டிக்டாக் மீதான தடை - போட்டியில் இருக்கும் மித்ரோன், சிங்காரி நிலை என்ன?

TikTok Ban |

டிக்டாக் மீதான தடை - போட்டியில் இருக்கும் மித்ரோன், சிங்காரி நிலை என்ன?
டிக்டாக் | மித்ரோன் | சிங்காரி
  • Share this:
இந்தியாவில் மிக பிரபலமான செயலி டிக்டாக் என்பதில் யாருக்கும் சந்தேகமே இருக்காது. அந்தளவு அதிக பயனாளர்களையும், பயன்பாட்டையும் கொண்ட செயலியாக உள்ளது டிக்டாக்.

உலகம் முழுவதும் 155 நாடுகளில் 150 கோடிக்கும் அதிகமானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக்டாக் செயலியை இந்தியாவில் மட்டும் பதிவிறக்கம் செய்தவர்கள் ஏறத்தாழ 50 கோடி பேர். டிக்டாக் பயனாளர்களில் மூன்றில் ஒரு பங்கு பயனாளர்கள் இந்தியர்கள்.

’மியூசிக்கலி’ எனும் பெயரில் இந்தியாவில் பிரபலமாகி இருந்த செயலி தான், 2018ம் ஆண்டு டிக்டாக் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த இரு ஆண்டுகளில் இந்தியாவில் பலகோடி பயனாளர்களைப் பெற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளது டிக்டாக்.


ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் இந்தியர்களில் பெரும்பாலானோர் ஒருமுறையாவது இந்த ஆப்பை பயன்படுத்தியிருக்கக்கூடும். அந்தளவு இந்தியாவில் டிக்டாக் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம்.

இந்நிலையில், பயனாளர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு 59 சீன நிறுவன செயலிகளுக்கு தடை விதித்திருக்கிறது இந்திய அரசு. இதில் டிக்டாக் செயலியும் ஒன்று.


படிக்க: ’ஏற்கெனவே டிக்டாக் உள்ளிட்ட ஆப்கள் வைத்திருந்தாலும்...’ மத்திய அரசு வைத்த செக்

படிக்க: விலக்குகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு - எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்?









சீனப்பொருட்கள் புறக்கணிப்போம் என்ற முழக்கம் பரவலாக எழுந்த போது கூட, பலரால் டிக்டாக்கை விட மனம் வரவில்லை. இப்போது டிக்டாக் தடை செய்யப்பட்டுள்ளதால், வேறுவழியின்றி அதற்கான மாற்றைத் தேடத்துவங்கியுள்ளனர் டிக்டாக் பிரியர்கள்.

டப்ஸ்மாஷ், மியூசிக்கலி வரிசையில் வந்தது தான் டிக்டாக். இப்போது டிக்டாக்குக்கு மாற்றாக இரு செயலிகள் முன்வைக்கப்படுகிறது. அதில் ஒன்று மித்ரோன் எனும் இந்திய நிறுவன செயலி.

கடந்த சில மாதம் முன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த செயலி, ஆரம்பகாலத்தில் லட்சக்கணக்கானோரால் பதிவிறக்கம் செய்யப்பட்டது. மித்ரோன் செயலி, பாகிஸ்தானின் மென்பொருள் வடிவமைப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது எனக் கூறப்பட… சர்ச்சை வெடித்தது. இதையடுத்து, தனிநபர் பாதுகாப்பு கொள்கை சரியில்லை எனச்சொல்லி கூகுள் ப்ளே ஸ்டோரில் மித்ரோன் செயலி நீக்கப்பட்டது.

தொழில்நுட்ப கோளாறுகளையும், தனிநபர் தகவல் பாதுகாப்பு அம்சங்களையும் சரிசெய்து கொண்டு தற்போது மீண்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இடம்பிடித்துள்ள மித்ரோன் ஆப் பலரால் டவுன்லோடு செய்யப்பட்டு வருகிறது.

டிக்டாக் போன்றே மித்ரோனிலும் சிறிய வீடியோக்களை உருவாக்கி பதிவேற்ற முடியும். அச்சு அசலாக டிக்டாக் போன்றே காட்சியளிக்கும் இந்த ஆப், ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் பாதுகாப்பு அம்சங்கள் அவ்வளவு நம்பிக்கை அளிக்கவில்லை. போகப்போக இது மேம்படும் என எதிர்பார்க்கலாம். ஒரு கோடி பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள இந்த செயலிக்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.5 ரேட்டிங் கிடைத்திருக்கிறது.

டிக்டாக்குக்கு அடுத்த மாற்று என முன்வைக்கப்படுவது சிங்காரி செயலி. டிக்டாக் செயலியைப் போன்றே குறும் வீடியோ பகிர்வு தளம் தான் சிங்காரியில், ஆங்கிலம், இந்தி, வங்கம், குஜராத்தி, மராத்தி, கன்னடா, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வீடியோவை பார்வையிடலாம்.

அதோடு, பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்களை பெறும் பார்வையாளர்களைப் பொறுத்து பணத்தை ஈட்டும் வசதியையும் தருகிறது சிங்காரி செயலி.

Also read... TikTok Ban | டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஆப்களுக்கு மத்திய அரசு தடை

25 லட்சம் பேரால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ள சிங்காரி செயலி, கூகுள் ப்ளே ஸ்டார் ரேட்டிங்கில் 5க்கு 4.7 மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

இவ்விரு செயலிகளும் தோற்றத்தில் டிக்டாக்கை அப்படியே பிரதிபலித்தாலும், பயன்பாட்டில் டிக்டாக் போன்று அப்படியே இருக்கிறதா என்றால் சந்தேகம் தான். இரண்டுமே புதிய செயலிக்கள் என்பதால் போகப்போக மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
First published: June 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading