15 ஆயிரம் ஊழியர்கள்....9.5 ஏக்கர் அலுவலகம் - உலகின் மிகப்பெரும் வளாகத்துடன் இந்திய அமேசான்!

தற்போது 4 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள அமேசான் வளாகம் அடுத்த ஆண்டிலேயே 5,80,000 சதுர அடியில் விரிவுபடுத்தப்பட உள்ளது.

Web Desk | news18
Updated: September 11, 2019, 4:08 PM IST
15 ஆயிரம் ஊழியர்கள்....9.5 ஏக்கர் அலுவலகம் - உலகின் மிகப்பெரும் வளாகத்துடன் இந்திய அமேசான்!
ஹைதராபாத் அமேசான்
Web Desk | news18
Updated: September 11, 2019, 4:08 PM IST
உலகின் மிகப்பெரிய வளாகம் கொண்ட நிறுவனமாக இந்திய அமேசான் அங்கீகாரம் பெற்றுள்ளது.

அமேசானின் இந்திய கிளை நிறுவனம்தான் உலகின் மிகப்பெரும் அலுவலக வளாகம் ஆகும். ஹைதராபாத் நகரில் சுமார் 9.5 ஏக்கர் பரப்பளவில் இந்நிறுவனம் அமைந்துள்ளது. இந்தியாவில் அமேசானுக்காக மட்டும் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை 62 ஆயிரம் ஆகும். இதில் ஹைதராபாத் அலுவலகத்தில் மட்டும் 15 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள்.

வளாக பரப்பளவைப் பொறுத்தவரையில் மிகப்பெரிய நிறுவன வளாகம் என்ற பெருமையை இந்த ஹைதராபாத் அமேசான் வளாகம் பெற்றுள்ளது. அமேசான் அலுவலகத்தை தெலங்கானா உள்துறை அமைச்சர் முகமது அலி, அமேசான் துணைத் தலைவர் ஜான் ஸ்காட்லெர் மற்றும் அமேசான் இந்தியாவின் துணைத் தலைவர் அமித் அகர்வால் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.


இந்த வளாகத்தை கட்ட மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளது. பிராத்தனைக் கூடங்கள், தாய்மாருக்கான பிரத்யேக அறை, தியான அறை, ஓய்வு மற்றும் குளியலைறைகள், ஹெலிபேட், மிகப்பெரும் கஃபேடேரியா, யோகா முதல் ஜூம்பா வரையிலான வகுப்புகள், ஜிம் என அனைத்து வசதிகளும் இந்த அலுவலகத்தில் உள்ளன.

தற்போது 4 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள அமேசான் வளாகம் அடுத்த ஆண்டிலேயே 5,80,000 சதுர அடியில் விரிவுபடுத்தப்பட உள்ளது.

மேலும் பார்க்க: அமேசான் விழாக்கால தள்ளுபடி... ஸ்மார்ட் எலெக்ட்ரானிக் பொருட்களுக்கு அதிரடி ஆஃபர்!

Loading...

சமூக வலைத்தளங்களை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி?
First published: September 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...