முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / அமேசான், பிளிப்கார்டில் ஐபோன் 13 மீது கிடைக்கும் "அடேங்கப்பா" ஆபர்கள்!

அமேசான், பிளிப்கார்டில் ஐபோன் 13 மீது கிடைக்கும் "அடேங்கப்பா" ஆபர்கள்!

ஐபோன்

ஐபோன்

பிளிப்கார்டில் வெண்ணிலா ஐபோன் 13 மாடலானது அதன் பட்டியலிடப்பட்ட விலையான ரூ.74,900

எப்படியாவது ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு லேட்டஸ்ட் ஐபோன் மாடலை வாங்கி விட வேண்டும் என்கிற எண்ணம் / ஆசை கிட்டத்தட்ட அனைவருக்குமே இருக்கும். ஆனாலும் கூட பெரும்பாலான மக்களால் வாங்க முடியாத விலையில்தான் லேட்டஸ்ட் ஐபோன் மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே தான் எந்தவொரு ஸ்மார்ட்போனின் மீதான ஆபரை காட்டிலும் ஆப்பிள் ஐபோன் மாடல்கள் மீதான சலுகைகள் மக்களின் மனதை பெரிதும் ஈர்க்கின்றன. இந்த இடத்தில் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு தான் நாம் நன்றி கூற வேண்டும்.

இந்தியாவில், ஐபோன் 13 சீரிஸின் கீழ் வாங்க கிடைக்கும் ஐபோன் 13 மினி மாடலின் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.69,900 முதல் வாங்க கிடைக்கிறது. இதே சீரீஸின் ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 13 ப்ரோ மேக்ஸ் மாடல்கள் "உள்ளிருக்கும்" ஸ்டோரேஜை பொறுத்து 'டாப் கியர்' போட்டு விண்ணோக்கி செல்லும் விலை நிர்ணயங்களை கொண்டுள்ளன. ஒருவேளை நீங்கள் "ஓரளவிலான" சலுகை விலையில் ஒரு லேட்டஸ்ட் ஐபோன் மாடலை வாங்க திட்டமிட்டு இருந்தால், நீங்கள் கவனிக்க வேண்டிய சில அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆபர்களின் விவரங்கள் இங்கே!

அமேசானில் ஐபோன் 13 மாடல் மீது அதிகபட்சமாக ரூ.6,000 தள்ளுபடி கிடைக்கிறது. அதாவது 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆனது ரூ.73,990 க்கு வாங்க கிடைக்கும். இந்த தள்ளுபடி ஐபோன் 13 மாடலின் அனைத்து வண்ண விருப்பங்களிலும் அணுக கிடைக்கிறது. தவிர, பழைய ஸ்மார்ட்போனிற்கு ரூ.14,900 வரை எக்ஸ்சேன்ஜ் சலுகையும் கிடைக்கிறது, ஆக ஒரு ஐபோன் 13 மாடலின் விலையை நீங்கள் ரூ.59,090 ஆக குறைக்கலாம்.

ஐபோன் 13 மினி, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட அனைத்து ஐபோன் 13 சீரிஸ் மாடல்களுக்கு ரூ.14,900 என்கிற எக்ஸ்சேன்ஜ் ஆபருக்கு தகுதியுடையவையாகும். இதன் ஐபோன் 13 மினியின் விலையை ரூ.55,000 ஆகவும், ஐபோன் 13 ப்ரோவின் விலையை ரூ.1,05,000 ஆகவும், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸின் விலையை ரூ.1,15,000 ஆகவும் நீங்கள் குறைக்கலாம்.

பிளிப்கார்டில் வெண்ணிலா ஐபோன் 13 மாடலானது அதன் பட்டியலிடப்பட்ட விலையான ரூ.74,900-ஐ விட ரூ.5,000 குறைவாக விற்பனை செய்யப்படுகிறது. மறுபுறம் மினி மாடலானது கிட்டத்தட்ட ரூ.10,000 தள்ளுபடியில் வாங்க கிடைக்கிறது, பேஸிக் 128ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.59,999 முதல் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் ப்ரோ, ப்ரோ மேக்ஸ் மாடல்களுக்கு பிளிப்கார்டில் சலுகைகள் எதுவும் இல்லை.

Disney plus hotstar சேவையை இலவசமாக வழங்கும் ஏர்டெல் திட்டங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!

பிளிப்கார்டின் எக்ஸ்சேன்ஜ் ஆபரை பொறுத்தவரை, ரூ.13,000 வரை தள்ளுபடி கிடைக்கும். ஒருவேளை நீங்கள் ரூ.13,000 என்கிற முழு எக்ஸ்சேஞ்ச் வேல்யூவையும் பெற்றால் ஐபோன் 13 மாடலை நீங்கள் ரூ.61,900 க்கு வாங்கலாம் மற்றும் ஐபோன் 13 மினி மாடலை

ரூ.46,999 க்கு சொந்தமாக்கி கொள்ளலாம். இதே ஆபர் ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் மாடகளுக்கும் கிடைக்கிறது.

First published:

Tags: Amazon, Flipkart, IPhone