வெளியாகிறது ஆப்பிள் ஐபோன் 11 சீரிஸ்... அறிவிப்புக்கு முன்னரே கசிந்த தகவல்கள்..!

இப்புதிய ஐஃபோன்கள் உடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 கூட வெளியாகிறதாம். மேலும், புதிய மேக்புக் மற்றும் ஐபேட் ஆகியவனவும் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.

Web Desk | news18
Updated: September 3, 2019, 3:15 PM IST
வெளியாகிறது ஆப்பிள் ஐபோன் 11 சீரிஸ்... அறிவிப்புக்கு முன்னரே கசிந்த தகவல்கள்..!
கசிந்த ஐஃபோன் 11 சீரிஸ் விவாங்கள் (Source: The Next Web)
Web Desk | news18
Updated: September 3, 2019, 3:15 PM IST
ஆப்பிள் நிறுவனம் சார்பில் மூன்று ஐபோன் மாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன. அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னரே இவற்றின் விவரங்களும் சிறப்பம்சங்களும் கசிந்துள்ளன.

2019-ம் ஆண்டுக்கான ஐபோன் என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சீனா செய்தி நிறுவனங்கள் புதிய ஐபோன் சீரிஸ் குறித்தத் தகவல்களை கசியவிட்டுள்ளன.

விரைவில் ஆப்பிள் ஐபோன் சீரிஸ் 11 ஸ்மார்ட்போன்களை வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஐபோன் 11, ஐபோன் 11 ப்ரோ, ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் ஆகிய மூன்று மாடல்களில்  வெளியாக உள்ளன. இந்த மூன்று ஐபோன்களுமே ஆப்பிள் A13 சிப் திறனுடன் ஃபேஸ் ஐடி, வைஃபை 6 இணைப்பு, வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய சிறப்பம்சங்களும் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.


ஆப்பிள் புதிய ஐபோன் வெளியீட்டை வருகிற செப்டம்பர் 10-ம் தேதி நடத்தும் என அறிவித்திருந்த நிலையில், போன் குறித்த தகவல்கள் தற்போது தகவல்கள் கசிந்துள்ளன. இப்புதிய ஐபோன்கள் உடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 கூட வெளியாகிறதாம். மேலும், புதிய மேக்புக் மற்றும் ஐபேட் ஆகியவனவும் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.

மேலும் பார்க்க: செப்டம்பர் 10-ம் தேதி புதிய ஐஃபோன் ரிலீஸ்! - உறுதியளித்த ஆப்பிள்

₹ 72 கோடிக்கு ஆசைப்பட்டு ₹ 42 லட்சத்தை இழந்த புதுச்சேரி பி.இ பட்டதாரி

Loading...

First published: September 3, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...