தினசரி 4 ஜிபி டேட்டா திட்டங்களுடன் Vi வழங்கும் அதே நேரத்தில், ஜியோ தனது தினசரி ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு ரூ .50 தள்ளுபடி வழங்குகிறது.
ஏர்டெல், ஜியோ, Vi, 1.5 ஜிபி மற்றும் 2ஜிபி டேட்டா ப்ரீபெயிட் திட்டங்களை வழங்குகின்றன. இந்தத் திட்டங்கள் 56 மற்றிம் 84 நாட்கள் வரை செல்லுபடியாகும். 56 நாள் வரை செல்லுபடியாகும் திட்டங்களுக்கு பெரும்பாலும் ரூ 500க்கு கீழ் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், 84 நாள் செல்லுபடியாகும் திட்டங்களுக்கு ரூ .700க்கு குறைவாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் Vi ஆகியவை, தற்போது புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஏற்றது போல, அதிக நன்மைகள் மற்றும் கூடுதல் வேலிடிட்டி காலத்தோடு புதிய திட்டங்களை இந்த நிறுவனங்கள் அவ்வப்போது அறிமுகப்படுத்தி வந்துள்ளது. இருந்தாலும், பெரும்பாலான இந்த ப்ரீபெயிட் திட்டங்களில், ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் 2 ஜிபி டேட்டாவுடன் 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வரை செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்ட அடிப்படை திட்டமாக மட்டுமே இருக்கின்றன.
Also Read : ₹96,000 விலை கொண்ட ஏசியை வெறும் ₹5,800க்கு விற்ற அமேசான்... ஏமாந்து போன வாடிக்கையாளர்கள்!
அன்றாட டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை விரும்பும் யூசர்களுக்கு இந்த ப்ரீபெயிட் திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நாங்கள் கீழே குறிப்பிட்டுள்ள திட்டங்கள் 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வரை செல்லுபடியாகும் வேலிடிட்டி கொண்டுள்ளது.
இந்தத் திட்டங்களைத் தேர்வு செய்யும் யூசர்கள் ஒவ்வொரு மாதமும் ரீசார்ஜ் வேண்டும் என்ற நெருக்கடி மற்றும் மாதாந்திர ரீசார்ஜ் தொந்தரவுகளை எதிர்கொள்ள வேண்டியதில்லை. வருடாந்திரத் திட்டங்களைத் தேடாத, ஆனால் ஒப்பீட்டளவில் பெரிய வேலிடிட்டியை விரும்பும் பயனர்களுக்கும் இந்த திட்டங்கள் மிகவும் உதவியாக இருக்கும்.
யூசர்கள் தினசரி 1.5 ஜிபி டேட்டா திட்டங்கள் தேடும் போது, வெவ்வேறு வேலிடிட்டி காலங்கள் கொண்ட திட்டங்கள் உள்ளன. 84 நாட்கள் வேலிடிட்டிக்கும் குறைவான, குறுகிய கால வேலிடிட்டி திட்டங்கள் வேண்டும் என்பவர்களுக்கு, பல திட்டங்களை நெட்வொர்க் நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. அதில், ரூ500க்கும் குறைவான திட்டங்கள் கிடைக்கின்றன.
ஏர்டெல், ஜியோ மற்றும் Vi ஆகிய மூன்று நிறுவனங்களும் 1.5 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 56 நாட்கள் வேலிடிட்டி உள்ள திட்டத்தை ரூ399க்கு வழங்குகின்றன.
Also Read : ‘உங்கள் மனைவியை ரொம்ப பிடித்திருக்கிறது..’ கணவரின் கண் எதிரில் எதிர் வீட்டு ரோமியோ செய்த அடாவடி!
ஏர்டெல், ஜியோ, Vi, 1.5 ஜிபி மற்றும் 2 ஜிபி டேட்டா ப்ரீபெயிட் திட்டங்கள் ரூ 500க்கும் குறைவான விலையில் வழங்குகிறது
ஏர்டெல் ரூ 399 ப்ரீபெயிட் திட்டம் :
ஏர்டெல் புதிய ப்ரீபெயிட் ரீசார்ஜ் திட்டம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன், வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 56 நாட்கள் வரை வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இந்த திட்டத்தில் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றிற்கான சந்தாவும் உள்ளது.
ஜியோ ரூ 399 ப்ரீபெய்ட் திட்டம்:
ஜியோ இந்த ரீசார்ஜ் திட்டத்தை, வரம்பற்ற அழைப்புகளுடன் தினசரி 1.5 ஜிபி டேட்டா, 56 நாட்களுக்கு வேலிடிட்டி மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றோடு வழங்குகிறது.
Vi ரூ 399 ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் மற்றும் ஜியோவைப் போலவே, Vi யும் ரூ .339 ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இதில் 1.5 ஜிபி தினசரி டேட்டா, வரம்பற்ற அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கியுள்ளது. இந்த திட்டத்தில் Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகலுடன் வார இறுதியில் டேட்டா ரோல் ஓவர் செய்யும் நன்மைகளையும் வழங்குகிறது.
Also Read : வீட்டுக்கு வந்த மகளின் பாய் ஃபிரண்டை கட்டி வைத்து அடித்தே கொன்ற தந்தை! - உதவிய நண்பருக்கு சிக்கல்..
இந்தத் திட்டம் இரவுநேர சலுகையை அதிகமாகக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, செயலியின் மூலம் ரீசார்ஜ் செய்யும்போது 5 ஜிபி கூடுதல் தரவை வழங்குகிறது.
ஏர்டெல், ஜியோ மற்றும் Vi ப்ரீபெய்ட் திட்டங்கள் 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் 56 நாட்கள் வேலிடிட்டி
ஏர்டெல் ரூ 449 ப்ரீபெய்ட் திட்டம்:
ஏர்டெல் புதிய ப்ரீபெயிட் ரீசார்ஜ் திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்புகள் மற்றும் 56 நாட்கள் வரை வேலிடிட்டி ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உள்ளது. மேலும், பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றிற்கான சந்தாவும் உள்ளது.
ஜியோ ரூ 444 ப்ரீபெய்ட் திட்டம்:
ஜியோ இந்த ரீசார்ஜ் திட்டத்தை, வரம்பற்ற அழைப்புகளுடன் தினசரி 2 ஜிபி டேட்டா, 56 நாட்களுக்கு வேலிடிட்டி மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றோடு வழங்குகிறது. இதனுடன், ஜியோ செயலிகளுக்கு இலவச சந்தாவையும் வழங்குகிறது.
Also Read : பக்கத்து வீட்டுக்கு விளையாட சென்ற மகளின் கைகளை பொசுக்கிய சைக்கோ தாய்.. ஆத்திரத்தில் வெறிச்செயல்!
Vi ரூ 449 ப்ரீபெய்ட் திட்டம்:
இது டபுள் டேட்டா ப்ரீபெய்ட் திட்டம், 56 நாட்களுக்கு 4 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் வரம்பற்ற அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தில் இரவுநேர சலுகை மற்றும் வார இறுதி டேட்டா ரோல் ஓவர் ஆகியவை உள்ளன.
தினசரி 1.5 ஜிபி டேட்டா மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி :
Vi ரூ599 ப்ரீபெய்ட் திட்டம்:
Vi வழங்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டம் தினசரி1.5 ஜிபி டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற அழைப்பையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளாக, இரவு நேரத்தின் வேகமான டேட்டா, இரவுநேர நன்மை, வார இறுதி தரவு ரோல்ஓவர் மற்றும் Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான அணுகல் ஆகியவை அடங்கியுள்ளன. Vi செயலின் மூலம் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு, 5 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும்.
Vi ரூ 699 ப்ரீபெய்ட் திட்டம் :
Vi வோடபோன் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டபுள் டேட்டாவை அளிக்கிறது. எனவே, இந்த ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 4 ஜிபி தரவை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும், வரம்பற்ற லோக்கல் மற்றும் உள்நாட்டு அளவிலான அழைப்புகளை வழங்குகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஒரு நாளைக்கு 100 லோக்கல் மற்றும் உள்நாட்டு எஸ்.எம்.எஸ் ஆகியவற்றையும் வழங்குகிறது. வார நாட்களில் பயன்படுத்தப்படாத தரவை, வார இறுதி நாட்களில் பயன்படுத்தும் அம்சத்தை இந்த திட்டம் வழங்குகிறது.
Also Read : ஆன்லைன் வகுப்புக்காக அடர்ந்த வனப்பகுதிக்குள் மாணவர்களின் திகில் பயணம்.. ஒரு ஷாக் ரிப்போர்ட்!
ஏர்டெல் ரூ 598 ப்ரீபெய்ட் திட்டம்:
இந்த திட்டம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளாக. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிரீமியம், இலவச ஹலோடியூன்ஸ், விங்க் இசை, இலவச ஆன்லைன் கோர்ஸ்கள் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ150 கேஷ்பேக் ஆகியவை வழங்கப்படுகின்றன.
ஏர்டெல் ரூ 698 ப்ரீபெய்ட் திட்டம்:
இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை, வரம்பற்ற அழைப்புகளுடன் வழங்குகிறது. மேலும், இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகள், மேலே கூறப்பட்ட திட்டத்திற்கு ஒத்தவை.
ரூ 598 க்கு மேல் உள்ள ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு, ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் இருந்து ரீசார்ஜ் செய்யும் யூசர்களுக்கு ஆறு 1 ஜிபி கூப்பன்களை ஏர்டெல் வழங்குகிறது. அதாவது இந்த திட்டத்தில் கூடுதல் 6 ஜிபி தரவைப் பெற முடியும்.
ஜியோ ரூ 555 ப்ரீபெய்ட் திட்டம்:
இந்த ரீசார்ஜ் திட்டம் 1.5 ஜிபி தினசரி டேட்டா மற்றிம் 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஜியோவிலிருந்து, நாட்டின் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற உள்நாட்டு அழைப்புகள் பயன்படுத்தும் அம்சம் உள்ளது. மேலும், ஜியோ செயலிகளுக்கான இலவச சந்தாவுடன் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஜியோ ரூ 599 ப்ரீபெய்ட் திட்டம்:
இந்த ப்ரீபெய்ட் திட்டம் 2 ஜிபி தினசரி டேட்டாவை 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. இந்த திட்டம், ஜியோவிலிருந்து நாட்டின் எந்த நெட்வொர்க்குக்கும் வரம்பற்ற உள்நாட்டு அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டத்தில் ஜியோ செயலிகளின் சந்தாவுடன், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் அம்சமும் அடங்கியுள்ளது.
மேற்கண்ட திட்டங்களைப் பார்க்கும்போது, Vi இரட்டை டேட்டாவை வழங்குவதால் அதிக டேட்டா நன்மைகளை அளிக்கிறது என்று முடிவு செய்யலாம். அதாவது 4 ஜிபி தினசரி டேட்டா திட்டங்களுடன் அதிக பலன்கள் அளிப்பதாக காணப்படுகிறது. அதே நேரத்தில், ஜியோ நெட்வொர்க் தினது தினசரி ப்ரீபெய்ட் திட்டங்களில் ரூ .50 தள்ளுபடியுடன் வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Airtel, Idea, Jio, Reliance Jio, Vodafone