• HOME
  • »
  • NEWS
  • »
  • technology
  • »
  • Airtel - Jio - Vodafone Idea டாப் ப்ரீபெய்ட் பிளான்கள்

Airtel - Jio - Vodafone Idea டாப் ப்ரீபெய்ட் பிளான்கள்

ஏர்டெல் vs ஜியோ vs வோடபோன் ஐடியா

ஏர்டெல் vs ஜியோ vs வோடபோன் ஐடியா

ஏர்டெல்லை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் அதன் பெரும்பாலான பிளான்களின் விலையை உயர்த்தி இருக்கிறது.

  • Share this:
நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை 20 முதல் 25 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தி இருப்பது வாடிகையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஆனால் அதே சமயம் வரும் 26-ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ள இந்த விலை உயர்வுக்கு முன், வேலிடிட்டி முடிவதற்கு முன்பே பழைய விலையில் ரீசார்ஜ் செய்ய நினைப்போர் செய்து கொள்ளலாம்.

தற்போதைய ஸ்கீம் முடிந்த பின் புதிய ரீசார்ஜ் ஸ்கீமின் வேலிடிட்டி துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏர்டெல்லை தொடர்ந்து .வோடபோன் ஐடியா நிறுவனமும் அதன் பெரும்பாலான பிளான்களின் விலையை உயர்த்தி இருக்கிறது. இதுவரை ஜியோ அதன் ப்ரீபெய்ட் பிளான்களுக்கான விலை உயர்வை அறிவிக்கவில்லை. இப்போது மேற்கண்ட 3 டெலிகாம் நிறுவனங்களின் பல பிளான்களுக்கான விலைகளை இங்கே ஒப்பிட்டு பார்க்கலாம்.எனினும் விலை வித்தியாசத்தில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என்பதையும் இங்கே நினைவில் கொள்ளவும்.

28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட அன்லிமிட்டட் கால்ஸ் பிளான்கள்..

* புதிய விலை உயர்வின்படி ஏர்டெல்லின் அடிப்படை அன்லிமிட்டட் கால்ஸ் பிளான் இப்போது ரூ.179-க்கு துவங்குகிறது. நாளொன்றுக்கு 1GB டேட்டா + 100 SMS-கள் வழங்கப்படுகின்றன. ரூ.299 பிளானானது ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா, ரூ.359 பிளான் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவுடன் அதே நன்மைகளை தருகிறது.

* ஏர்டெல்லுடன் ஒப்பிடுகையில் ஜியோவின் பேஸ் அன்லிமிட்டட் பிளான் ரூ.149-க்கு துவங்குகிறது. இதில் 24 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிட்டட் கால்ஸ், ஒரு நாளைக்கு 1GB டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS-கள் ஆகியவை அடங்கும். ரூ.199-க்கு 28 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 1.5GB டேட்டாவும், ரூ.249-க்கு நாளொன்றுக்கு 2GB டேட்டா, ரூ.349 பேக்கில் ஒரு நாளைக்கு 3GB டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

* வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.299 பிளானில் 28 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால்ஸ் நாளொன்றுக்கு 100 SMS-கள் வழங்குகிறது. அதுவே ஒரு நாளைக்கு 2GB வழங்கும் ஸ்கீமின் விலை இப்போது ரூ.359 ஆகும்.

56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட அன்லிமிட்டட் கால்ஸ் பிளான்கள்...

* 56 நாட்கள் அல்லது சுமார் இரண்டு மாத வேலிடிட்டிக்கு ஏர்டெல் 2 அன்லிமிட்டட் பிளான்களை வழங்குகிறது. இதன்படி ரூ.479 பிளானில் நாள் ஒன்றுக்கு 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது, ரூ.549 பிளானில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது. இரண்டு திட்டங்களிலும் அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை அடங்கும்.

* ஜியோவில் ரூ.399 ஸ்கீம் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டாவும், ரூ.666 ஸ்கீம் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவும் வழங்குகின்றன. 2 பிளான்களிலும் அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS-கள் அடங்கும்.

* வோடபோன் ஐடியா ரூ.479 பிளானில் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டாவும், ரூ.539-க்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டாவும் வழங்குகிறது.

84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட அன்லிமிட்டட் பிளான்கள்...

* ஏர்டெல் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 3 ஸ்கீம்களை வழங்குகிறது. ரூ.455-க்கு மொத்தம் 6 டேட்டா, ரூ.719-க்கு நாளொன்றுக்கு 1.5GB டேட்டா, ரூ.839-க்கு நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா வழங்கப்படுகிறது.

Also read... நீங்க ஆண்ட்ராய்டு மொபைல் யூஸ் பண்றீங்களா? அப்போ இந்த 'ஜோக்கர்' வைரஸ் கிட்ட இருந்து தப்பிச்சிடுங்க!

* ஜியோ ஒரு நாளைக்கு 1.5GB டேட்டாவை ரூ.555-க்கும், 2GB டேட்டாவை ரூ.888-க்கும், 3GB டேட்டாவை ரூ.999-க்கும் வழங்குகிறது.

* அதே போல வோடபோன் ஐடியா ஒரு நாளைக்கு 1.5GB டேட்டாவை ரூ.719 மற்றும் 2GB டேட்டாவை ரூ.839-க்கு வழங்குகிறது. மேலும் ரூ.459-க்கு 6GB டேட்டா வழங்கும் பிளானும் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: