இதுவரை இல்லாத அளவுக்கு தள்ளுபடி... தொடங்குகிறது அமேசான் ஃபோன் திருவிழா..!

அதிகமான தள்ளுபடி விலையில் இம்முறை ஒன்ப்ளஸ் 6T ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் இருக்கும் என அமேசான் அறிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: April 8, 2019, 8:05 PM IST
இதுவரை இல்லாத அளவுக்கு தள்ளுபடி... தொடங்குகிறது அமேசான் ஃபோன் திருவிழா..!
அமேசான்
Web Desk | news18
Updated: April 8, 2019, 8:05 PM IST
அமேசான் இந்தியா வழங்கும் ‘Fab Phones Fest’ விற்பனை வருகிற ஏப்ரல் 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

சிறப்புத் தள்ளுபடிகள் மற்றும் மிகச்சிறந்த எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களை அமேசான் இந்தியாவின் இந்த ஃபோன் திருவிழா வழங்கும் எனக் கூறப்படுகிறது.

இதுவரையில் வழங்கப்படாத அளவில் மிகவும் அதிகமான தள்ளுபடி விலையில் இம்முறை ஒன்ப்ளஸ் 6T ஸ்மார்ட்ஃபோன் விற்பனையில் இருக்கும் என அமேசான் அறிவித்துள்ளது.


தற்போது சந்தை விலையில் ஒன்ப்ளஸ் 6T ஸ்மார்ட்ஃபோன் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஃபோன் 37,999 ரூபாய்க்கும் 8ஜிபி ரேம், 12 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஃபோன் 41,999 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதுவே 256 ஜிபி ஸ்டோரேஜ் என்றா 45,999 ரூபாய். சமீபத்தில்தான் ஒன்ப்ளஸ் 6T மெக்லெரன் லிமிடெட் எடிஷன் 10ஜிபி ரேம் கொண்டு 50,999 ரூபாய்க்கு வெளியானது.

மேலும், அமேசானில் இம்முறை ஆப்பிள் ஃபோன்களுக்கும் சிறந்த ஆஃபர் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. விலை குறித்த அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்றாலும் வட்டியில்லா தவணை முறையில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

மொபைல்களுக்கு மட்டுமல்லாது ஃபோன் கேஸ், ஹெட்ஃபோன்கள், சார்ஜர்கள், பவர் பேங்க் ஆகியவற்றுக்கும் மிகச்சிறந்த ஆஃபர்கள் வழங்கப்பட உள்ளது.

மேலும் பார்க்க: ஐ.பி.எல் வரலாற்றில் மோசமான சாதனை படைத்த பெங்களூரு அணி!

தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: April 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...