ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ்... ஏர்டெல் அதிரடி அறிவிப்பு...!

ரூ.129 பிளானில் தினமும் 1 ஜி.பி டேட்டா வழங்கப்பட்டுவந்த நிலையில், அது 2 ஜி.பியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: May 11, 2019, 9:55 AM IST
ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சம் மதிப்புள்ள இன்சூரன்ஸ்... ஏர்டெல் அதிரடி அறிவிப்பு...!
ஏர்டெல்
news18
Updated: May 11, 2019, 9:55 AM IST
தொலைத்தொடர்பு சந்தையில் போட்டியை சமாளிக்க ஏர்டெல் நிறுவனம், புதிய இரண்டு அறிவிப்புகளை அதிரடியாக வெளியிட்டுள்ளது.

இந்திய தொலைத்தொடர்புத்துறையில் முன்னணி இடத்தில் இருந்த ஏர்டெல் நிறுவனம், ஜியோ வருகைக்குப் பின்னர் சிறிது ஆட்டம் கண்டது. சந்தையில் தனது மதிப்பை தக்க வைத்துக்கொள்ள பழைய பிளான்களை தூக்கி வீசிவிட்டு, குறைந்த விலையில் டேட்டா பிளான்களை அறிமுகம் செய்தது.

எனினும், பெரிய அளவில் அதனால் பயன் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ரீசார்ஜ் செய்தால் இன்ஸ்சூரன்ஸ் பாலிசி இலவசம் என்ற திட்டத்தை ஏர்டெல் அதிரடியாக அறிவித்துள்ளது.


இதையும் படிங்க... தினமும் 3 பேருக்கு ரூ.1 லட்சம் - டிக்டாக் 

ரூ.249-க்கு ரீசார்ஜ் செய்தால் ரூ.4 லட்சம் மதிப்புள்ள லைஃப் இன்ஸ்சூரன்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. எச்.டி.எப்.சி மற்றும் பாரதி ஆக்சா நிறுவனங்கள் மூலம் இந்த இன்ஸ்சூரன்ஸ் பாலிசி வழங்கப்படுகிறது.

எனினும், இந்த இன்ஸ்சூரன்ஸை பெற சில விதிமுறைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இந்த ரூ.249 பிளானில் ரீசார்ஜ் செய்ய வேண்டும், 18 முதல் 54 வரையிலான வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading...

பார்க்க... ஒன்ப்ளஸ் 7 ப்ரோ முதல் ஹானர் 20 வரை...மே மாத புதிய வரவுகள்...!

ரீசார்ஜ் செய்தபின்னர் எஸ்.எம்.எஸ் மூலம் பாலிசி தொடர்பாக பதிவு செய்யலாம் அல்லது ஏர்டெல் அலுவலகங்களுக்குச் சென்று இதற்கான சான்றிதல்களை கொடுத்து பாலிசிக்கு பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ரூ.129 பிளானில் தினமும் 1 ஜி.பி டேட்டா வழங்கப்பட்டுவந்த நிலையில், அது 2 ஜி.பியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பிளான்கள் மூலம் அதிக வாடிக்கையாளர்களை கவரலாம் என்று ஏர்டெல் திட்டமிட்டுள்ளது.

First published: May 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...