அமேசானின் எக்கோ ஸ்பீக்கர், கிண்டில் உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களுக்கு 50% வரை தள்ளுபடி!

அமேசானின் எக்கோ ஸ்பீக்கர், கிண்டில் உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களுக்கு அந்நிறுவனம் 50% வரை தள்ளுபடி அளிக்கவுள்ளது.

அமேசானின் எக்கோ ஸ்பீக்கர், கிண்டில் உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களுக்கு அந்நிறுவனம் 50% வரை தள்ளுபடி அளிக்கவுள்ளது.

 • Share this:
  அமேசானின் ’கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்’ விற்பனையானது அக்டோபர் 17ம் தேதி சாதாரண வாடிக்கையாளர்களுக்கும், அக்டோபர் 16ம் தேதி அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கும் தொடங்க உள்ளது. எதிர்பார்த்தபடி, அமேசான் தனது சொந்த தயாரிப்புகளான அமேசான் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள், அமேசான் ஃபயர் டிவி ஸ்டிக், கிண்டில் இ-ரீடர் மற்றும் பலவற்றை 50% வரை தள்ளுபடியில் விற்பனை செய்கிறது.

  அமேசானின் நான்காவது ஜெனரேஷனான எக்கோ டாட் ஸ்மார்ட் ஸ்பீக்கர் கூட கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின்போது விற்பனைக்கு கிடைக்கும். இருப்பினும், அமேசான் புதிய எக்கோ டாட் (4 வது ஜெனரேஷனுக்கு) எந்த தள்ளுபடியையும் வழங்கவில்லை.

  இரண்டாவது ஜெனரேஷனான அமேசான் எக்கோ டாட், விப்ரோ ஸ்மார்ட் எல்.இ.டி பல்ப் அசல் விலையான ரூ.6,598-லிருந்து ரூ.4,299 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.2,299 விலையில் கிடைக்கின்றது. ஸ்பீக்கரும் அசல் விலையான ரூ. 4,499-லிருந்து, ரூ.2,250 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.2,499 விலையில் கிடைக்கும்.  அதேபோல், அமேசான் ஃபயர் ஸ்டிக் ரூ.50-க்கும் குறைவான தள்ளுபடி விலையில் விற்கப்படும். அசல் விலையான ரூ.3,999-லிருந்து குறைந்து, குறைந்தபட்சம் ரூ.1,000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.3,000 என்ற விலையில் கிடைக்கும். மறுபுறம், ஃபயர் ஸ்டிக் 4கே, ரூ.3,599 விலை கொண்ட எக்கோ ஷோவில் குறைந்தபட்சம் ரூ.2,400 தள்ளுபடி செய்யப்படும்.

  அசல் விலையான அமேசான் எக்கோ ஸ்மார்ட் ஸ்பீக்கர் ரூ.9,999-லிருந்து ரூ.3,000 தள்ளுபடி செய்யப்பட்டு, ரூ.6,999 கிடைக்கும். மேலும், 6 அங்குல கிண்டில் (10 வது ஜெனரேஷன்) அதன் அசல் விலையான ரூ.7,999-லிருந்து ரூ.6,499ஆக கிடைக்கும்.

  இரண்டாம் ஜன்ரேஷனான அமேசான் எக்கோ பிளஸ் ஸ்பீக்கர் அதன் அசல் விலையான ரூ.14,999-லிருந்து ரூ.7,499 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.7,500ல் கிடைக்கும். மேலும், அமேசான் எக்கோ ஸ்டுடியோவில் குறிப்பிடத்தக்க ரூ.18,999 விலையிலிருந்து ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கும்.

  Also read: ஐபிஎல் போட்டிகளை முன்வைத்து விஸ்வரூபமெடுக்கும் கிரிக்கெட் சூதாட்டம்: கோவையில் 4 பேர் கைது

  மற்ற சலுகைப்படி, அமேசான் எக்கோ டாட் (மூன்றாம் ஜெனரேஷன்), விப்ரோ ஸ்மார்ட் எல்.இ.டி பல்ப் மற்றும் அமேசான் ஃப்ளெக்ஸ் ஸ்மார்ட் பிளக் சேர்த்து ரூ.7,597 என்ற நிலையிலிருந்து ரூ.4,299 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.3,298-க்கு வழங்கப்படுகிறது.

  இந்த அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையானது கடந்த மாதம் இ-காமர்ஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை என்பது அமேசானின் மிகப்பெரிய வருடாந்திர விற்பனையாகும். அதாவது, அமேசான் பயனர்கள் இந்த ஆண்டின் சிறந்த சலுகைகளை விற்பனையில் பார்ப்பார்கள். மேலும், பண்டிகை கால அமைப்பில், ஆன்லைன் கடைக்காரர்கள் செலவிடத் தயாராக இதுவே சிறந்த நேரம் என்பதால், வால்மார்ட்டுக்குச் சொந்தமான பிளிப்கார்ட்டும் அதே நேரத்தில் ’பிக் பில்லியன் டே’ விற்பனையை அறிவித்துள்ளது.
  Published by:Rizwan
  First published: