பல்வேறு அம்சங்களுடன் ஹூவாமி ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

பல்வேறு அம்சங்களுடன் ஹூவாமி ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் - இன்று முதல் முன்பதிவு தொடக்கம்

அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2 மினி ஸ்மார்ட்வாட்ச்

பிளமிங்கோ பிங்க் (Flamingo Pink), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் பச்சை (Sage Green colour) ஆகிய வண்ணங்களில் Amazfit GTS 2 மினி ஸ்மார்ட் வாட்ச் இருக்கும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2  (Amazfit GTS 2) மினி ஸ்மார்ட் வாட்சின் சிறப்பு அம்சங்களை வெளியிட்டுள்ள ஹூவாமி நிறுவனம், அந்த வாட்சுக்கான முன்பதிவையும் தொடங்கியுள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அதிகரித்துக்கொண்டே செல்வதால், கற்பனை செய்து பார்க்க முடியாத பலன்கள் நம் கைகளிலேயே கிடைக்கின்றன. அதற்கு சரியான உதாரணம் கை கைடிகாரத்தைக் கூறலாம். ஒரு காலத்தில் நேரத்தை தெரிந்து கொள்வதற்காக பயன்படுத்தப்பட்ட கைக்கடிகாரத்தில் இன்று நம் உடல் இயக்கத்தின் அத்தனை அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். 

தொழிட்நுட்பங்களின் வளர்ச்சி கைகடிகாரத்தை அந்தளவுக்கு முக்கியத்துவமாக மாற்றியிருக்கின்றன. மேலும், தொழில்நுட்ப சந்தையில் நிலவும் போட்டியால் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க புது புது யுக்திகளை நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. உடலின் ரத்த ஓட்டம், தண்ணீரின் நிலை ஆகியவற்றை மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து அறிந்துவந்த நிலையில், தற்போது அந்த தகவல்களை நம் கைகடிகாரத்தின் மூலமே அறிந்துகொள்ள முடிகிறது.

ஹூவாமி மினி ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம் : 

அந்த வகையில் ஹூவாமி நிறுவனம், இந்தியாவில் Amazfit GTS 2 புதிய மினி ஸ்மார்ட் வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. முன்பதிவுகள் இன்று முதல் தொடங்கியுள்ள நிலையில், 6,999 ரூபாய் விலையில் இந்த வாட்சுகள் கிடைக்கின்றன. Amazfit GTS 2 மினி ஸ்மார்ட் வாட்ச் மூலம் பயன்படுத்துவோரின் மாதவிடாய் சுழற்சி, மன அழுத்தம், தூக்கத்தின் அளவு, ரத்தத்தில் ஆக்சிஜனின் அளவு ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும். ஆன்ட்ராய்டு செல்போன்களும் இணைத்துகொள்ளும் வசதி உள்ளது. 

ஸ்மார்ட் வாட்சில் இருந்தே செல்போன்களில் இருக்கும் இசை மற்றும் ஆப்களை இயக்கலாம். ஒரு முறை ஜார்ஜ் செய்தால் 220mAh 14 நாட்கள் வரை பயன்படுத்தும் பேட்டரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. Android 5.0 அல்லது iOS 10.0. வெர்சன்கள் உடைய செல்போன்களுடன் Amazfit GTS 2 மினி ஸ்மார்ட் வாட்சை பயன்படுத்தலாம். 70 வகையான ஸ்போர்ட்ஸ் மோட்களும், 50 வகையான முக அமைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

Also read... McDonald's உணவு வகைகளை இனி எளிதாக WhatsApp ஆப் மூலமே ஆர்டர் செய்யலாம்!

மேலும், ஸ்மார்ட் வாட்ச் AMOLED டிஸ்பிளே, PPG optical சென்சார் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. பிளமிங்கோ பிங்க் (Flamingo Pink), மிட்நைட் பிளாக் (Midnight Black) மற்றும் பச்சை (Sage Green colour) ஆகிய வண்ணங்களில் Amazfit GTS 2 மினி ஸ்மார்ட் வாட்ச் இருக்கும். vanilla GST 2 - தோற்றத்தைப்போன்று அமேஸ்பிட் ஜிடிஎஸ் 2-வின் தோற்றமும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிறுவனத்தின் மூலம் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட Amazfit GTR 2 மற்றும் Amazfit GTS 2 ஸ்மார்ட் வாட்சுகளையும் முன்பதிவு செய்யலாம். Amazfit GTR 2  ரூ.13,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. Amazfit GTS 2  ரூ.12,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமேசான் இந்தியா (Amazon india) மற்றும் அமேஸ்பிட் இணையதளங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் நேரடியாக புதிய மினி ஸ்மார்ட் வாட்சை ஆர்டர் செய்யலாம்.  இருப்பினும், எத்தனை வாட்சுகள் முதல்கட்டமாக விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன என்பதை பற்றிய தகவலை ஹூவாமி நிறுவனம் அறிவிக்கவில்லை.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: