ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

டயர் 2 நகரங்களில் இந்த பொருட்களை தான் அதிகம் வாங்குகிறார்கள் - அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை!

டயர் 2 நகரங்களில் இந்த பொருட்களை தான் அதிகம் வாங்குகிறார்கள் - அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை!

அமேசான்

அமேசான்

நகரத்தில் இருப்பவர்கள் உலகின் மிகப்பெரிய சாக்லேட் பிராண்டுகளான காட்பரி, ரோச்சர் பெரேரோ, ஹர்ஷ்லே ஆகியவற்றை அதிகமாக வாங்கும் நபர்களாக இருக்கிறார்கள்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது முதல் எலக்ட்ரானிக்ஸ் உபகரணங்கள், சாதனங்கள் என்று எல்லாமே தற்போது ஆன்லைன் ஷாப்பிங் செய்து வருகிறோம். கடைகளில் கிடைக்காத பொருட்கள் கூட ஆன்லைனில் கொஞ்சம் குறைந்த விலையில் வாங்க முடியும். தற்போது தீபாவளி நெருங்கி வரும் நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை சக்கை போடு போட்டு வருகிறது.

  பொதுவாக, பண்டிகை கால அல்லது விழாக்கால சலுகை விற்பனைகளில் எலெக்ட்ரானிக் சாதனங்கள் கணிசமாக விற்பனையாகும்; ஆனால் சமீபத்தில் இந்த கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2002 அமேசான் விற்பனையில் இரண்டாம் நிலை நகரங்களில் எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்களை விட வேறு சில பொருட்களுக்கு அதிக டிமாண்ட் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதை பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

  ஆன்லைனில் கிடைக்காத பொருள் இருக்கிறதா என்ன? தற்பொழுது காய்கறிகள் பழங்கள் என்று பிரஷ் ஆன சில நாட்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய பொருட்கள் கூட சில மணி நேரங்களில் டெலிவரி செய்யும் அளவுக்கு பலவிதமான ஈகாமர்ஸ் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் வந்துவிட்டன. இதில் வெவ்வேறு நகரங்களில் அல்லது வெளிநாடுகளில் கிடைக்கும் உணவுப் பொருட்களுக்கு கூட ஆன்லைனில் அதிகமான டிமாண்ட் இருக்கிறது. அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் இது கண்கூடாக தெரிகிறது என்று அமேசான் தெரிவித்து உள்ளது.

  டயர் 2 நகரங்கள் என்று கூறப்படும் இரண்டாம் நிலை நகரங்களில் நாட்டின் வெவ்வேறு இடங்களில் கிடைக்கக் கூடிய ரெடி டூ ஈட் உணவுகள், சாக்லேட், இனிப்புகள், பிஸ்கட் மற்றும் சுத்தம் செய்யும் பொருட்கள் ஆகியவை அதிகமாக விற்பனையாகி இருப்பதாக நிறுவனம் கூறியுள்ளது.

  ஒரிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் ரெடிமேட் மீல்ஸ் ஐந்து மடங்கு அதிகம் விற்பனையாகி இருக்கிறது; சாக்லேட்டுகள் இரண்டு மடங்கு அதிகமாக விற்பனையாகி இருக்கிறது; ஆண்களுக்கான அழகு சாதனம் மற்றும் க்ரூமிங் பொருட்கள் நான்கு மடங்கு அதிக விற்பனையாக இருக்கிறது; மற்றும் சுத்தம் செய்யும் பொருட்கள் இரண்டரை மடங்கு அதிகமாக விற்பனையாகி இருக்கிறது என்று அமேசான் தெரிவித்துள்ளது. இந்த அதிக விற்பனை என்பது கடந்த ஆண்டை விற்பனையுடன் ஒப்பிட்டு கூறப்படுகிறது என்பதையும் அமேசான் தெரிவித்து உள்ளது.

  இதைத் தவிர்த்து தின்பண்டங்கள், பிஸ்கட்டுகள் மற்றும் நியூட்ரிஷன் ஃபார் ஆகியவை மூன்று மடங்கு முதல் ஐந்து மடங்கு அதிகமாக விற்பனையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறது.

  நகரத்தில் இருப்பவர்கள் உலகின் மிகப்பெரிய சாக்லேட் பிராண்டுகளான காட்பரி, ரோச்சர் பெரேரோ, ஹர்ஷ்லே ஆகியவற்றை அதிகமாக வாங்கும் நபர்களாக இருக்கிறார்கள். ஆனால் டயர் 2 மற்றும் 3 நகரங்களில் இருப்பவர்களுக்கு அமேசானின் உள்ளூர் கடைகள் நெட்வொர்க்குகள் மிகவும் உதவியாக இருக்கின்றன.

  இதன்மூலம் அமேசானின் ஒரு நாள் டெலிவரி அல்லது அதே நாள் டெலிவரி என்ற ஆப்ஷன் மூலம் லோக்கல் ஸ்டோர்களில் கிடைக்கக்கூடிய வெவ்வேறு விதமான சாக்லேட் மற்றும் தின்பண்டங்களை டயர் டு மற்றும் டயர் நகரங்களில் வசிப்பவர்கள் விரும்பி வாங்குகிறார்கள்.

  பண்டிகை காலங்களில் ஷாப்பிங் என்று வரும் பொழுது 80 சதவிகித வளர்ச்சி டயர் 2 மற்றும் 3ம் நகரங்களில் இருப்பவர்களிடம் இருந்து தான் அதிக ஆர்டர் பெறப்படுகிறது என்பதையும் அமேசான் குறிப்பிட்டுள்ளது.

  அமேசான் இந்தியாவின் கன்ஸ்யூமபிள் பிரிவின் நிர்வாக இயக்குநரான நிஷாந்த் ராமன் “வாடிக்கையாளர்கள் டிமாண்ட் அதிகரிக்க, உள்ளூர் வணிகர்கள் மற்றும் கடைகள் உரிமையாளர்கள் ஆகியவர்களுக்கும் வணிகம் அதிகரிக்கிறது. விற்பனையாளர்களுக்கும், பிராண்டுகளுக்கும், நுகர்வோர்களுக்கும் இடையே ஒரு பாலமாக இந்த அமேசான் பண்டிகைகால விற்பனை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்பதை மகிழ்ச்சியுடன் பெருமையுடன் தெரிவித்திருக்கிறார்.

  Read More: இப்படி ஒரு விஷயத்துக்காக வாட்ஸ் அப்பை பயன்படுத்தும் இந்தியர்கள்! விவரம் இதுதான்!

  அமேசான் வாடிக்கையாளர்களுக்கு பலவித சலுகைகளை வழங்கி வருகிறது. தற்போது வெவ்வேறு வங்கிகளுடன் கூட்டிணைந்து 10% வரை தள்ளுபடி மற்றும் வட்டியில்ளா ஈஎம்ஐ வழியாக பேமெண்ட் போன்ற கொள்வதற்கான விருப்பங்களையும் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Amazon, Amazon Prime, Online shopping