ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் அமேசான் ‘சுதந்திர தின சேல்’- மொபைல் ஃபோன்களுக்கு அதிரடி தள்ளுபடி!

நாளை ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகும் ஹூவே Y9 ப்ரைம் 2019 ஃப்ரீடம் சேலில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Web Desk | news18
Updated: July 31, 2019, 7:00 PM IST
ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் அமேசான் ‘சுதந்திர தின சேல்’- மொபைல் ஃபோன்களுக்கு அதிரடி தள்ளுபடி!
அமேசான் ஃப்ரீடம் சேல்
Web Desk | news18
Updated: July 31, 2019, 7:00 PM IST
ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் அமேசான் ஆன்லைன் விற்பனைத் தளத்தில் ‘ஃப்ரீடம் சேல்’ தொடங்க உள்ளது.

அமேசான் சுதந்திர தின தள்ளுபடி விற்பனையை இம்முறை எஸ்பிஐ வங்கியுடன் இணைந்து வழங்குகிறது. ஆகஸ்ட் 8-ம் தேதி தொடங்கும் இந்த விற்பனைத் திருவிழா ஆகஸ்ட் 11-ம் தேதி உடன் நிறைவடைகிறது. எஸ்பிஐ வங்கியின் க்ரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவிகித உடனடித் தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

அமேசான் ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி நண்பகல் 12 மணி முதலே இந்த விற்பனைத் திருவிழா தொடங்குகிறது. ஸ்மார்ட் ஃபோன்களுக்கு 40 சதவிகிதம் வரையில் இம்முறை ஆஃபர் வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி M40, ஓப்போ K3 மற்றும் ஒன்ப்ளஸ் 7 ஆகிய ஸ்மார்ட்ஃபோன்களுக்கு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் வழங்கப்பட உள்ளது.

‘ஃப்ரீடம் சேல்’ விற்பனையின் போதே ஹூவே Y9 ப்ரைம் 2019 ஸ்மார்ட்ஃபோன் அறிமுகமாகும் எனத் தெரிகிறது. நாளை ஆகஸ்ட் 1-ம் தேதி வெளியாகும் ஹூவே Y9 ப்ரைம் 2019 ஃப்ரீடம் சேலில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பார்க்க: மைக்ரோசாஃப்ட், கூகுள் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளிய அமேசான்..!
First published: July 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...