பகுதி நேரப் பணி வேண்டுமா..?- அமேசான் ஃப்ளக்ஸ் வழங்கும் ஒரு வாய்ப்பு!

தற்போதைய சூழலில் ஆண்ட்ராய்டு மொபைல் ஃபோன்களில் மட்டுமே அமேசான் ஃப்ளக்ஸ் உள்ளது.

Web Desk | news18
Updated: June 17, 2019, 11:50 AM IST
பகுதி நேரப் பணி வேண்டுமா..?- அமேசான் ஃப்ளக்ஸ் வழங்கும் ஒரு வாய்ப்பு!
அமேசான். (மாதிரிப்படம்- Reuters)
Web Desk | news18
Updated: June 17, 2019, 11:50 AM IST
அமேசான் நிறுவனம் இந்தியாவில் பகுதி நேர வேலைவாய்ப்பை அறிமுகம் செய்கிறது. இதன் மூலம் இளைஞர்கள் தங்களுக்குப் பிடித்த நேரத்தில் மணிக்கு 140 ரூபாய் ஊதியத்தில் பணியாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அமேசான் ஃப்ளக்ஸ் மூலம் இளைஞர்கள் அமேசான் பொருட்களை டெலிவரி செய்யும் பணியில் ஈடுபடலாம். அமேசான் ஃப்ளக்ஸ் ஆப் மூலம் தங்களைப் பகுதி நேர டெலிவரி பணியாளராகப் பதிவு செய்துகொள்ள முடியும். ஒருயொரு பைக் மட்டுமே அவசியம்.

பகுதி நேரமாகப் பணியாற்ற விரும்புபவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப பணி நேரத்தை நிர்ணயித்துக்கொள்ளலாம். ஒரு மணி நேரத்துக்கு 140 ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனம் மட்டுமல்லாது மூன்று சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்தைப் பயன்படுத்த விரும்பினாலும் அந்த ஆப் மூலம் குறிப்பிடலாம்.


முதற்கட்டமாக இந்தியாவில் பெங்களூரு, மும்பை மற்றும் டெல்லி ஆகிய நகராங்களில் மட்டுமே அமேசான் ஃப்ளக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இதர முக்கிய நகரங்களிலும் இந்த வாய்ப்பு விரிவுபடுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் ஆண்ட்ராய்டு மொபைல் ஃபோன்களில் மட்டுமே அமேசான் ஃப்ளக்ஸ் உள்ளது. இப்புதிய திட்டம் மூலம் லட்சக்கணக்கானவர்களுக்கு தங்கள் ஓய்வு நேரத்தில் சம்பாதிக்கும் வாய்ப்பை வழங்குவதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: அமேசான் நிறுவனரை எதிர்த்த அமெரிக்கவாழ் இந்தியப் பெண் கைது!

Loading...

கீரை விவசாயத்தில் நிரந்தர வருமானம் ஈட்டும் பெண் விவசாயி
First published: June 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...