முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ‘மேட் இன் இந்தியா’ பொருட்களுக்கு தனி ஸ்டோர் தொடங்கியுள்ள அமேசான் நிறுவனம்!

‘மேட் இன் இந்தியா’ பொருட்களுக்கு தனி ஸ்டோர் தொடங்கியுள்ள அமேசான் நிறுவனம்!

மேட் இன் இந்தியா

மேட் இன் இந்தியா

Made in India : இந்தியா ஓடிஓபி பஜார் மூலமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் உள்ளூர் தயாரிப்பு பொருட்கள் மற்றும் புவிசார் குறியீடு (GI) பெற்ற பொருட்கள் ஆகியவற்றை சந்தைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

இன்வெஸ்ட் இந்தியா மற்றும் இந்தியன் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் (IIA) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட இருப்பதாக அமேசான் இந்தியா நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இதன் மூலமாக, அமேசானின் ஆன்லைன் ஸ்டோரில் ஓடிஓபி (one district one product) என்ற புதிய வணிகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா ஓடிஓபி பஜார் மூலமாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் உள்ளூர் தயாரிப்பு பொருட்கள் மற்றும் புவிசார் குறியீடு (GI) பெற்ற பொருட்கள் ஆகியவற்றை சந்தைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளூர் தயாரிப்பு பொருட்களை இந்திய அளவில் சந்தைப்படுத்த நினைக்கும் வியாபாரிகளுக்கு இந்தத் தளம் மூலம் ஆதரவளிக்க அமேசான் இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய சிறு, குறு தொழில் மேம்பாட்டுத் துறை அமைச்சர் நாராயண ரானே வெளியிட்டுள்ள அறிககியில், “மேட் இன் இந்தியா தயாரிப்பு பொருட்களை ஊக்குவிக்கவும், சிறு, குறு தொழில்துறையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான ஏற்றுமதி வாய்ப்பை அதிகரிக்கவும், அவர்களுக்கான கட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுக்க எங்களது அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது. உள்நாட்டு பொருள் உற்பத்தியை அதிகரிக்கும் வண்ணம், அதற்கான மூலப் பொருட்கள், தொழில்நுட்பம், நிதி உதவி, திறன் பயிற்சிகள், பேக்கேஜிங் பயிற்சி, மார்க்கெட்டிங் குறித்த பயிற்சி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. அத்தகைய திசையை நோக்கி அமேசான் நிறுவனம் நடவடிக்கை மேற்கொள்வது மகிழ்ச்சிக்கு உரிய விஷயமாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : நாங்க ரொம்ப ஸ்ட்ரிட்; ஏர் இந்தியா ஊழியர்களுக்கு டாடா குழுமம் அதிரடி உத்தரவு

இந்திய கலைஞர்கள் தயாரிக்கும் கைவினைப் பொருட்கள் மற்றும் கைத்தறி பொருட்களுக்கு அமேசானின் புதிய ஸ்டோரில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா ஓடிஓபி பஜார் என்பது வாடிக்கையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுப்பதாக அமையும். இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களை மாவட்ட வாரியாக பிரித்து பார்த்து, அங்குள்ள சிறப்புமிக்க பொருட்களை வாங்குவதற்கான ஏற்பாடு அமேசான் தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அமேசான் இந்தியா நிறுவனத்தின், இந்திய வாடிக்கையாளர் வணிக பிரிவு மேலாளர் மணீத் திவாரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்வெஸ்ட் இந்தியா மற்றும் ஐஐஏ ஆகிய அமைப்புகளுடன் இணைவது மற்றும் கைவினைப் பொருட்கள், கைத்தறி பொருட்கள் மற்றும் வேளாண் உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் மத்திய அரசின் முயற்சியை முன்னெடுத்துச் செல்வது ஆகியவை குறித்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம். இதன் மூலமாக பொருளாதார வளர்ச்சி வேகம் அடையும். வேலைவாய்ப்பு உருவாகும் என்பதோடு, ஊரக தொழில் நிறுவனங்கள் மேம்பாடு அடையும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : குழந்தைக்கு சுஷ்மா என்ற பெயர் சூட்ட முடிவெடுத்தார் என் அம்மா... பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு

நாடெங்கிலும் உள்ள சிறு, குறு தொழிலகளை ஊக்குவிக்க அமேசான் நிறுவனம் எண்ணற்ற முயற்சிகளை அமேசான் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அந்நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் 10 லட்சம் விற்பனையாளர்களில் 90 சதவீதம் பேர் சிறு, குறு தொழில் முனைவோர் ஆவர்.

First published:

Tags: Made in India