லைவ் டிவி முதல் நெட்ஃப்ளிக்ஸ் வரை... ஏர்டெல் Xstream 4K ஹைபிரிட் பாக்ஸில் என்ன ஸ்பெஷல்?

குறிப்பாக இந்த Xstream பாக்ஸ் ஏர்டெல் ப்ராட்பேண்ட் சேவையின் மூலமாக மட்டுமல்லாது இதர ப்ராட்பேண்ட் சேவைகளின் கீழும் இயங்கும் என்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.

Web Desk | news18
Updated: September 5, 2019, 1:44 PM IST
லைவ் டிவி முதல் நெட்ஃப்ளிக்ஸ் வரை... ஏர்டெல் Xstream 4K ஹைபிரிட் பாக்ஸில் என்ன ஸ்பெஷல்?
ஏர்டெல் Xstream
Web Desk | news18
Updated: September 5, 2019, 1:44 PM IST
டிடிஹெச் சேவையின் அப்டேட் வெர்ஷனாக புதிய ஏர்டெல் Xstream 4K ஹைபிரிட் பாக்ஸை ஏர்டெல் அறிமுகம் செய்துள்ளது.

அண்ட்ராய்டு 9 பை செயல்பாட்டுத்திறன் உடன் இயங்கும் ஏர்டெல் Xstream 4K ஹைபிரிட் பாக்ஸ் ஏர்டெல்-ன் ஸ்மார்ட் பாக்ஸ் ஆக விவரிக்கப்படுகிறது. நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் வீடியோ, ஹாட்ஸ்டார், யூட்யூப், வூட், சோனி லைவ், ஜீ 5, ஜியோ சினிமா, ஜூக், ஹோய்சோய், ஹங்காமா ப்ளே, ஈரோஸ் நவ் என அனைத்து சேவைகளையும் ஏர்டெல் Xstream பாக்ஸ் மூலம் உங்கள் வீட்டு டிவியின் மூலமாகவே பெறலாம்.

ஏர்டெல் வழங்கும் இந்த Xstream பாக்ஸின் விலை 3,999 ரூபாய் ஆகும். ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இதனது விலை 2,249 ரூபாய் ஆகும். இந்தியாவில் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த கேபிள் டிவி, டிடிஹெச் சேவைகளின் அதிகப்படியான அப்டேட் சேவையாகவே Xstream பாக்ஸ் இருக்கும். Xstream 4K ஹைபிரிட் பாக்ஸ் ஆண்ட்ராய்ட் மூலம் இயங்குவதால் ஆண்ட்ராய்ட் தளத்தின் கீழ் இயங்கும் அத்தனை ஆப் சேவைகளையும் பெற முடியும்.


கூகுள் அசிஸ்டெண்ட் மற்றும் ஹோம் இணைப்பும் இருப்பதால் வீட்டை ஸ்மார்ட் ஹோம் ஆக்கவும் 4K ஹைபிரிட் பாக்ஸ் உதவும். 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Xstream பாக்ஸில் யூஎஸ்பி 2.0 போர்ட் மூலம் 128 ஜிபி அளவிலான மெமரி கார்டை இணைத்துக்கொள்ளலாம்.

குறிப்பாக இந்த Xstream பாக்ஸ் ஏர்டெல் ப்ராட்பேண்ட் சேவையின் மூலமாக மட்டுமல்லாது இதர ப்ராட்பேண்ட் சேவைகளின் கீழும் இயங்கும் என்பது கூடுதல் சிறப்பாக உள்ளது.

மேலும் பார்க்க: சின்னச் சின்ன சில்லரை வேலைகளுக்கு இனி ‘ஸ்விகி கோ’..!

Loading...

சீரமைக்கப்படாத மதுரை மீனாட்சி கோவில்!
First published: September 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...