HOME»NEWS»TECHNOLOGY»airtel users can now enjoy free youtube premium subscription for 3 months heres how vin ghta

ஏர்டெல் வாடிக்கையாளர்களே... 3 மாத இலவச யூடியூப் பிரீமியம் சந்தாவை பெறுங்கள்!

யூடியூப் பிரீமியம் சந்தாவைத் தவிர, ஏர்டெல் பயனர்கள் நிறுவனம் குறிப்பிட்டபடி டாஸ்க்குகளை முடிப்பதன் மூலம் Airtel Thanks ஆப்ஸின் மூலம் புதிய ரிவார்டுகளைப் பெறலாம். மேலும் பரிசு கூப்பன்கள் போன்ற சில அடிப்படை ரிவார்டுகளும் கிடைக்கின்றன, பிறந்த தேதி, விருப்பமான மொழி மற்றும் பல தனிப்பட்ட தகவல்களை வழங்கிய பிறகு உங்களுக்கு கிடைக்கும்.

ஏர்டெல் வாடிக்கையாளர்களே... 3 மாத இலவச யூடியூப் பிரீமியம் சந்தாவை பெறுங்கள்!
ஏர்டெல்
  • News18
  • Last Updated :
  • Share this:

Airtel Thanks ஆப்ஸ் என்பது முழு ஏர்டெல் உலகையும் உங்கள் உள்ளங்கையில் வைக்கும் ஒரு ஆப்ஸ் ஆகும். இதில் உங்கள் ரிவார்டுகளை  கோரலாம், ரீசார்ஜ் செய்யலாம், பணம் செலுத்தலாம் மற்றும் உங்கள் அனைத்து ஏர்டெல் இணைப்புகளையும் எங்கிருந்தும், எந்த நேரத்திலும், ஒரு பட்டனைக் கிளிக் செய்வதன் மூலம் நிர்வகிக்கக்கூடிய ஒரே ஒரு ஆதாரமாகும். உங்களுக்கு தேவையானது ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கியில் சேமிப்புக் கணக்கு மட்டுமே. பிங்கர்பிரிண்ட் ஸ்கேன் மூலம் ஓரிரு நிமிடங்களில் ஒரு கணக்கை திறக்கலாம்.

ஆண்ட்ராய்டு மற்றும் iOS க்கான Airtel Thanks ஆப்ஸின் மூலம் ஏர்டெல் மூன்று மாதங்களுக்கு இலவச யூடியூப் பிரீமியம் சந்தாவை வழங்குகிறது. சலுகையைப் பெற, பயனர்கள் 'More' பகுதிக்கு சென்று, அதன் இருப்பை சரிபார்க்க ரிவார்டுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். சலுகை தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது, இது மே 22, 2021 வரை செல்லுபடியாகும். 

யூடியூப் பிரீமியம் மூலம், பயனர்கள் விளம்பரமில்லாத வீடியோக்கள் (ad-free videos), பிளேபேக் விருப்பங்கள், YouTube Music மற்றும் YouTube Originals ஆகியவற்றிற்கான முழு அணுகலை அனுபவிக்க முடியும். இருப்பினும், யூடியூப் பிரீமியம் சந்தா புதிய யூடியூப் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என்றும், ஏற்கனவே ஸ்மார்ட்போன்களில் பிளானை செயலில் வைத்திருப்பவர்கள் சலுகையைப் பெற முடியாது என்றும் ஏர்டெல் எச்சரித்துள்ளது. 



YouTube Music Premium, YouTube Red, அல்லது Google Play Music சந்தாவைக் கொண்ட பயனர்கள் இந்த சலுகையைப் பெற முடியாது, என்று ஏர்டெல் அதன் இணையதளத்தில் கூறியுள்ளது. "நீங்கள் முன்பு YouTube Music Premium அல்லது Google Play Music சந்தா செலுத்தியிருந்தால் அல்லது நீங்கள் தற்போது YouTube Music Premium அல்லது Google Play Music சந்தாதாரராக இருந்தால், இந்த சலுகை யூடியூப் பிரீமியத்தின் இசை அல்லாத அம்சங்களின் சோதனை சேவையை மட்டுமே செயல்படுத்தும்," என்று The Telco விளக்குகிறது. 

Also read... Airtel, Vi, Reliance Jio Special Recharge | ஏர்டெல், விஐ, ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் அசத்தலான ரீசார்ஜ் சலுகைகள்..



ஏர்டெல்லின் இலவச யூடியூப் சந்தா முடிந்ததும், பயனர்களுக்கு மாதத்திற்கு ரூ. 129 வசூலிக்கப்படும். கூடுதலாக, பயனர்கள் திட்டம் செல்லுபடியாகும் முன் எந்த நேரத்திலும் இலவச மூன்று மாத சந்தாவை எந்த கட்டணமும் இன்றி ரத்து செய்யலாம். உங்கள் Airtel Thanks ஆப்ஸில் சலுகை காண்பிக்கப்படாவிட்டால், பயனர்கள் ஒரு படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் சோதனைக் குறியீட்டைக் பெறுவார்கள், இருப்பினும் குறியீடு தோன்றுவதற்கு ஆறு மாதங்கள் ஆகலாம். எதிர்பார்த்தபடி, YouTube பிரீமியத்தில் பதிவுபெற பயனர்களுக்கு Google கணக்கு தேவைப்படும். 

யூடியூப் பிரீமியம் சந்தாவைத் தவிர, ஏர்டெல் பயனர்கள் நிறுவனம் குறிப்பிட்டபடி டாஸ்க்குகளை முடிப்பதன் மூலம் Airtel Thanks ஆப்ஸின் மூலம் புதிய ரிவார்டுகளைப் பெறலாம். மேலும் பரிசு கூப்பன்கள் போன்ற சில அடிப்படை ரிவார்டுகளும் கிடைக்கின்றன, பிறந்த தேதி, விருப்பமான மொழி மற்றும் பல தனிப்பட்ட தகவல்களை வழங்கிய பிறகு உங்களுக்கு கிடைக்கும். இதற்கிடையில், ஏர்டெல் தனது பிராட்பேண்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் சந்தாதாரர்களுக்கு ஒரு வருடத்திற்கு இலவச டிஸ்னி + ஹாட்ஸ்டார் VIP சந்தாவை வழங்குகிறது. இருப்பினும், இது தேர்ந்தெடுக்கப்பட்ட பிளான்களில் கிடைக்கிறது. 
Published by:Vinothini Aandisamy
First published: