"BSNL நிறுவனத்தை மீட்கத் தீவிரமாக முயல்கிறோம்" தொலைத்தொடர்பு அமைச்சகம்

இன்று முதல் BSNL நிறுவன ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரி மூன்று நாள் போராட்டம் நடத்தத் தொடங்கி உள்ளனர்.

Web Desk | news18
Updated: February 18, 2019, 11:58 AM IST
பி.எஸ்.என்.எல்
Web Desk | news18
Updated: February 18, 2019, 11:58 AM IST
BSNL நிறுவனத்தை மீட்டு பொருளாதார ரீதியில் வலுவனதாக்க அரசு அனைத்து வகையிலும் முயன்று வருவதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் BSNL நிறுவன ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றக் கோரி மூன்று நாள் போராட்டம் நடத்தத் தொடங்கி உள்ளனர்.

BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்து தங்களது நீண்ட கால கோரிக்கைகள், 4ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மற்றும் ஊதிய மாறுதல் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி இந்த மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதாகக் கூறியுள்ளனர்.


அரசு தரப்பில் BSNL போராட்டம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “BSNL ஊழியர்களின் கோரிக்கைகளை வரிசையாக நிறைவேற்றி வருகிறோம். அவர்களது நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் கவனத்தில் ஏற்றுக்கொள்ளப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொருளாதார ரீதியாக வலுவான நிறுவனமாக BSNL நிறுவனத்தைத் தக்க வைக்க அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருவதாகவும் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் பார்க்க: யார் நல்ல தலைவன்? மோடி, ரஜினியை கடுமையாக விமர்சித்த சீமான்

Loading...

First published: February 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...