ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

அமேசான் கிறிஸ்துமஸ் விற்பனை 2020 தொடங்கியது: ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்களுக்கு ஆஃபர்

அமேசான் கிறிஸ்துமஸ் விற்பனை 2020 தொடங்கியது: ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்களுக்கு ஆஃபர்

கோப்புப் படம்

கோப்புப் படம்

பண்டிகை விற்பனையுடன் அமேசான் மீண்டும் வந்துள்ளது. இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் கிறிஸ்மஸ் விற்பனையை (Christmas sale) இப்போது தொடங்கியுள்ளது.

  • News18
  • 3 minute read
  • Last Updated :

உலகின் மிகப் பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் (Amazon) வளர்ச்சி இந்தியாவிலும் அமோகமாக உள்ளது. பிளிப்கார்ட், ஈபே என அனைத்து இந்திய முன்னணி நிறுவங்களையும் பின்னுக்குத் தள்ளி இப்போது அமேசான் வெற்றி நடை போட்டு வருகிறது. அமேசானின் இந்த மிகப் பெரிய வளர்ச்சிக்கு முக்கியக் காரணம் எளிதான அணுகுமுறை, எக்கச்சக்க பிராண்டுகள் மற்றும் சிறந்த முறையில் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்துவது சரியான அல்லது முன்கூட்டிய டெலிவரியே ஆகும்.  

மீண்டும் அமேசான் பண்டிகை விற்பனையுடன் வந்துள்ளது. இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் கிறிஸ்மஸ் விற்பனையை (Christmas sale) இப்போது தொடங்கியுள்ளது. இது ஏற்கனவே அமேசான் இந்தியாவின் (Amazon India) இணையதளத்திலும் உள்ளது. இதில் ஸ்மார்ட்போன்களுக்கு 40 சதவீதம் தள்ளுபடியும், லேப்டாப்களில் 30 சதவீதம் தள்ளுபடியும் வழங்குவதாக அமேசான் கூறுகிறது. ஆனால், பழைய விலைகளுடன் தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளதால், பெரும்பாலான சாதனங்களில் அமேசான் தள்ளுபடியை வழங்கவில்லை என்று தெரிகிறது. 

ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள் மற்றும் பலவற்றில் கிடைக்கும் தற்போதைய டீல்ஸ்களைப் பார்ப்போம். சாம்சங் M51 (Samsung M51) ரூ. 24.999 இருந்த நிலைக்கு மாறாக, ரூ 22.999 விலையில் கிடைக்கிறது. இது ரூ. 10,650 வரை பரிமாற்ற தள்ளுபடி சலுகையுடன் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மொபைலில் 7,000 எம்ஏஎச் பேட்டரி, 64 எம்பி பின்புற முதன்மை கேமரா, 6.7 அங்குல எஃப்எச்.டி + சூப்பர் அமோலேட் இன்பினிட்டி-ஓ டிஸ்ப்ளே (6.7-inch FHD+ Super AMOLED Infinity-O display) மற்றும் பல உள்ளன. 

சியோமி ரெட்மி நோட் 9 புரோ (Xiaomi Redmi Note 9 Pro) 4GB ரேம் + 64GB (4GB RAM + 64GB) சேமிப்பு மாடலான இது ரூ. 13.999, பட்டியலிடப்பட்டுள்ளது. சாதனம் இன்னும் அதே பழைய விலையில் கிடைக்கக்கூடும், அமேசான் பழைய போனின் பரிமாற்றத்தில் குறைந்தபட்சம் ரூ. 11,650 வரை தள்ளுபடி அளிக்கிறது. எனவே, உங்கள் தற்போதைய சாதனம் சரியாக வேலை செய்யவில்லை என்றாலோ மிகவும் பழையதாக இருந்தாலோ நீங்கள் பரிமாற்ற சலுகையைப் பெறலாம்.  OnePlus 8T ஐ வாங்க திட்ட மிட்டிருந்தால் சாதனத்தை ரூ. 42.999, என்ற விலைக்கு பெறலாம். முன்பிருந்ததை விட இது ஒரு நல்ல விலையாகும். 

அமேசான் இந்த போனில் எந்த தள்ளுபடியையும் வழங்கவில்லை என்றாலும், இது HDFC வங்கி கிரெடிட் கார்டு, கிரெடிட் EMI மற்றும் டெபிட் EMI பரிவர்த்தனைகளுக்கு (HDFC Bank Credit Card, Credit EMI and Debit EMI transactions) ரூ .2,000 உடனடி தள்ளுபடியை அளிக்கிறது. எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் கார்டில் (HDFC bank debit card) வெறும் ரூ. 1,000 உடனடி தள்ளுபடி இதில் உள்ளது. மேலும் நீங்கள் பரிமாற்றத்தில் ரூ .10,650 வரை தள்ளுபடியை பெறுவீர்கள். ஒன்பிளஸ் நோர்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு வேரியன்ட் (8GB RAM + 128GB storage variant of OnePlus Nord) ரூ. 27,999 க்கு கிடைக்கிறது. 

இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் கார்டு, கிரெடிட் இ.எம்.ஐ மற்றும் டெபிட் இ.எம்.ஐ பரிவர்த்தனைகளுக்கு (HDFC Bank credit card, credit EMI and debit EMI transactions) ரூ. 1000 தள்ளுபடியை அளிக்கிறது. பரிமாற்றத்தில் ரூ.10,650 என்ற தள்ளுபடியும் உள்ளது. ரெட்மி 9 பிரைம் (Redmi 9 Prime) ரூ. 9,999 க்கு விற்கப்படுகிறது, இது 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கானது. லேப்டாப்களைப் பொறுத்தவரை, 15.6 இன்ச் ஹெச்பி பெவிலியன் கேமிங் (டி.கே .0268 டிஎக்ஸ்) லேப்டாப் (HP Pavilion gaming (DK0268TX) laptop) ரூ. 63,990 க்கு விற்கப்படுகிறது. அதே விலைக்கு, நீங்கள் கோர் ஐ 5 செயலி, 8 ஜிபி + 512 ஜிபி எஸ்எஸ்டி (Core i5 processor, 8GB + 512GB SSD), விண்டோஸ் 10 ஹோம் மற்றும் 4 ஜிபி என்விடியா ஜியிபோர்ஸ் ஜிடிஎக்ஸ் 1650 கிராபிக்ஸ் கார்டைப் (Windows 10 Home and 4GB NVIDIA GeForce GTX 1650 graphics card) பெறுவீர்கள்.

Also read... இன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தும் விராட்- அனுஷ்கா ஜோடி...!

டெல் 15.6 அங்குல 120Hz FHD காட்சி உடன் ஜி 3 3500 கேமிங் லேப்டாப்பை (Dell G3 3500 gaming laptop) நீங்கள் ரூ. 72.990 க்கு பெறலாம். இந்த விலை 8 ஜிபி ரேம் + 1 டிபி எஸ்.எஸ்.டி, 10 வது ஜெனரல் ஐ 5 செயலி மற்றும் விண்டோஸ் 10 (8GB RAM + 1TB SSD, 10th Gen i5 processor, and Windows 10) ஆகியவற்றுக்கானது. நீங்கள் ஒரு தனித்துவமான என்விடியா ஜி.டி.எக்ஸ் 1650 4 ஜிபி கிராபிக்ஸ் கார்டையும் (NVIDIA GTX 1650 4GB graphics card) பெறுவீர்கள். 2 இன் 1 ஹெச்பி பெவிலியன் x360 லேப்டாப்பின் (2-in-1 HP Pavilion x360 laptop) விலை ரூ. 74,990 கிடைக்கிறது. தொடுதிரை சாதனம் எஃப்.எச்.டி 14 அங்குல திரை, 10-ஜென் கோர் ஐ 7 செயலி, 8 ஜிபி + 512 ஜிபி எஸ்எஸ்டி, விண்டோஸ் 10 ஹோம் மற்றும் எம்எஸ் ஆபிஸுடன் (FHD 14-inch screen, 10th-gen Core i7 processor, 8GB + 512GB SSD, Windows 10 Home and MS Office) வருகிறது. 

இந்த எல்லா லேப்டாப்களிலும் அமேசான் பரிமாற்ற சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த நேரத்தில் எந்தவொரு வங்கி சலுகைகளும் தளத்தில் பட்டியலிடப்படவில்லை. மேற்சொன்ன தயாரிப்புகளில் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை வாங்குவதற்கு பணத்தை முன்னரே செலுத்தியும் பெறலாம் அல்லது EMI போன்ற இதர வசதிகளையும் நீங்கள் சரி பார்த்து பொருட்களை வாங்கி கொள்வது சிறந்தது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Amazon