முகப்பு /செய்தி /தொழில்நுட்பம் / ஏர்டெல், வோடஃபோனைவிட குறைவான கட்டணம்.. ஜியோ ரீசார்ஜ் முழு விவரம்

ஏர்டெல், வோடஃபோனைவிட குறைவான கட்டணம்.. ஜியோ ரீசார்ஜ் முழு விவரம்

கட்டண விவரம்

கட்டண விவரம்

ஏர்டெல் (Airtel), வோடபோன் -ஐடியா (Vodafone idea) ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து தற்போது ஜியோவும் (Jio) கட்டணத்தை உயர்த்தியுள்ளது.  எனினும் மற்ற இரு நிறுவனங்களின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது ஜியோவின் கட்டணம் குறைவாகவே உள்ளது

  • Last Updated :

ஏர்டெல் (Airtel), வோடஃபோன் -ஐடியா (Vodafone idea) ஆகிய தொலைத் தொடர்பு நிறுவனங்களை தொடர்ந்து ஜியோவும் (jio) தனது  ப்ரீபெயிட் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. எந்த நெட்வொர்க்கின் கட்டணம் குறைவாக உள்ளது என்பதை பார்ப்போம்.

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல் தனது ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை 20 முதல் 25 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியது. நவம்பர் 26ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து வோடபோன் - ஐடியா நிறுவனமும் கட்டணங்களை உயர்த்தியது.  ஏர்டெல், வோடபோன் -ஐடியா ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து தற்போது ஜியோவும் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.  எனினும் மற்ற இரு நிறுவனங்களின் கட்டணத்துடன் ஒப்பிடும்போது ஜியோவின் கட்டணம் குறைவாகவே உள்ளது

28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட அன்லிமிட்டட் கால்ஸ் பிளான்கள்..

* புதிய விலை உயர்வின்படி ஏர்டெல்லின் அடிப்படை அன்லிமிட்டட் கால்ஸ் பிளான் இப்போது ரூ.179-க்கு துவங்குகிறது. நாளொன்றுக்கு 1GB டேட்டா + 100 SMS-கள் வழங்கப்படுகின்றன. ரூ.299 பிளானானது ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா, ரூ.359 பிளான் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவுடன் அதே நன்மைகளை தருகிறது.

* வோடபோன் ஐடியா நிறுவனம்  ரூ.269 பிளானில் 28 நாட்கள் வேலிடிட்டி, தினசரி 1 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிட்டர் கால் வசதியை வழங்குகிறது. ரூ.299 பிளானில் 28 நாட்கள் வேலிடிட்டி, ஒரு நாளைக்கு 1.5GB டேட்டா மற்றும் அன்லிமிட்டட் கால்ஸ் நாளொன்றுக்கு 100 SMS-கள் வழங்குகிறது. அதுவே ஒரு நாளைக்கு 2GB வழங்கும் ஸ்கீமின் விலை இப்போது ரூ.359 ஆகும்.

* ஜியோ நிறுவனத்தின் ரூ.239 பிளானில் 28 நாட்கள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 1.5GB டேட்டா + 100 SMS அன்லிமிட்டட் கால்ஸ் வசதி வழங்கப்படுகிறது. ரூ.299 பிளானில் 28 நாட்கள் வேலிடிட்டி, நாளொன்றுக்கு 2 GB டேட்டா + 100 SMSம் அன்லிமிட்டட் கால்ஸ் வசதியும் வழங்கப்படுகின்றன.

56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட அன்லிமிட்டட் கால்ஸ் பிளான்கள்...

* 56 நாட்கள் அல்லது சுமார் இரண்டு மாத வேலிடிட்டிக்கு ஏர்டெல் 2 அன்லிமிட்டட் பிளான்களை வழங்குகிறது. இதன்படி ரூ.479 பிளானில் நாள் ஒன்றுக்கு 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது, ரூ.549 பிளானில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது. இரண்டு திட்டங்களிலும் அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை அடங்கும்.

* ஜியோவில் ரூ.479 ஸ்கீம் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டாவும், ரூ.533 ஸ்கீம் ஒரு நாளைக்கு 2GB டேட்டாவும் வழங்குகின்றன. 2 பிளான்களிலும் அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS-கள் அடங்கும்.

* வோடபோன் ஐடியா ரூ.479 பிளானில் ஒரு நாளைக்கு 1.5GB டேட்டாவும், ரூ.539-க்கு ஒரு நாளைக்கு 2GB டேட்டாவும் வழங்குகிறது.

84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட அன்லிமிட்டட் பிளான்கள்...

* ஏர்டெல் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட 3 ஸ்கீம்களை வழங்குகிறது. ரூ.455-க்கு மொத்தம் 6 டேட்டா, ரூ.719-க்கு நாளொன்றுக்கு 1.5GB டேட்டா, ரூ.839-க்கு நாள் ஒன்றுக்கு 2GB டேட்டா வழங்கப்படுகிறது.  மூன்று  திட்டங்களிலும் அன்லிமிட்டட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவை அடங்கும்.

* ஜியோ  ரூ.395-க்கு மொத்தம் 6 டேட்டா, ஒரு நாளைக்கு 1.5GB டேட்டாவை ரூ.666-க்கும், 2GB டேட்டாவை ரூ.719-க்கும் வழங்குகிறது.

top videos

    * அதே போல வோடபோன் ஐடியா ஒரு நாளைக்கு 1.5GB டேட்டாவை ரூ.719 மற்றும் 2GB டேட்டாவை ரூ.839-க்கு வழங்குகிறது. மேலும் ரூ.459-க்கு 6GB டேட்டா வழங்கும் பிளானும் உள்ளது.

    First published:

    Tags: Airtel, Jio, Vodafone