தீபாவளிக்காக மீண்டும் தொடங்குகிறது அமேசான் தள்ளுபடி விற்பனை..!

குறிப்பாக இம்முறை கேமிரா சார்ந்த அத்தனை சாதனங்களுக்கும் நல்ல தள்ளுபடியில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தீபாவளிக்காக மீண்டும் தொடங்குகிறது அமேசான் தள்ளுபடி விற்பனை..!
அமேசான்
  • News18
  • Last Updated: October 10, 2019, 3:58 PM IST
  • Share this:
விழாக்கால விற்பனையாக அமேசானின் ‘சிறப்புக் கொண்டாட்டம்’ தள்ளுபடி விற்பனை வருகிற அக்டோபர் 13-ம் தேதி முதல் தொடங்குகிறது.

அக்டோபர் 13-ம் தேதி முதல் தொடங்கும் தீபாவளி சிறப்பு விற்பனை அக்டோபர் 17-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு அக்டோபர் 12-ம் தேதி நண்பகல் 12 மணி முதலே தொடங்குகிறது. தசரா விற்பனையைப் போலவே தீபாவளி விற்பனையும் ஸ்மார்ட்போன் மற்றும் தொழில்நுட்ப சாதனங்களுக்கு அதிகப்படியான சலுகைகளைத் தருகிறது.

ஐசிஐசிஐ வங்கி க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக 10 சதவிகித தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக இலவச ஸ்கிரீன் ரீப்ளேஸ் சேவை, வட்டியில்லா தவணை முறை மற்றும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களும் வழங்கப்பட உள்ளன.


ஸ்மார்ட்போன்களைப் பொறுத்தவரையில் பிரபலமாக உள்ள சமீபத்திய வரவுகளான ஒன்ப்ளஸ் 7, சாம்சங் கேலக்ஸி M30, ரெட்மி 7 சீரிஸ், ஐபோன் XR ஆகிய போன்களுக்கு சிறப்புத் தள்ளுபடிகள் கொடுக்கப்பட உள்ளன. எலெல்ட்ரானிக் பொருட்களைப் பொறுத்த வரையில் லேப்டாம், ஹெட்போன், கேமிரா ஆகியவற்றுக்கு அதிகத் தள்ளுபடி வழங்கப்பட உள்ளன.

குறிப்பாக இம்முறை கேமிரா சார்ந்த அத்தனை சாதனங்களுக்கும் நல்ல தள்ளுபடியில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: ’பேட்டரி சாம்பியன்’ ஆக ரெட்மி 8 வெளியாகிறது... தீபாவளி சிறப்பு அறிமுகம்!பளிச்சென்று காட்சியளிக்கும் மாமல்லபுரம்!
First published: October 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading