ஏர்டெல் ப்ரீபெய்டு ரீசார்ஜ் பிளானில் மாற்றம் - இன்று முதல் அமல்!

ஏர்டெல்

தற்போது வாடிக்கையாளர்கள் ஆரம்ப பிளானை பெற கூடுதலாக ரூ. 30 செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

  • Share this:
ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானில் மலிவு விலை ரீசார்ஜ் பிளான் ஆன ரூ.49-ஐ நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இந்தியாவை தலைமையிடமாகக் கொண்ட தொலைத் தொடர்பு ஆபரேட்டர் நிறுவனமான பாரதி ஏர்டெல் தெற்காசியா மற்றும் ஆப்பிரிக்கா முழுவதும் 18 நாடுகளில் 471 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை தனது ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான திருத்தம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதில் ரூ.49க்கு வழங்கு ஆரம்ப ப்ரீபெய்டு பிளான் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் ப்ரீபெய்ட் பேக்குகள் இப்போது ரூ. 79 முதல் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளது. ரூ. 79 ஸ்மார்ட் ரீசார்ஜ் சலுகையில் இருமடங்கு டேட்டா, நான்கு மடங்கு அவுட்கோயிங் நிமிடங்கள் வழங்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் தலைசிறந்த கனெக்டிவிட்டியை வழங்கும் நோக்கில் புதிய மாற்றங்களை மேற்கொள்வதாக ஏர்டெல் அறிவித்து இருக்கிறது. ஏர்டெல் என்ட்ரி லெவல் ரிசார்ஜ் சலுகைகளில் அக்கவுண்ட் பேலன்ஸ் பற்றிய கவலை இன்றி வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் இணைப்பில் இருக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரூ. 79 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 64 டாக்டைம், 200 எம்.பி. டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு நொடிக்கு ஒரு பைசா கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

முந்தைய ரூ. 49 சலுகையில் ரூ. 38.52 டாக்டைம், 100 எம்.பி. டேட்டா, அழைப்புகளை மேற்கொள்ள நொடிக்கு 2.5 பைசா கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்த ரூ. 79 பிளான் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது. புதன்கிழமை பிற்பகல் ஏர்டெல்லின் பங்குகள் பிஎஸ்இயில் 5% உயர்ந்து 569 டாலராக இருந்தது. இந்த புதிய மாற்றத்தின் மூலம் ஏர்டேல் நிறுவனத்தின் வருவாய் கணிசமாக அதிகரிக்கும். ரூ. 49 ரீசார்ஜ் திட்டம் ஊரடங்கு காலத்தில் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பேருதவியாக இருந்த நிலையில் தற்போதைய மாற்றம் அவர்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Also read... ரே-பான் நிறுவனத்துடன் இணைந்து AR ஸ்மார்ட் கிளாஸ் - அடுத்த ஹார்டுவேர் தயாரிப்பு குறித்து ஃபேஸ்புக் அறிவிப்பு!

தற்போது வாடிக்கையாளர்கள் ஆரம்ப பிளானை பெற கூடுதலாக ரூ. 30 செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முன்னதாக ரூ.456 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது, 50 ஜிபி மொத்த டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் அழைப்பு சலுகைகள்,பல்வேறு சிறப்பு அணுகல்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 60 நாட்கள் செல்லுபடியாகும். டேட்டாவில் தினசரி வரம்பு கட்டுப்பாடு இல்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். எனவே ஒரே நாளில் நீங்கள் விரும்பும் அளவுக்கு டேட்டாவை பயன்படுத்தலாம் என கூறப்பட்டிருந்தது.
Published by:Vinothini Aandisamy
First published: