அமேசானில் பிரைம் மெம்பர்களுக்கு ‘Advantage Just for Prime’ திட்டம் அறிமுகம்.. பல்வேறு சலுகைகளை அனுபவியுங்கள்..

amazon prime - Advantage-Just for Prime

18 முதல் 24 வயது வரையிலான வாடிக்கையாளர்கள் ‘யூத் ஆபர் ஆன் பிரைம்' என்ற சலுகையில் உறுப்பினர்களாக இணையலாம். இதன் மூலம் 50 சதவீதம் தள்ளுபடி பெற முடியும்.

  • Share this:
அமேசான் நிறுவனம் இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களை கவர பிரைம் மெம்பர்களுக்காக ஒரு புதிய ‘Advantage Just for Prime’ என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.

அமேசானின் வருடாந்திர பிரைம் தின நிகழ்ச்சியில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி அமேசான் தனது அட்வாண்டேஜ் - ஜஸ்ட் ஃபார் பிரைம்’ விற்பனையை இந்தியாவில் ஜூலை 26 முதல் 27 வரை நடத்துகிறது. இதன் மூலம் எச்.டி.எஃப்.சி வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டைப் பயன்படுத்தி குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் வரை வட்டி இல்லாத தவணைகளை பிரைம் மெம்பர்கள் அனுபவிக்க முடியும்.

கூடுதலாக, இந்த திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் ஆறு மாதங்கள் வரை அக்கோவால் (Acko) வழங்கப்படும் 'ப்ரீ ஸ்க்ரீன் ரீபிளேஸ்மென்ட்' அம்சத்தையும் பெறலாம். ப்ரீ ஸ்க்ரீன் ரீபிளேஸ்மென்டிற்கான செலவு உங்கள் போன் மதிப்பில் 40 சதவீதம் வரை இருக்கலாம்.

Also Read:  மாப்பிள்ளையின் நண்பர்கள் கொடுத்த கிஃப்டை தூக்கி வீசிய மணப்பெண்...

விருப்பமுள்ள அமேசான் வாடிக்கையாளர்கள் அனைவரும் Amazon.in/prime-ல் ஆண்டுக்கு ரூ .999 செலுத்தி பிரைம் உறுப்பினராக சேர்ந்து இந்த சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது மூன்று மாதங்களுக்கு ரூ. 329 செலுத்தி பிரைம் உறுப்பினராக இணையலாம். இதன் மூலம் ப்ரீ டெலிவரி, பிரைம் வீடியோ பட்டியலுக்கான அணுகல், அமேசான் மியூசிக்கில் விளம்பரமில்லாத இசை உட்பட பல்வேறு சலுகைகளை பெறலாம்.

மேலும் 18 முதல் 24 வயது வரையிலான வாடிக்கையாளர்கள் ‘யூத் ஆபர் ஆன் பிரைம்' என்ற சலுகையில் உறுப்பினர்களாக இணையலாம். இதன் மூலம் 50 சதவீதம் தள்ளுபடி பெற முடியும்.
‘யூத் ஆபர் ஆன் பிரைம்' சலுகையில் இணைய விரும்பும் தெரிவிக்கும் வாடிக்கையாளர்களின் வயதை வெற்றிகரமாக சரிபார்த்த பிறகு தான் இந்த சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:   தனுஷின் ‘சுள்ளான்’ பட பாணியில் மெட்ரோ ரயிலில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

'ஜஸ்ட் ஃபார் பிரைம் திட்டம்' ரெட்மி, சாம்சங், iQoo, விவோ, எம்ஐ மற்றும் ஒப்போ உள்ளிட்ட போன்களுக்கு கிடைப்பதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரைம் உறுப்பினர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படும், இதற்காக வாடிக்கையாளர்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை என அமேசான் நிறுவனம் விளக்கியுள்ளது.

மேலும் புதிதாக பிரைம் மெம்பர்களாக இணையும் வாடிக்கையாளர்களும் இந்த சலுகையை உடனடியாக அனுபவிக்க முடியும் என்று அமேசான் விளக்குகிறது, மேலும் ஜஸ்ட் ஃபார் பிரைம் இலவச சோதனை பதிப்பைக் கொண்ட உறுப்பினர்களுக்கு கூட கிடைக்கிறது என தெரிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'ப்ரீ ஸ்க்ரீன் ரீபிளேஸ்மென்ட்' குறித்து பேசுகையில், அமேசான் வாடிக்கையாளர்கள் ஆறு மாத ஸ்க்ரீன் ரீபிளேஸ்மென்டைப் பெறுவார்கள், அனைத்து கட்டண முறைகளில் வாங்கும் செல்போன்களும் இந்த திட்டத்திற்கு தகுதியானவை என கூறப்பட்டுள்ளது.
Published by:Arun
First published: