைலில் மட்டுமே பார்க்க கூடிய புதிய சந்தா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஓராண்டு சந்தாவின் விலை ரூபாய் 599 என்பது குறிப்பிடத்தக்கது.ஏற்கனவே இருக்கும் அமேசானின் திட்டங்கள் அப்படியே இருக்கும் என்றும், மொபைலில் மட்டும் பார்க்க விரும்புபவர்களுக்கு இந்த புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது என்றும் அமேசான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மொபைலில் மட்டுமே பார்க்க விரும்புவர்களுக்கான ஸ்பெஷல் வெர்ஷன் ஆக இது உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல், மொபைலைப் பொறுத்தவரை இது SD தரத்தில் இருக்கும், HD தரத்தை எதிர்பார்க்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொபைல் வெர்ஷனாக இருந்தாலுமே அமேசான் பிரைம் சந்தா செலுத்தினால் அதில் என்னென்ன வீடியோக்கள் கிடைக்கின்றன, அவை அனைத்தையுமே மொபைல் வெர்ஷனிலும் பார்க்கலாம். ஆனால் பொதுவாக பிரைம் சந்தா செலுத்தும் பொழுது ஒரு சந்தாவில் நான்கு அல்லது ஐந்து நபர்கள் வரை பார்க்கலாம். லைவாக ஓரிரு நபர்கள் மட்டுமே பார்க்க முடியும்.

அமேசான் பிரைமின் புதிய மொபைல் வெர்ஷன் அம்சங்கள்:

மொபைல் வெர்ஷனைப் பொறுத்தவரை, ஒரு சந்தாவை ஒரு மொபைலில் மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே நீங்கள் லைவாக போட்டிகள் அல்லது லைவ் நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டுமென்றால் அது ஒரு நபர் மட்டுமே பார்க்க முடியும்.
சாதாரண திட்டங்களில் இருப்பதைப் போலவே நீங்கள் வீடியோக்களை டவுன்லோடு செய்து ஆஃப்லைனில் பார்க்கும் அம்சமும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்தாவின் விலை ஆண்டுக்கு ₹599 என்பது ஒரு மாதத்திற்கு ₹50 செலுத்தினால் போதும் என்ற கணக்கில், இது விலை மலிவான ஓடிடி தள சந்தாவாக அமைந்திருக்கிறது.
மற்ற ஓடிடி தளங்கள் இதை விட கொஞ்சம் குறைவாக இருந்தாலும் அமேசான் பிரைமில் கிடைக்கும் வீடியோக்கள் உடன் ஒப்பிடும் பொழுது இந்த சந்தாவின் விலை மிக மிகக் குறைவு.
மொபைலில் மட்டும் பார்க்கும் அம்சம் கொண்ட நெட்ஃப்ளிக்ஸின் ஒரு மாத சந்தா விலை ₹149 மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரின் விலை ₹41 என்பது குறிப்பிடத்தக்கது.
அமேசானின் இந்த மொபைல் திட்டம் டிஸ்னி மற்றும் நெட்ஃபிளிக்ஸுக்கு மிக கடுமையான போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Amazon, Amazon Prime, Technology