Airtel, Jio, BSNL, VI ... அதிரடி ரீசார்ஜ் பிளான்கள்!

ரீசார்ஜ் பிளான்ஸ்

ரூ. 449 ப்ரீபெய்ட் திட்டம் 56 நாட்களுக்கு 4 GB தினசரி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது.

  • Share this:
தொலைத்தொடர்பு நிறுவனங்களான Airtel, Jio, BSNL மற்றும் VI ஆகியவை தினசரி 2 GB டேட்டாவை வழங்கும் பல்வேறு திட்டங்களை வழங்குகின்றன. இந்த 2GB டேட்டா திட்டங்கள் அனைத்தும் தினசரி இலவச கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் வருகின்றன. வைஃபை அல்லது இணைய அணுகலை வழங்கும் பிற வழிகளை பயன்படுத்தும் யூசர்களுக்கு, 2 ஜிபி தினசரி டேட்டா மற்றும் அதனுடன் கிடைக்கும் பிற நன்மைகள் கிட்டத்தட்ட போதுமானதாக இருக்கும்.

நிறுவனங்களின் தற்போதைய டாரிப் உயர்வு எந்த ப்ரீபெய்ட் திட்டங்களையும் பாதிக்கவில்லை என்றாலும், கட்டண விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக யூகிக்கப்படுகிறது. எனவே யூசர்கள் அதற்கேற்ப திட்டங்களைத் தேர்வு செய்ய வேண்டும். அந்த வகையில் பின்வரும் திட்டங்கள் 2GB தினசரி டேட்டாவை 28 நாட்கள், 56 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வாலிடிட்டியுடன் வழங்குகிறது. அவை பின்வருமாறு:

28 நாட்கள் வாலிடிட்டியுடன் தினசரி 2GB டேட்டாவை வழங்கும் Airtel Vs Jio Vs VI பிளான்ஸ்:

* ஏர்டெலின் ரூ.298 ப்ரீபெய்ட் திட்டம்:  28 நாள் வாலிடிட்டி-யை வழங்கும் இந்த திட்டம் ஒரு நாளைக்கு 2GB டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளை வழங்குகிறது. கூடுதல் நன்மைகளில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சந்தா மற்றும் வின்க் மியூசிக், இலவச ஆன்லைன் படிப்புகளுக்கான அணுகல் மற்றும் ஃபாஸ்டேக்கில் ரூ.150 கேஷ்பேக் ஆகியவையும் அடங்கும். மேலும், இந்த திட்டம் பாரதி ஆக்சா ஆயுள் காப்பீட்டிற்கான அணுகலையும் வழங்குகிறது. ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யும் யூசர்கள் இந்த ப்ரீபெய்ட் திட்டத்திற்கு ரூ.50 தள்ளுபடி மற்றும் 2 ஜிபி டேட்டாவை கூடுதலாக பெற முடியும். ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யும் யூசர்கள் ரூ.248 செலுத்தினால் போதும்.

ALSO READ |  ஜூம் செயலியின் புதிய அப்டேட்டால் மாணவர்கள் அதிர்ச்சி!

* ஜியோ-ன் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த ப்ரீபெய்ட் திட்டம் 28 நாள் வேலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவை வழங்குகிறது. அதன்படி இந்த திட்டத்திற்கு மொத்தம் 56 GB டேட்டா வழங்கப்படுகிறது. மேலும் ஜியோவிலிருந்து எந்த நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் லோக்கல் கால்ஸ்களை வழங்குகிறது. இந்த திட்டம் ஜியோ ஆப்களுக்கான இலவச சந்தாவுடன் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்-ஐ வழங்குகிறது.

* விஐ -ன் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்: இது ஒரு டூயல் டேட்டா ப்ரீபெய்ட் திட்டமாகும். மேலும், வார இறுதி நாட்களில் ரோல்ஓவர் டேட்டா நன்மையுடன் வருகிறது. இதன் பொருள் இந்தத் திட்டம் 28 நாட்களுக்கு 2 பிளஸ் 2, என 4 GB தினசரி டேட்டா மற்றும் வார இறுதி நாட்களில் டேட்டா ரோல்ஓவர் நன்மைகளை வழங்குகிறது. இதன் மூலம் யூசர்கள் தங்கள் வார நாட்களில் மிச்சப்படுத்தும் டேட்டாவை சேகரித்து வார இறுதி நாட்களில் ஒன்றாகப் பயன்படுத்த முடியும், இது வீடியோ ஸ்ட்ரீமிங்கிற்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த திட்டம் 28 நாட்களுக்கு அன்லிமிடெட் கால்ஸுடன் ஒரு நாளைக்கு 4 ஜிபி தரவை வழங்குகிறது. இது தவிர வி மூவிஸ் மற்றும் டிவி அணுகல் மூலம் சோமாட்டோவிலிருந்து உணவு ஆர்டர்கள் செய்யமுடியும். மேலும் யூசர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டுகளை MPL இல் ரூ .75 தினசரி தள்ளுபடியுடன் விளையாட ரூ.125 உறுதியளிக்கப்பட்ட போனஸ் ரொக்கத்தையும் பெறுகிறார்கள்.

ALSO READ |  ஆகஸ்ட் 2021: இந்தியாவில் 10,000 ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட் ஃபோன்களின் பட்டியல்

56 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 2GB டேட்டாவை வழங்கும் Airtel vs Jio vs Vi vs BSNL ப்ரீபெய்ட் பிளான்ஸ்:

* விஐ -ன் ரூ. 449 ப்ரீபெய்ட் திட்டம்: இது டூயல் டேட்டாவை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டமாகும். அதன்படி 56 நாட்களுக்கு 4 GB தினசரி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது. இந்த திட்டம் அதிக இரவு சலுகை மற்றும் வார இறுதி ரோல்ஓவர் டேட்டா நன்மையையும் தருகிறது.

* ஜியோ-வின் ரூ.444 ப்ரீபெய்ட் திட்டம்: ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டம் அன்லிமிடெட் கால்களுடன் 2 GB தினசரி டேட்டா மற்றும் ஜியோ ஆப்களுக்கான ஒரு இலவச சந்தாவுடன் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களை வழங்குகிறது.

* ஏர்டெல்-ன் ரூ.449 ப்ரீபெய்ட் திட்டம்: ஏர்டெல்லின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 GB டேட்டாவுடன் அன்லிமிடெட் கால்ஸ் நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது. இது பிரைம் வீடியோ மொபைல் வெர்ஷன், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றுக்கான சந்தாவையும் வழங்குகிறது

ALSO READ | "கோவிட் தடுப்பூசிகள் மனிதர்களை சிம்பன்ஸிகளாக மாற்றும்" தவறாக செய்தி பரப்பிய 300 கணக்குகளை நீக்கிய பேஸ்புக்!

* பிஎஸ்என்எல்-ன் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்: இது ஒரு நாளைக்கு 5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் 250 நிமிட அழைப்பு நிமிடங்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. இது மேலும் இலவச PRBT-ஐ வழங்குகிறது. இருப்பினும் இந்த திட்டம் வரையறுக்கப்பட்ட வட்டங்களில் கிடைக்கிறது மற்றும் பயனர்கள் அதைப் பரிசீலிப்பதற்கு முன்பு கிடைக்கிறதா என்று சோதிக்க வேண்டும்.

* இதுதவிர பிஎஸ்என்எல் 60 நாட்கள் வாலிடிட்டியை ரூ. 447 என்ற ரீசார்ஜ் திட்டத்துடன் வழங்குகிறது. இது 100 ஜிபி டேட்டாவை அதிக வேகத்தில் கொடுக்கிறது அதன் பிறகு வேகம் 80 Kbps ஆக குறைக்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்-களை வழங்குகிறது. இது பிஎஸ்என்எல் ட்யூன்ஸ் மற்றும் ஈரோஸ் நவ் அணுகலுடன் வருகிறது.

ALSO READ |  இத்தனை அம்சங்களுடன் கூடிய மோட்டோரோலா Edge 20 மற்றும் Edge 20 Fusion ஸ்மார்ட்போன்களின் விலை இவ்வளவு தானா?

84 நாட்கள் வேலிடிட்டியுடன் தினசரி 2GB டேட்டாவை வழங்கும் Jio vs Vi ப்ரீபெய்ட் திட்டங்கள்:

* ஜியோ-ன் ரூ.599 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும் 2 ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டம் நாட்டின் எந்த நெட்வொர்க்கிற்கும் ஜியோவிலிருந்து அன்லிமிடெட் லோக்கல் கால்ஸ்களை வழங்குகிறது. இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்ஸை ஜியோ ஆப்களுக்கான காம்ப்ளிமெண்டரி சந்தாவுடன் வழங்குகிறது.

* Vi-ன் ரூ. 699 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த ப்ரீபெய்ட் திட்டத்துடன் Vi Vodafone டூயல் டேட்டாவை வழங்குகிறது. இதனால், இந்த ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 4 ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு வழங்கும். இந்த திட்டம் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் உண்மையிலேயே அன்லிமிடெட் லோக்கல் மற்றும் நேஷனல் அழைப்புகளை வழங்குகிறது. ப்ரீபெய்ட் திட்டம் ஒரு நாளைக்கு 100 லோக்கல் மற்றும் நேஷனல் எஸ்எம்எஸ்களை வழங்குகிறது. மேலும் பயன்படுத்தப்படாத டேட்டாக்களை வார இறுதி நாட்களில் பயன்படுத்த யூசர்களுக்கு ரோல்ஓவர் டேட்டாவையும் வழங்குகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: