HOME»NEWS»TECHNOLOGY»amazon app quiz january 21 2021 get answers to these questions to win philips induction cooktop for free vin ghta

"அமேசானின் டெய்லி க்விஸ்" ஜன.21ம் தேதிக்கான கேள்வி பதில்கள் : வெற்றியாளருக்கு பிலிப்ஸ் இண்டக்சன் குக்டாப் பிரீ!

"அமேசானின் டெய்லி க்விஸ்" ஜன.21ம் தேதிக்கான கேள்வி பதில்கள் : வெற்றியாளருக்கு பிலிப்ஸ் இண்டக்சன் குக்டாப் பிரீ!
  • News18
  • Last Updated :
  • Share this:

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் இ-காமர்ஸ் (E-Commerce) தளமாக அமேசான் (Amazon) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பிளிப்கார்ட் வலைத்தளத்திற்கு போட்டியாக அமேசான் வலைத்தளத்தில் தொடர்ந்து பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே இந்தியாவில் அமேசான் வலைத்தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர். 

மேலும் அமேசான் டெய்லி க்விஸ் ( Amazon Daily Quiz) என்ற போட்டி நடத்தி வாடிக்கையாளர்களுக்கு அட்டகாச பரிசுகள் வழங்கி வருகிறது. அமேசான் டெய்லி க்விஸ் இப்போது ஆன்லைனில் மிகவும் பிரபலமான வினாடி வினாக்களில் ஒன்றாகும். அமேசான் செல்லர்ஸ் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நடத்தி வரும் இந்த வினாடி வினா போட்டி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியதாக நம்பப்படுகிறது. இருப்பினும், இது சமீபத்திய ஆண்டுகளில் இந்திய பார்வையாளர்களிடையே நிறைய வரவேற்பை பெற்றுள்ளது.

வினாடி வினா போட்டியில் எவ்வாறு பங்கு பெறலாம்:



* இந்த போட்டியில் பங்கு பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், தொலைபேசியில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.

* அதற்கடுத்ததாக அமேசான் ஆப்பை ஓபன் செய்து லாக் இன் செய்ய வேண்டும்.

* ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்தால்  குறிப்பிட்ட தேதிக்கான அமேசான் வினாடி வினா டாப் தோன்றும். உதாரணத்திற்கு இன்று ஜன-.21ம் தேதிக்கான வினாடி வினா தோன்றும்.

* அதை கிளிக் செய்து உள்ளே நுழையவும். அதில் இன்றைய கேள்விகள் காண்பிக்கப்படும்.

Also read... ஐபோன் யூசர்களுக்கு முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ள 'Signal' ஆப்!

தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டிருக்கும். தினசரி கேட்கப்படும் வினாக்கள் காலை 8 மணி முதல் இரவு 12 மணி வரை ஆக்டிவில் இருக்கும். இவை பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும். மேலும் இவற்றின் பரிசுக்கு தகுதி பெற பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும். இதில் ஒரு தவறான பதில் கொடுத்தால் கூட குறிப்பிட்ட நபர் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற முடியாது. குறிப்பாக வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இறுதியில் தேர்தெடுக்கப்படுவார்.

Also read... Jio, Airtel, Vi நிறுவனங்களின் பெஸ்ட் ப்ரீபெய்டு 2GB பிளான் குறித்த முழு விவரம்!

அவர் லக்கி டிரா என்ற விருப்பம் மூலம் தான் தேர்வு செய்யப்படுவார். கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை அளித்திருந்தாலும் அவர் லக்கி டிரா மூலமாகவே தேர்வு செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தேர்ந்தெடுக்கப்படும் நபர் அன்றைய தினம் அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகையை அமேசான் பே-வில் பெறுவார். மேலும், இன்று(ஜன.21) தேதி நடத்தப்படும் வினாடி வினாவில் தேர்தெடுக்கப்படும் வெற்றியாளரின் பெயர் நாளை (ஜன.22) தெரிவிக்கப்படும். மேலும், இன்றைய கேள்விகளுக்கு பதிலளிக்கும் நபருக்கு "பிலிப்ஸ் இண்டக்சன் குக்டாப்" இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஜன.21ம் தேதி கேட்கப்பட்டுள்ள கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள்:

Question 1: Which of these cricketers hit the first double century in Test cricket in 2021?

Answer: Kane Williamson

Question 2: Swadhinata Sarak is going to open in 2021 between India and which neighbouring country?

Answer: Bangladesh

Question 3: What new parameter has been added to UNDP’s Human Development Index-2020?

Answer: Planetary Pressures

Question 4: Identify the famours fast-food chain.

Answer: KFC

Question 5: In which of these movies did he not have a cameo?

Answer: Justice League



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: