HOME»NEWS»TECHNOLOGY»amazon fab phones fest sale now live in india best deals on iphone 11 pro oneplus 8 pro and more 1 vin ghta

அமேசான் வழங்கும் 'ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் சேல்' தொடங்கியது: iPhone 11 pro, Oneplus 8 pro ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த சலுகைகள்!

அமேசான் தனது ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனையை இந்தியாவிலும் தொடங்கியுள்ளது

அமேசான் வழங்கும் 'ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் சேல்' தொடங்கியது:  iPhone 11 pro, Oneplus 8 pro ஸ்மார்ட்போன்களுக்கு சிறந்த சலுகைகள்!
அமேசான் தனது ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனையை இந்தியாவிலும் தொடங்கியுள்ளது
  • News18
  • Last Updated :
  • Share this:

அமேசான் தனது ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனையை இந்தியாவிலும் தொடங்கியுள்ளது. ஈ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்த அட்டகாசமான விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் உபகரணங்களுக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்கி வருகிறது. இந்தியாவில் மொபைல் போன்களுக்கான பெஸ்ட் சேல் விற்பனையானது நேற்று(பிப்.22) ஆரம்பமானது. மேலும், இந்த விற்பனை நிகழ்வு பிப்ரவரி 25ம் தேதி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்காலிக விலை குறைப்பு ஆஃபருடன் கூடுதலாக, பரிமாற்ற சலுகைகள், வட்டியில்லா தவணை (NoCost EMI) மற்றும் கோட்டக் கிரெடிட் கார்டுடன் 10 சதவீத உடனடி தள்ளுபடி போன்ற பிற ஒப்பந்தங்களையும் வழங்குகிறது. இந்த விற்பனையில் ஆப்பிள், சாம்சங், ஒன்பிளஸ், ஷியோமி மற்றும் பல பிராண்டுகளின் ஸ்மார்ட்போன்கள் அசத்தலான ஒப்பந்தத்துடன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றன. பல அற்புதமான அம்சங்களுடன் புதிய பிரீமியம் ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், அமேசான் ஃபேப் போனஸ் ஃபெஸ்ட் சேல் ஆபரை தவறவிடாதீர்கள். மேலும் நீங்கள் விரும்பும் பிராண்ட் ஒன் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் சலுகைகளை பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

1. ஆப்பிள் ஐபோன் 11 புரோ: (Apple iPhone 11 Pro)



அமேசான் ஃபேப் போன் ஃபெஸ்ட் விற்பனையில் உங்கள் அபிமான ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ பெரிய தள்ளுபடிகளுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் 64 ஜிபி வேரியண்ட் தற்போது ரூ.82,900க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அசல் விலை ரூ.99,900 ஆகும். இதுதவிர, பரிவர்த்தனை சலுகை போன்ற ஒப்பந்தங்கள் மற்றும் கோடக் கிரெடிட் கார்டுடன் 10 சதவீதம் வரை தள்ளுபடி என விலையை வாடிக்கையாளர்கள் மேலும் குறைத்துக் கொள்ளலாம். ஆப்பிள் ஐபோன் 11 ப்ரோ தொலைபேசி ஏ 13 பயோனிக் சிப், டிரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் 12 மெகாபிக்சல் ட்ரூடெப்த் பிராண்ட் கேமராவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஃபேஸ் ஐடி அதெண்டிகேசனை ஆதரிக்கிறது.

2. ஒன்பிளஸ் 8 ப்ரோ (OnePlus 8 Pro)

முதன்மை ஒன்பிளஸ் 8 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அமேசான் ரூ.6,500 வரை தள்ளுபடி வழங்குகிறது. இதன் அடிப்படை 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் சேலின் போது ரூ .47,999-க்கு குறைவாகக் கிடைக்கும். இது 120 ஹெர்ட்ஸ் ரீபிரஷ் ரேட்டுடன் 6.78 அங்குல முழு எச்டி + டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. தொலைபேசியில் உள்ள மற்ற அம்சங்களில் 48 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC மற்றும் 4,510mAh பேட்டரி ஆகியவை அடங்கும். அமேசான் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் ரூ.3,000 தள்ளுபடி அல்லது அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு வழியாக 5 சதவீதம் கேஷ்பேக்கை பெற முடியும்.

3. சியோமி எம்ஐ 10டி 5 ஜி (Xiaomi Mi 10T 5G)

பெஸ்ட் விற்பனை நிகழ்வின் போது அமேசானில் ஷியோமி எம்ஐ 10 டி 5 ஜி ஸ்மார்ட்போன் ரூ.32,999க்கு விற்பனை செய்யப்படும். இது ஒரு பெரிய 6.67 இன்ச் முழு-எச்டி + டிஸ்ப்ளேவுடன் வருகிறது மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC=ல் இயங்குகிறது. தொலைபேசியில் மற்ற குறிப்பிடத்தக்க அம்சங்களாக 5,000 எம்ஏஎச் பேட்டரி, மூன்று பின்புற கேமரா அமைப்பு கொண்ட 64 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர் மற்றும் 20 மெகாபிக்சல் பிராண்ட் கேமரா போன்றவை இருக்கின்றன. கூடுதல் சலுகைகளை பொறுத்தவரை, வாடிக்கையாளர்கள் ரூ.16,400 வரை மதிப்புள்ள பரிவர்த்தனை சலுகை, கோடக் வங்கி கிரெடிட் கார்டுகளுடன் 10 சதவீத உடனடி தள்ளுபடி, மற்றும் நோகாஸ்ட் இ.எம்.ஐ போன்ற விற்பனை ஒப்பந்தங்களையும் பெறலாம்.

Also read... வாட்ஸ் ஆப் call- ஐ ரெக்கார்டு செய்ய முடியமா? உங்கள் சந்தேகத்திற்கு இதோ பதில்!

4.ஓப்போ ரெனோ 5 புரோ 5 ஜி (Oppo Reno 5 Pro 5G)

ஃபேப் ஃபோன்ஸ் ஃபெஸ்ட்டின் போது ஒப்போ ரெனோ 5 புரோ 5 ஜி ஸ்மார்ட்போனை ரூ.35,990க்கு வாடிக்கையாளர்கள் பெறலாம். இதன் அசல் விலை ரூ.38,990 ஆகும். ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5 ஜி 6.55 இன்ச் ஃபுல் எச்டி + டிஸ்ப்ளே, 64 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டருடன் குவாட் ரியர் கேமராக்கள், 32 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் ஆண்ட்ராய்டு வி 11.0 அடிப்படையிலான கலர் ஓஎஸ் 11.1 போன்ற அம்சங்களுடன் வருகிறது.

5. விவோ வி 20 ப்ரோ (Vivo V20 Pro)

செப்டம்பர் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ வி 20 ப்ரோ 6.44 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளே மற்றும் டூயல் பிராண்ட் கேமராக்களுடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC மூலம் இயங்குகிறது. மேலும் மூன்று பின்புற கேமராக்கள் ஒரு தனித்துவமான ரெக்ட்டாங்குளர் தொகுதியில் வைக்கப்பட்டுள்ளன. சாதனத்தின் பிற குறிப்பிடத்தக்க அம்சங்கள் 4,000 எம்ஏஎச், 5 ஜி மற்றும் 8 ஜிபி ரேம் ஆகியவை அடங்கும். அமேசான் விற்பனையின் போது, இந்தியாவில் விவோ வி 20 ப்ரோவின் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ரூ.29,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் வாடிக்கையாளர்கள் அதன் விலையை பரிமாற்ற சலுகை அல்லது கோட்டக் வங்கி கிரெடிட் கார்டுகளுடன் 10 சதவீத உடனடி தள்ளுபடி போன்ற விற்பனை ஒப்பந்தங்கள் மூலம் சற்று குறைக்க முடியும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: