• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • அமேசானின் Fab Phones Fest: சலுகை விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்

அமேசானின் Fab Phones Fest: சலுகை விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்

அமேசானின்  Fab Phones Fest

அமேசானின் Fab Phones Fest

SBI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் போது ஏற்கனவே ஆஃபரில் உள்ள சில போன்களுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கும்.

  • Share this:
கடந்த சில மாதங்களாக நாட்டில் பண்டிகை சீசன் தொடர்ந்து வருவதால் நாட்டில் இருக்கும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து பல சலுகை விற்பனைகளை நடத்தி வருகின்றன. முக்கிய நிறுவனமான அமேசான் தற்போது Fab Phones Fest என்ற புதிய விற்பனை நிகழ்வை நடத்தி வருகிறது.

இந்த Fab Phones Fest-ல் சில ஸ்மார்ட் போன்கள் மீது தற்காலிக விலை குறைப்புகள் உள்ளிட்ட பல சலுகைகளை அமேசான் வழங்குகிறது. இந்த சேல் ஈவன்ட்டின் போது Xiaomi, Samsung, OnePlus மற்றும் பல பிராண்டு ஸ்மார்ட் போன்களில் சுமார் 40% வரை தள்ளுபடி, எக்சேஞ் ஆஃபர் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐ உள்ளிட்ட பல சலுகைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும் SBI டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வாங்கும் போது ஏற்கனவே ஆஃபரில் உள்ள சில போன்களுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கும். தற்போது லைவில் உள்ள Amazon-ன் Fab Phones Fest வரும் நவம்பர் 28 வரை நடைபெறும். இப்போது Fab Phones Fest-ல் சலுகை விலையில் கிடைக்கும் சில ஸ்மார்ட் போன்களை பற்றி பார்க்கலாம்.

Xiaomi 11 Lite NE 5G:

இந்த போனின் பேஸ் மாடலான 6GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.26,999 என்ற விலையில் தொடங்குகிறது. ஆனால் வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் SBI சலுகையுடன் விலையை ரூ.19,999 வரை குறைக்கலாம். 6.55-இன்ச் ஃபுல்-எச்டி+ ரெசல்யூஷன், 64-மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி ஆகியவற்றை இந்த Xiaomi 11 Lite NE 5G ஸ்மார்ட் போன் கொண்டுள்ளது.

Samsung Galaxy S20 FE:

இந்த போனின் 8GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.39,990. தற்போதைய Fab Phones Fest-ல் இதை SBI சலுகையுடன் ரூ.38,740-க்கு வாங்கலாம். குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC ப்ராசஸர் மூலம் இயக்கப்படும் இந்த போன், 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.5-இன்ச் ஸ்கிரீன், பின்புறத்தில் டிரிபிள் 12-மெகாபிக்சல் கேமராக்கள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

OnePlus 9 Pro:

Fab Phones Fest-ல் அமேசான் கூப்பன் மற்றும் சிட்டி யூனியன் பேங்க் டீலுடன் இந்த ஃபோன் ரூ.54,999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த ஒன்பிளஸ் 9 ப்ரோ போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மற்றும் 120Hz உடன் 6.7-இன்ச் Fluid AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. பின்புறத்தில் Hasselblad-டியூன் செய்யப்பட்ட டிரிபிள் கேமராக்களும் கொடுக்கப்பட்டு உள்ளன.

iQoo Z5 5G:

இந்த போனின் 8GB ரேம் + 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியன்ட் ரூ.20,615 என்ற சலுகை விலையில் கிடைக்கிறது. . 120 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன், 64 மெகாபிக்சல் டிரிபிள் கேமராக்கள் மற்றும் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.

iQoo Z3 5G:

இந்த மாடல் போன் கூப்பன் மற்றும் வங்கி சலுகைகள் உட்பட ரூ.17,865 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, 55W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 64 மெகாபிக்சல் டிரிபிள் கேமராக்களுடன் வருகிறது.

Also read... அமேசான் பிரைம் மெம்பர்ஷிப் கட்டணம் 5௦ சதவிகிதம் அதிகரிப்பு!

Xiaomi Mi 11X 5G:

இந்த போன் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மற்றும் SBI சலுகையுடன் ரூ.21,749 என்ற சலுகை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது 6.67-இன்ச் ஃபுல் -HD+ திரை மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 SoC உடன் வருகிறது. பின்புறத்தில் மூன்று கேமராக்கள் மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் 4,520mAh பேட்டரி உள்ளது.

Samsung Galaxy M12:

SBI சலுகையோடு இந்த போன் ரூ.10,349 என்ற பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த ஃபோன் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே மற்றும் 6,000mAh பேட்டரியுடன் வருகிறது. நீங்கள் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமராவை கொண்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: