• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஒன்பிளஸ் மொபைல்களுக்கு அமேசானில் 10,000 வரை விலை குறைப்பு

ஒன்பிளஸ் மொபைல்களுக்கு அமேசானில் 10,000 வரை விலை குறைப்பு

ஒன்பிளஸ் மொபைல்கள் வாங்க வேண்டிய நேரம் இது

ஒன்பிளஸ் மொபைல்கள் வாங்க வேண்டிய நேரம் இது

ஒன்பிளஸின் புதிய நோர்ட் போன்களான ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி மற்றும் நோர்ட் சிஇ 5ஜி ஆகிய மாடல்களை ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கு போது மேலும் 10% சலுகையை பெற முடியும்.

  • Share this:
எஆன்லைன் விற்பனையில் அமேசானும், ப்ளிப்கார்டும் போட்டிபோட்டு கொண்டு விற்பனையை செய்து கொண்டிருக்கின்றன. அவ்வப்போது ஆஃபர்களை அறிவித்து, மக்களை எந்த பொருள் வாங்கலாம் என்று யோசித்து அதனை வாங்க வைத்துவிடுகின்றன. தற்போது அமேசான் ‘கிரேட் இந்தியன் பெஸ்டிவல்' என்ற விழாக்கால ஆஃபர்களை அறிவித்துள்ளது.

அமேசான் தனது “கிரேட் இந்தியன் பெஸ்டிவலை” முன்னிட்டு பல்வேறு சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. தற்போது ஒன்ப்ளஸ் மொபைல்கள் மீது அதிரடி ஆஃபர்களை அறிவித்துள்ளது. அதன்படி ஒன்பிளஸ் 9 5ஜி, ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி மற்றும் ஒன்பிளஸ் 9 ஆர் 5ஜி போன்ற ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பை அறிவித்துள்ளது.

அதேபோல், ஒன்பிளஸின் புதிய நோர்ட் போன்களான ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி மற்றும் நோர்ட் சிஇ 5ஜி ஆகிய மாடல்களை ஐசிஐசிஐ வங்கி கார்டுகளை பயன்படுத்தி வாங்கு போது மேலும் 10% சலுகையை பெற முடியும். ஒன்பிளஸின் இதர பொருட்களான பட்ஸ் இசட் மற்றும் பட்ஸ் புரோ போன்றவைகளுக்கும் ஆஃபர்கள் உள்ளது. அதுகுறித்து இங்கு காண்போம்.,

ஒன்பிளஸ் 9 ப்ரோ :

ஒன்பிளஸ் 9 ப்ரோ 5ஜி-யின் ஆரம்ப விலை 57,999 ஆகும். இது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மார்னிங் மிஸ்ட், பைன் கிரீன் மற்றும் ஸ்டெல்லர் பிளாக் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலில் ஹாசல்ப்ளாட் இணைந்த கேமராக்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த போன் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 870 SoC என்ற ப்ராசஸருடன் வருகிறது. 128 ஜிபி மெமரி கொண்ட இந்த போன் ரூ. 39,999க்கு பதிலாக ஆபரில் ரூ .34,999 விலைக்கு கிடைக்கும். இது ஒன்பிளஸ் மொபைல்களில் வந்த ஆஃபர்களிலேயே சிறந்த ‘ஆஃபர்’ ஆகும்.

Also read... ரோபோ முதல் ட்ரோன் வரை: அமேசானின் அட்டகாச தொழில்நுட்ப சாதனங்கள் அறிமுகம்!

ஒன்பிளஸ் நோர்ட் :

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி மற்றும் ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடல்களுக்கு விலைக் குறைப்பு பொருந்தாது. ஆனால் , வங்கி ஈஎம்ஐ முறைகளில் வாங்கும் போது சலுகைகள் பெறலாம் என்று அறிவித்துள்ளது. ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் கொண்ட வாடிக்கையாளர்கள் கேஷ்பேக் போன்ற சலுகைகளை பெறலாம். அதேபோன்று ‘EMI (தவணை முறை) பெறும்போதும்,எக்சேஞ் செய்யும்போதும் சலுகைகளை பெறலாம்’ என்று அமேசான் கூறியுள்ளது.

ஒன்பிளஸ் பட்ஸ் :

ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ TWS ரூ .9,999க்கு விலை குறைப்பு செய்துள்ளது. ஒன்பிளஸ் பட்ஸ் இசட் (எம்ஆர்பி ரூ. 2,999), ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இசட் சீரிஸ் ரூ .1,999க்கும், பவர் பேங்க் 10,000 எம்ஏஎச் ரூ .1,299க்கும் தள்ளுபடி விலையில் வாங்கி கொள்ளலாம் என்று அமேசான் கிரேட் இந்தியன் திருவிழாவை முன்னிட்டு அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: