ஹோம் /நியூஸ் /தொழில்நுட்பம் /

அட்சய திருதியை: Google Pay, PayTM வழியாக ஆன்லைனில் தங்கம் வாங்குவது எப்படி?

அட்சய திருதியை: Google Pay, PayTM வழியாக ஆன்லைனில் தங்கம் வாங்குவது எப்படி?

காட்சி படம்

காட்சி படம்

வீட்டில் இருந்தபடியே தங்கம் வாங்கலாம் எப்படி தெரியுமா?

ஒவ்வொரு ஆண்டின் மிகவும் மங்களகரமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படும் அட்சய திருதியை, இந்தியாவில் வருகிற மே 3ம் தேதி செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தங்கம் வாங்க அல்லது தங்கத்தில் முதலீடு செய்ய அட்சய திருதியை ஒரு நல்ல நாளாக மக்கள் கருதுகின்றனர். மேலும் இப்படி செய்வதால் ஆண்டு முழுவதும் செல்வம் செழிக்கும் என்றும் மக்கள் நம்புகின்றனர்.

அப்படியான அட்சய திருதியை அன்று நீங்கள் கடைகளுக்கு சென்று தங்கத்தை வாங்கலாம் அல்லது ஆன்லைன் வழியாகவும் வாங்கலாம். ஆன்லைனில் தங்கமா? அதெப்படி என்று உங்களுக்கு தெரியாவிட்டால், கூகுள் பே மற்றும் பேடிஎம் வழியாக தங்கம் வாங்குவது எப்படி என்கிற எளிய மற்றும் படிப்படியான வழிமுறைகள் இதோ:

கூகுள் பே வழியாக தங்கம் வாங்குவது எப்படி?

1. கூகுள் பே ஆப்பை திறந்து 'நியூ' என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

2. சர்ச் பாரில் 'கோல்ட் லாக்கர்' என்று டைப் செய்து, பின் அதை சர்ச் செய்யவும்.

3. பிறகு கோல்ட் லாக்கர் விருப்பத்தை கிளிக் செய்து, பின்னர் 'பை' (Buy) என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது தங்கத்தின் தற்போதைய சந்தை விலை (வரி உட்பட) தோன்றும். தங்கத்தின் விலை நாள் முழுவதும் மாறக்கூடும் என்பதால், நீங்கள் தங்கம் வாங்க வேண்டும் என்று முடிவு செய்து, அதை வாங்க தொடங்கிய பிறகு, குறிப்பிட்ட விலை 5 நிமிடங்களுக்கு 'லாக்' செய்யப்பட்டு இருக்கும்.

also read : ரூ.20,000 பட்ஜெட்டில் ஒரு தரமான 5ஜி போனை தேடுறீங்களா? 1 இல்ல 9 ஆப்ஷன்ஸ் இருக்கு!

4. நீங்கள் வாங்க விரும்பும் தங்கத்தின் அளவை ஐஎன்ஆர்-இல் (INR) உள்ளிடவும். நீங்கள் வாங்கக்கூடிய தங்கத்தின் மொத்த மதிப்புக்கு வரம்பு இல்லை. இருப்பினும் ஒரே நாளில் ரூ.50,000க்கு மட்டுமே நீங்கள் தங்கம் வாங்க முடியும். குறைந்தபட்ச கொள்முதல் தொகை ரூ.1 ஆகும்.

5. செக் மார்க்-ஐ கிளிக் செய்த பின்னர், ஸ்க்ரீனில் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான கட்டண முறையை தேர்ந்தெடுக்கவும்.

6. பின்னர் பணம் செலுத்த 'கன்டினியூ' என்பதை கிளிக் செய்யவும். பரிவர்த்தனை உறுதிசெய்யப்பட்ட பிறகு, சில நிமிடங்களில் தங்கம் உங்கள் லாக்கரில் தோன்றும். குறிப்பிட்ட பரிவர்த்தனை செயலாக்கப்பட்ட பிறகு நீங்கள் உங்களின் தங்கம் வாங்குதலை ரத்து செய்ய முடியாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், நீங்கள் அதை தற்போதைய சந்தை விலையில் மீண்டும் விற்கலாம்.

also read : ரூ.30,000-க்குள் லேப்டாப் வாங்க விரும்புகிறீர்களா? பெஸ்ட் ஆப்ஷன்ஸ் இதோ..

Gold Rate today 25th february gold price in m

பேடிஎம் வழியாக தங்கம் வாங்குவது எப்படி?

1. உங்கள் மொபைலில் உள்ள பேடிஎம் ஆப்பை திறந்து 'ஆல் சர்வீஸஸ்' பிரிவுக்கு செல்லவும்.

2. சர்ச் பாரில் 'கோல்ட்' என்று டைப் செய்து பின் சர்ச் செய்யவும்.

3. பிறகு தொகைக்கு ஏற்ற தங்கம் வாங்கவும் அல்லது கிராம் கணக்கில் தங்கம் வாங்கவும் என்கிற விருப்பத்தில் ஒன்றை தேர்வு செய்து, தேவையான தொகையை உள்ளிட்டு 'ப்ரொசீட்' என்பதை கிளிக் செய்யவும்.

4. டிஜிட்டல் கோல்ட்-ஐ வாங்கும் செயல்முறையை முடிக்க பேடிஎம் வேலட், யுபிஐ, நெட் பேங்கிங், டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தவும், அவ்வளவுதான்!

First published:

Tags: Gold, Google pay, Technology