• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • ஏர்டெல் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - புதிய பிளான்கள்

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - புதிய பிளான்கள்

ஏர்டெல்

ஏர்டெல்

ஒரே போஸ்ட்பெய்ட் பிளானில், குடும்பத்தினரை இணைக்கும் வகையில், குடும்பத்துக்கான ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்கள்.

  • Share this:
ஏர்டெல் சமீபத்தில் ரீடெயில் விற்பனைக்காகவும், கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கும் புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களில், வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் டேட்டா பயன்பாட்டில் கூடுதல் டேட்டா, குடும்பத்துடன் பகிரக்கூடிய டேட்டா பண்டில் போன்ற பல புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

ஏர்டெல்லின் புதிய போஸ்ட்பெய்ட் ப்ளான்கள் ரூ. 399 முதல் கிடைக்கிறது. மேலும், ரூ.339 திட்டம் 40GB டேட்டாவும், ரூ. 1599 திட்டம் வரம்பற்ற 4G டேட்டாவும் வழங்குகிறது. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, ஏர்டெல்லின் போஸ்ட்பெய்ட் திட்டம் ரூ. 399 முதல் கிடைக்கிறது. அதே நேரத்தில், கார்ப்பரேட் வாடிக்கையாளர்கள், இதே திட்டங்களை ஆரம்ப விலையாக ரூ. 299 க்கு பெறலாம்.

ஏர்டெல் போஸ்ட்பெய்ட் குடும்பத்திட்டம் :

ஒரே போஸ்ட்பெய்ட் பிளானில், குடும்பத்தினரை இணைக்கும் வகையில், குடும்பத்துக்கான ஏர்டெல் போஸ்ட்பெய்ட் திட்டங்கள், தற்போது கூடுதலான 4G இணைப்பையும் வழங்குகிறது. ஏற்கனவே, குடும்பத்தினர் பயன்பாட்டுக்காக ரூ. 749 க்கு வழங்கப்பட்டு வந்த ஃபேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தை ஏர்டெல் தற்போது நிறுத்தி விட்டது. அதே திட்டத்தை, ரூ. 999 திட்டமாக மாற்றி, கூடுதல் 4G பண்டிலுடன் அப்கிரேட் செய்துள்ளது. அதுமட்டுமின்றி, ஏர்டெல் யூசர்கள், ஏற்கனவே பயன்படுத்தத் வரும் போஸ்ட்பெய்ட் திட்டத்தில், ரூ. 299க்கு, மற்றொரு குடும்ப உறுப்பினரை யூசராக சேர்க்கலாம். கூடுதலாக சேர்க்கப்படும் ஒவ்வொரு யூசருக்கும் ரூ. 299 இல் ஒரு போஸ்ட்பெய்ட் பிளான் ஆக்டிவேட் ஆகும். தனித்தனியாக போஸ்ட்பெய்ட் தேவைப்படும் குடும்பத்தினருக்கு, ரூ. 299 க்கு கிடைக்கும் இந்த புதிய யூசர் கனக்ஷன், மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Also Read : இந்தியாவில் ரூ.20,000 விலைக்குள் கிடைக்கும் சிறந்த 5ஜி ஃபோன்கள்!

புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் :

ஏர்டெல் சில்லறை விற்பனைக்காக புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்கள் தொடக்க விலையாக, ரூ. 399 முதல் கிடைக்கிறது. அடிப்படையாக ஏர்டெல் வழங்கும், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப், wynk மியூசிக் மற்றும் பல அம்சங்களோடு, ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் நன்மைகளுடன் வருகிறது. ரூ. 399 திட்டம் 40 GB டேட்டா பண்டிலுடன் வருகிறது.

ரூ. 499 திட்டத்தில் 75 GB டேட்டாவும், இந்த திட்டத்திற்கான ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகள் உள்ளது. கூடுதலாக, அதிக விலையில் அறிமுகமாகியிருக்கும் இந்த போஸ்ட்பெய்ட் திட்டங்களில், ஒரு வருட அமேசான் பிரைம் சந்தா, டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா, ஏர்டெல் செக்யூர் ஆப், wynk மியூசிக் ஆப் பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம், shaw அகாடமி மற்றும் விஐபி சேவையின் ஆகிய நன்மைகளுடன் வருகிறது.

அடுத்த திட்டத்தின் விலை, ரூ. 999. இது குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் கீழே, நீங்கள் மொத்தம் மூன்று இணைப்புகளைப் பெறலாம். இந்த ப்ளானில் மொத்தம் 210 GB டேட்டா பண்டில் உள்ளது. இந்த டேட்டா பண்டிலில் முதன்மை யூசர், 150 GB டேட்டா பெறும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக சேர்க்கப்படும், add-on போஸ்ட்பெய்ட் இணைப்புகள் ஒவ்வொன்றும், 30 GB டேட்டாவைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Also Read : மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதை எப்படி அறிவது? இந்த 10 அறிகுறிகள் தென்பட்டால் உஷார்!

அடுத்ததாக, ரூ. 1599 திட்டத்தில் வரம்பற்ற 4G டேட்டா வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, கூடுதலாக, 200 ஐ.எஸ்.டி நிமிடங்கள் பண்டில் செய்யப்பட்ட சலுகையும் உள்ளது. மேலும், சர்வதேச ரோமிங் பேக்கேஜ்களில் 10% தள்ளுபடி ஆகிய அம்சங்களுடன், இரண்டு இணைப்புகளை வழங்குகிறது.

கூடுதல் இணைப்புகள் பெறலாம் :

தற்போது, ஏர்டெல் வழங்கும் எந்த போஸ்ட்பெய்ட் திட்டத்திலும், நீங்கள் இணைப்பு போஸ்ட்பெய்ட் கூடுதலாகப் பெற முடியும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் போஸ்ட்பெய்ட் திட்டத்துடன், கூடுதலான இணைப்பு கனக்ஷன் விலை ரூ. 299 ஆகும். இந்த கூடுதல் இணைப்புக் கணக்கில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் 30சிபி டேட்டாவைப் பெறுவீர்கள். மேலும், உங்கள் முதன்மை போஸ்ட்பெய்ட் இணைப்பில் உள்ள ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளும் உங்களுக்குக் கிடைக்கும். ஏர்டெல்லின் இந்த புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு நன்றி! “குடும்பத்தினர் அனைவருக்குமே இணையம் மற்றும் டிஜிட்டல் பயன்பாடு அதிகமாகி இருப்பதால், அதிக டேட்டா தேவை என்ற கோரிக்கையை பெரும்பாலான வாடிக்கையாளர்கள் முன்வைத்தனர்” என்று ஏர்டெல் தெரிவித்தது.

ஏர்டெல் கார்ப்பரேட் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் :

மேலே கூறியுள்ளது போல, ஏர்டெல் ரீடெயில் திட்டங்களுடன், கார்ப்பரேட் போஸ்ட்பெய்ட் திட்டங்களையும் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்ப்பரேட் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் ஆரம்ப விலை, ரூ. 299. இந்தத்திட்டம் (30 GB 4G டேட்டா, ஏர்டெல் கால் மேனேஜர், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம், wynk மியூசிக் மற்றும் shaw அகாடமி பண்டில்) ஆகிய அம்சங்களுடன் வழங்கப்படுகிறது.

ரூ. 349 திட்டத்தில் (60 GB 4G டேட்டா, டிரேஸ்மேட், கூகுள் வொர்க் ஸ்பேஸ், ஏர்டெல் கால் மேனேஜர் மற்றும் ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகள்), ஆகியவை அடங்கும்.

Also Read : வாட்ஸ்அப் புதிய அப்டேட் அறிமுகம்... குரூப் வீடியோ காலில் ஜாலியாக பேசலாம்!

ரூ. 499 திட்டத்தில், ட்ரேஸ்மேட், கூகுள் work ஸ்பேஸ், ஏர்டெல் கால் மேலாளர் அம்சங்களுடன், 100GB 4G டேட்டாவும், பின்வரும் நன்மைகளும் உள்ளன. அமேசான் பிரைம் ஒரு வருட சந்தா, டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தா, ஏர்டெல் செக்யூர், wynk மியூசிக் ஆப் பிரீமியம், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம், shaw அகாடமி மற்றும் விஐபி சேவை ஆகிய கூடுதல் நன்மைகளுடன் வருகிறது.

அடுத்ததாக, கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு, பெரிய தொகை வித்தியாசத்தில், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நன்மைகளுடன், ரூ. 1599 (500GB 4G டேட்டா) வழங்கப்படுகிறது. அனைத்து போஸ்ட்பெய்ட் திட்டங்களிலும், லோக்கல் மற்றும் நேஷனல் அழைப்புகள் அனைத்துமே, வரம்பற்றவை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: