தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ ரூ. 1000க்கு கீழ் எண்ணற்ற ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது, இதில் 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் சேவைகள் உள்ளிட்டவை அடங்கும். ஸ்ட்ரீமிங் நன்மைகளுடன் தினசரி டேட்டாவையும் தேடும் யூசர்களுக்கு இந்த ப்ரீபெய்டு பிளான்கள் நன்மை அளிக்கிறது.
ஏர்டெல், ஜியோ மற்றும் விஐ நிறுவனங்கள் சமீபத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிளான்களை அப்டேட் செய்துள்ளது. எனவே தற்போது ஸ்ட்ரீமிங் சேவையின் அடிப்படைத் திட்டங்கள் ரூ. 499 என்ற ஆரம்ப விலையில் இருந்து தொடங்குகிறது. மேலும் ரூ.1000க்கு கீழ் உள்ள ப்ரீபெய்ட் பிளான்கள் 84 நாட்கள் செல்லுபடியாகும். என்னென்ன பிளான்கள் உள்ளன என்பது குறித்து இங்கு காண்போம்.,
ஏர்டெல் :
ஏர்டெல் நிறுவனம் ரூ.298, ரூ.449, ரூ.698 மற்றும் ரூ.699 என்ற விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. அனைத்து திட்டங்களிலும் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.ரூ.298ல் வழங்கும் பிளானின் வேலிடிட்டி 28 நாட்கள், ரூ.449 ல் வழங்கும் பிளானின் வேலிடிட்டி 56 நாட்கள், ரூ.698ல் வழங்கும் பிளானின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் ரூ.699 ப்ரீபெய்ட் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சேவை வழங்கப்படுகிறது.
எனவே மொபைலில் இருந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அணுக்கலை பெற முடியும், தற்போது ஐபிஎல் நடைபெற்று வருகிறது மற்றும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் வர இருப்பதால் இந்த பிளான் பெரும்பாலானோருக்கு தேவைப்படுகிறது. இந்த பிளானில் 2 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றுடன் 56 நாட்கள் செல்லுபடியாகும். இந்தத் திட்டங்கள் பயனர்களுக்கு அமேசான் ப்ரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான அணுகலை வழங்கும், எனவே மொபைல் பயனர்கள் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் ஆகியவற்றுக்கான அணுகலைப் பெறுவார்கள்.
ஜியோ :
ஜியோ நிறுவனம் தினசரி 2 ஜிபி தினசரி டேட்டா பிளான்களை ரூ.249, ரூ.444, ரூ.599, ரூ.666 மற்றும் ரூ.888 என்ற விலைகளில் வழங்குகிறது. இந்த அனைத்து திட்டங்களிலும் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. ரூ .249 பிளான் 28 நாட்கள், ரூ .444 பிளான் 56 நாட்கள் மற்றும் ரூ .599 ப்ரீபெய்ட் பிளான் 84 நாட்களும் செல்லுபடியாகும்.
மேலும் ரூ .666 பிளானில் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ்களுக்கான அணுகல் கிடைக்கிறது, இந்த பிளானின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். மேலும் ரூ .888 ப்ரீபெய்ட் பிளானிலும் இதே சேவைகள் கிடைக்கிறது, இந்த பிளானின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
Also read... Android 11 கொண்ட ரெட்மி ஸ்மார்ட் டிவி-க்கள் இந்தியாவில் அறிமுகம் - விலை மற்றும் சிறப்பம்சங்கள்!
விஐ நிறுவனம் :
விஐ நிறுவனம் 2 ஜிபி தினசரி டேட்டா பிளான்களை ரூ.299, ரூ .449 மற்றும் ரூ .699 என்ற விலைகளில் வழங்குகிறது. இந்த மூன்று பிளான்களிலும் தினசரி 4 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட அம்சங்களை வழங்குகிறது.
Vi's Disney+ Hotstar திட்டங்கள் முன்பு ரூ. 401, ரூ .601 மற்றும் ரூ .801 என்ற மூன்று பிளான்களில் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ .100 உயர்த்தப்பட்டு ரூ .501, ரூ .701 மற்றும் ரூ .901 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ .501 பிளானில் 28 நாட்களுக்கு 100 ஜிபி டேட்டா, ரூ .701 பிளானில் 56 நாட்களுக்கு 200 ஜிபி டேட்டா மற்றும் ரூ .901 விலையில் 84 நாட்களுக்கு 300 ஜிபி டேட்டாவும் வழங்கப்படுகிறது.
இந்த பிளான்கள் அனைத்திலும் அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. மேலும் விஐ நிறுவனம் ரூ. 601 விலையில் 56 நாட்களுக்கு செல்லுபடியாகும் 75GB டேட்டாவை வழங்குகிறது. இந்த பிளான் முன்னர் ரூ.501 என இருந்த நிலையில் தற்போது ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடடதக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.