ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் நிறுவனம் தீபாவளியையொட்டி கடந்த ஒரு மாதமாக அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் ஆஃபர் விற்பனைகளை நடத்தி வருகிறது. இதில், அனைத்து வகையான எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்கள், ஸ்மார்ட்போன்களுக்கு சூப்பர் டீல்ஸ்கள் விடப்பட்டுள்ளன. நவம்பர் 2ம் தேதியுடன் முடிவடையும் இந்த விற்பனை இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர்கள் மற்றும் லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் பெஸ்ட் டீல்ஸை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பெஸ்ட் லேப்டாப் டீல்கள் :
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிக் கல்லூரி செல்லும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளிலும், ஐடி உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டில் இருந்தும் பணியாற்றிக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு லேப்டாப் சாதனங்களின் தேவை அதிகம் உள்ளது. மற்ற நாட்களில் 43 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் 10வது தலைமுறை 8 ஜிபி ரேம், இன்டெல் கோர் ஐ3 செயலியுடன் கூடிய ஹெச்.பி (HP) 15 லேப்டாப் விழாக்கால தள்ளுபடி விலையாக ரூ.39,490 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10வது தலைமுறை இன்டெல் கோர் ஐ3 சிபியு மற்றும் 4ஜிபி ரேம் கொண்ட டெல் 14 (Dell) லேப்டாப் ரூ.37,000 க்கு பெறலாம். மற்ற நாட்களில் 41,586 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
11வது ஜெனரல் இன்டெல் கோர் ஐ5 சிபியு மற்றும் 8ஜிபி ரேம் கொண்ட ஆர்டிஎக்ஸ் 3050 கிராபிக்ஸ் கொண்ட ஏசர் நைட்ரோ 4 (Acer Nitro) லேப்டாப்பின் விலை ரூ. 67,990. ஆசுஸ் டியுஎஃப் கேமிங் எஃப்15 லேப்டாப் (Asus TUF Gaming F15 laptop) மற்றும் 10வது ஜென் இன்டெல் கோர் ஐ5 சிப்டெல் GTX 1650 Ti கிராபிக்ஸ் விலை ரூ. 58,990 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிறந்த ஸ்மார்ட்போன் டீல்கள் :
விழாக்கால தள்ளுப்படியாக பல்வேறு பிராண்டு ஸ்மார்ட்போன்கள் அதிரடி ஆஃபர்களையும், சலுகைகளையும் வாரி வழங்குகின்றன. 6ஜிபி ரேம் மற்றும் 12ஜிபி சேமிப்பு மற்றும் ஸ்னாப்டிராகன் 870 மூலம் இயக்கப்படும் Xiaomi Mi 11X 5G ஸ்மார்ட்போன் ரூ.33,999 லிருந்து 27,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Also read... ஸ்மார்ட்போன் முதல் டிவி வரை ரூ.5,000 தள்ளுபடி - சியோமியின் தீபாவளி ஆஃபர்கள்!
ஐபோன் 11 அமேசானில் 42,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 888 செயலியுடன் கூடிய iQoo 7 Legend 5G ஸ்மார்ட்போன் 39,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.14,999 -க்கு விற்பனை செய்யப்பட்ட Samsung Galaxy M21 (2021 பதிப்பு) ஸ்மார்ட்போன் அமேசானில் 11,999 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற பெஸ்ட் டீல்கள் :
ஹெட்போன்களை வாங்க விரும்புவராக இருந்தால், Sony WF-1000XM3 பிராண்ட் பெஸ்ட் டீலில் கிடைக்கிறது. மற்ற நாட்களில் 19,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் இந்த ஹெட்போன் 9,990 ரூபாய்க்கு விழாக்காலச் சலுகையாக கிடைக்கிறது. Amazfit GTS 3 கைக்கடிகாரம் இப்போது 13,990 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள் வாட்ச் எஸ்இ 27,900 ரூபாய்க்கு கிடைக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.