அமேசான் விழாக்கால தள்ளுபடி... ஸ்மார்ட் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு அதிரடி ஆஃபர்!

பஜாஜ் ஈஎம்ஐ கார்டு, அமேசான் பே, ஐசிஐசி வங்கி க்ரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு வட்டியில்லா தவணை முறை வழங்கப்படும்.

அமேசான் விழாக்கால தள்ளுபடி... ஸ்மார்ட் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு அதிரடி ஆஃபர்!
அமேசான்
  • News18
  • Last Updated: September 9, 2019, 10:31 PM IST
  • Share this:
விழாக்கால விற்பனையாக அமேசான் ஆன்லைன் விற்பனைத் தளத்தில் ‘க்ரேட் இந்தியன் சேல்’ விற்பனை தொடங்க உள்ளது.

அமேசான் விழாக்கால சலுகை விற்பனை தேதி அறிவிக்கப்படவில்லை என்றாலும் செப்டம்பர் இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் இந்த விற்பனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல பொருட்களுக்கும் விலைச் சலுகை இருக்கலாம் என்றாலும் ஸ்மார்ட் எலெக்ட்ரிக் பொருட்களுக்கு அதிகப்படியான ஆஃபர் இருக்கும் என்றே கூறப்படுகிறது.

வழக்கம்போல், ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு ஒருநாள் முன்னதாகவே இந்த ஆஃபர் தொடங்கிவிடும். ஸ்மார்ட்போன்களுக்கு இதுவரையில் இல்லாத தள்ளுபடியும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு 50% மேலும் விலைத் தள்ளுபடி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


இம்முறை அமேசான் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா உடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் எஸ்பிஐ க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக 10 சதவிகித தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பஜாஜ் ஈஎம்ஐ கார்டு, அமேசான் பே, ஐசிஐசி வங்கி க்ரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு வட்டியில்லா தவணை முறை வழங்கப்படும். பல ஸ்மார்ட் பொருட்களுக்கும் இம்முறை சலுகை விற்பனை இருக்கும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: விரைவில் மலிவு விலை ஐபோன்கள் விற்பனைக்கு வருகிறது...உயருகிறது மின் இணைப்பு டெபாசிட், பதிவுக் கட்டணம்!
First published: September 9, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்