Home » News » Technology » AIRTEL REVISES RS 199 PREPAID PLAN NOW OFFERS MORE DATA AT SAME PRICE SKV GHTA

ரூ.199 திட்டத்தில் தினமும் 1.5 GB டேட்டா.. Airtel அறிவித்த புதிய சலுகை..

ஏர்டெல் 3 மாநில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 199 ரூபாய் ப்ரீபெய்டு (prepaid) திட்டத்தில் டேட்டா உச்சவரம்பை அதிகரித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பு ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என ஏர்டெல் அறிவித்துள்ளது.

ரூ.199 திட்டத்தில் தினமும் 1.5 GB டேட்டா.. Airtel அறிவித்த புதிய சலுகை..
ஏர்டெல்
  • Share this:
ஏர்டெல் 3 மாநில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் 199 ரூபாய் ப்ரீபெய்டு (prepaid) திட்டத்தில் டேட்டா உச்சவரம்பை அதிகரித்துள்ளது.

Airtel -ன் புதிய திட்டம் :

ஏர்டெல் நிறுவனம் 199 ரூபாய் ப்ரீபெய்டு திட்டத்தை திருத்தி, நாள்ளொன்றுக்கு 1.5 GB தினசரி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்கும் வகையில் உயர்த்தியுள்ளது. ஏற்கனவே இருந்த திட்டத்தில் நாள்ளொன்றுக்கு 1 GB டேட்டா மட்டுமே கிடைத்தது. மாற்றியமைக்கப்பட்ட இந்த திட்டத்தில் அன்லிமிடெட் கால் (Unlimited calls) நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் வீதம் 24 நாட்களுக்கும், விங்க் மியூசிக் (Wynk Music) மற்றும் 350-க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்களைக் கொண்ட ஏர்டெல் Xstream பயன்பாட்டுச் சந்தா ஆகியவையும் கொடுக்கப்படுகிறது.


மேலும், இந்த புதிய அறிவிப்பு ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என ஏர்டெல் அறிவித்துள்ளது. ஏர்டெல்லின் 249 ரூபாய் ப்ரீபெய்டு திட்டத்தில் நாள்ளொன்றுக்கு 1.5GB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தை ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்கள் அல்லாத பிற மாநில ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். 249 ரூபாய் திட்டத்தில் கிடைக்கும் அதே சலுகைகள் 199 ரூபாய் திட்டத்திலும் கிடைப்பதால், மற்ற மாநிலங்களிலும் இந்த சலுகையை ஏர்டெல் கொடுக்க வேண்டும் என்பது வாடிக்கையாளர்களின் எதிர்பார்பாக உள்ளது.

ஜியோ vs ஏர்டெல் :

ஜியோ நிறுவனம் 28 நாட்களுக்கு வழங்கும் 199 ரூபாய் திட்டத்திலும் நாள்ளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவைப் பெறலாம். கூடுதலாக, IUC கட்டணங்களை ஜியோ அண்மையில் நீக்கியுள்ளதால் அனைத்து நிறுவனங்களுக்கும் அன்லிமிடெட் அழைப்புகளை வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளலாம். இதற்கு முன்னதாக குறிப்பிட்ட நிமிடங்கள் வழங்கப்பட்டு வந்தது. 28 நாட்களுக்கு, நாள்ளொன்றுக்கு 100 SMS களையும் அனுப்பலாம். ஏர்டெல் நிறுவனத்தைப்போல், ஜியோவிலும் ஜியோ தொலைக்காட்சிகளை பார்க்கும் சலுகைகள் வழங்கப்படுகின்றன.249 ரூபாய் திட்டத்தில் நாள்ளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை ஜியோ வழங்குகிறது. 28 நாட்களில் 56 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், ஏர்டெல் நிறுவனம் 249 ரூபாய் திட்டத்தில் நாள்ளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. 100 எஸ்.எம்.எஸ் மற்றும் ஜியோவின் கூடுதல் சலுகைகளையும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் பெறலாம்

வோடாஃபோன் Vi Vs ஏர்டெல் :

199 ரூபாய் திட்டத்தில் Vi நாள்ளொன்றுக்கு ஒரு ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல்லை ஒப்பிடும்போது குறைவான டேட்டா வழங்கல் இதுவாகும். அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் அன்லிமிட்டெட் அழைப்புகள் வழங்கும் Vi, நாள்ளொன்றுக்கு 100 எஸ்.எம்.எஸ்-கள் வீதம் 24 நாட்களுக்கு மட்டுமே வழங்குகிறது. கூடுதலாக Vi திரைப்படங்கள் மற்றும் டிவி பார்க்கும் வசதி கொடுக்கப்படுகிறது. 555 ரூபாய் திட்டத்தில் நாள்ளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். கூடுதலாக 1 ஆண்டுக்கான ZEE5 பிரீமியம் சந்தா கொடுக்கப்படுகிறது.
First published: January 7, 2021
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading