வீட்டுக்கு வெளியிலும் Alexa உங்களுடனே பயணிப்பாள்... Amazon Echo Auto அறிமுகம்..!

ப்ளுடூத் மூலமாக கனெக்ட் செய்துகொள்ளலாம் அல்லது உங்களது போனில் உள்ள அலெக்ஸா ஆப் மூலமாகவும் நீங்கள் கனெக்ட் செய்துகொள்ளலாம்.

வீட்டுக்கு வெளியிலும் Alexa உங்களுடனே பயணிப்பாள்... Amazon Echo Auto அறிமுகம்..!
அமேசான் எக்கோ ஆட்டோ
  • News18
  • Last Updated: January 24, 2020, 6:48 PM IST
  • Share this:
இன்றைய நவீன ஸ்மார்ட் உலகில் அமேசான் அலெக்ஸா, எக்கோ போன்ற ஸ்பீக்கர்கள் துணையுடன் பழகியவர்களுக்கு அவை வீட்டைத் தாண்டியும் நம்முடன் உதவிக்குப் பயணம் ஆகாதா? என்ற ஏக்கத்தைப் போக்கும் வகையில் புதிதாக அமேசான் எக்கோ ஆட்டோ அறிமுகம் ஆகியுள்ளது.

என்னதான், வாகனங்களில் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஆட்டோ ப்ளே இருந்தாலும் வாய்ஸ் கன்ட்ரோல் மூலம் இயக்கும் வசதி இன்னும் இந்தியாவில் பெரும்பான்மையாக அப்டேட் ஆகவில்லை. இந்தக் குறையைப் போக்கும் வகையில் அமேசான் எக்கோ ஆட்டோ இருக்கும். இந்தியாவில் இதனது விலை 4,999 ரூபாய்.

உங்கள் காரில் பில்ட்-இன் ஆடியோ சிஸ்டம் அல்லது இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இருந்தால் ‘எக்கோ ஆட்டோ’ பயன்படுத்துவது மிகவும் எளிது. இதை உங்களது ஸ்மார்ட்போனின் ப்ளுடூத் மூலமாக கனெக்ட் செய்துகொள்ளலாம். அல்லது உங்களது போனில் உள்ள அலெக்ஸா ஆப் மூலமாகவும் நீங்கள் கனெக்ட் செய்துகொள்ளலாம்.


வாகனம் இயக்குவதைவிடுத்து இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஸ்கிரீனில் தேவையானதை இயக்குவதற்குப் பதிலாக எக்கோ ஆட்டோ-வின் வாய்ஸ் கன்ட்ரோல் அம்சம் மூலம் உங்கள் வேலையை எளிதாக்கலாம். அமேசான் மியூசிக், ஆப்பிள் மியூசிக் மற்றும் ஜியோ சாவன் இணைப்பு இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: சாம்சங் ’தயிர் மேஸ்ட்ரோ’ ஃப்ரிட்ஜ்... தயிர் உறைய வைக்கும் உலகின் முதல் ஃப்ரிட்ஜ்..!
First published: January 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading