ஏர்டெல், வோடபோன் கட்டணங்கள் உயர்கின்றன... டிசம்பர் 1 முதல் அமல்..

Airtel - Vodafone - Idea | ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கூட்டாக இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் 74 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன.

ஏர்டெல், வோடபோன் கட்டணங்கள் உயர்கின்றன... டிசம்பர் 1 முதல் அமல்..
ஏர்டெல், வோடபோன், ஐடியா
  • News18
  • Last Updated: November 18, 2019, 8:49 PM IST
  • Share this:
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனம் தங்களது கட்டணங்களை வருகிற டிசம்பர் 1-ம் தேதி உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.

கட்டண உயர்வு குறித்து வோடபோன் ஐடியா நிறுவனம் கூறுகையில், “நிறுவனத்தில் கடுமையான நிதி நெருக்கடி நிலவுவதை அனைத்து பங்குதாரர்களும் உணர்ந்துள்ளார்கள். இந்த நிதி நெருக்கடியிலிருந்து மீள தேவையானவற்றைச் செய்ய செயலாளர் மற்றும் முக்கிய உறுப்பினர்கள் உள்ளடக்கிய கமிட்டு ஆராய்ந்து வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வோடபோன் வெளியிட்டுள்ள குறிப்பில், “சர்வதேச அளவில் மொபைல் டேட்டா கட்டணங்கள் இந்தியாவில்தான் மிகவும் குறைவு. இத்துறை இன்னும் மிகப்பெரிய வளர்ச்சி காணும். காரணம், அதற்கான தேவை அங்கு அதிகம்” என்றுள்ளது.


அதேபோல், ஏர்டெல் நிறுவனமும் தனது கால் கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் கூட்டாக இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் 74 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளன. வோடபோன் இந்தியா தன்னை அதிவிரைவில் வளர்த்துக்கொண்டு வருகிற 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 1 பில்லியன் இந்தியர்களுக்கு 4ஜி சேவையை வழங்குவோம் என உறுதி எடுத்துள்ளது.

மேலும் பார்க்க: ஜியோமியின் அத்தனை ஸ்மார்ட்போன்களும் 5ஜி ஆகவே வெளியாகும்..!
First published: November 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading