இன்றைய தினம் நமக்கான ப்ராடக்டுகள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் குறித்து எண்ணற்ற ரிவ்யூ வந்து கொண்டிருக்கின்றன. உதாரணத்திற்கு மார்க்கெட்டில் இன்றைய தினம் புதிதாக ஒரு ஃபோன் அறிமுகம் ஆகின்றது என்று வைத்துக் கொண்டால், அதில் உள்ள பாசிட்டிவ்வான விஷயங்கள் என்ன, நெகட்டிவான விஷயங்கள் என்ன என்ற விஷயங்களை அலசி, ஆராய்ந்து ரிவ்யூ கொடுக்கப்படுகிறது.
ஃபேஸ்புக், யூ டியூப் போன்ற பல்வேறு சமூக வலைதளங்கள் மூலமாக இத்தகைய ரிவ்யூ-க்கள் கொடுக்கப்படுகின்றன. எழுத்துப்பூர்வமாக அல்லது வீடியோவாக என எந்த ரூபத்திலும் ரிவ்யூ என்பது கொடுக்கப்படுகிறது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு இருக்கத்தான் செய்கிறது.
குறிப்பிட்ட பொருளை நாம் வாங்காவிட்டாலும் கூட, அதைப் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எல்லோருக்கும் நிறையவே இருக்கிறது. அதேபோல, எந்தவொரு நபரும் புதிதாக ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால், அது எப்படிப்பட்டது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு வாங்க வேண்டும் என்ற சிந்தனையில் இந்த ரிவ்யூ கண்டெண்ட் அல்லது வீடியோவைத் தான் தேடி, தேடிப் பார்க்கின்றனர்.
போலியான ரிவ்யூ
வாடிக்கையாளர்கள் ரிவ்யூ பார்த்து பொருள் வாங்குவது ஒருபக்கம் நல்ல விஷயமாக இருந்தாலும், அந்த இடத்தில் தான் சில சறுக்கல்களும் தொடங்குகின்றன. அதாவது ஒரு பொருளையோ அல்லது நிறுவனத்தையோ பிடிக்காத சில ரிவ்யூவர்கள் அதுகுறித்து எதிர்மறையான கருத்துக்களை பரப்பி விடுகின்றனர். சில சமயம், நம்முடைய கண்டெண்ட் ஹிட் அடிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காகவோ அல்லது அடுத்த நிறுவனங்களின் தூண்டுதல் காரணமாகவோ போலியான ரிவ்யூ கொடுப்பது வாடிக்கையாக இருக்கிறது.
Also Read : உங்கள் வாழ்வை எளிமையானதாக மாற்றும் கூகுள் அசிஸ்டெண்ட் வசதிகளை தவற விடாதீர்கள்.!
அமேசான் நிறுவனம் நோட்டீஸ்
போலியான ரிவ்யூக்கள் மூலமாக தங்களின் வர்த்தகம் பாதிக்கப்படுகிறது என்ற சூழலில் அதற்கு எதிரான நடவடிக்கைகளை அமேசான் நிறுவனம் முன்னெடுத்துள்ளது. அதாவது, ஃபேஸ்புக்கில் அமேசானுக்கு எதிராக போலியான ரிவ்யூ கொடுத்ததாக 10 ஆயிரம் குரூப் அட்மின்களுக்கு அமேசான் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Also Read : வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு சூப்பர் அப்டேட்! இனி இதை எளிதாக மறைக்க முடியுமாம்
பணம் அல்லது இலவசப் பொருள்களுக்காக போலியான ரிவ்யூ கொடுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை அந்த நிறுவனம் முன்வைத்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் உள்ள அமேசான் ஸ்டோர்களுக்கு எதிராக இத்தகைய போலியான ரிவ்யூக்கள் முன்வைக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் ப்ராடக்ட் ரிவ்யூ
உதாரணத்திற்கு அமேசான் ப்ராடக்ட் ரிவ்யூ என்றொரு ஃபேஸ்புக் பேஜ் மீது புகார் தெரிவித்து கடந்த ஆண்டு அதை அமேசான் நிறுவனம் முடக்கியது. சுமார் 43 ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவில் அமேசான் குறித்து போலியான ரிவ்யூ கொடுக்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது.
Also Read : மாணவர்களுக்கு அசத்தல் சலுகையை அறிவித்துள்ள சாம்சங் நிறுவனம்
உலகெங்கிலும் அமேசானுக்கு எதிரான போலி ரிவ்யூக்களை தடுக்கும் நோக்கத்தில் 12 ஆயிரம் ஊழியர்களை அந்நிறுவனம் பணியமர்த்தியுள்ளது. இவர்களது கண்காணிப்பின் பேரில் சுமார் 10 ஆயிரம் போலி ரிவ்யூ குரூப்புகள் குறித்து ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அமேசான் நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.