100 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை மீண்டும் கையிலெடுத்த ஏர்டெல்!

100 ரூபாய் ப்ரீபெய்டு திட்டம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்களுக்கு 81.75 ரூபாய் டாக்டைம் அளிக்கிறது ஏர்டெல்

Web Desk | news18
Updated: January 28, 2019, 1:12 PM IST
100 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை மீண்டும் கையிலெடுத்த ஏர்டெல்!
ஏர்டெல்
Web Desk | news18
Updated: January 28, 2019, 1:12 PM IST
நீண்ட நாட்களாக நடைமுறையில் இல்லாத 100 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது ஏர்டெல்.

லைஃப்டைம் வேலிடிட்டி உடன் 28 நாட்களுக்கான 100 ரூபாய் மற்றும் 500 ரூபாய் ப்ரீபெய்டு திட்டங்களை ஏர்டெல் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஜியோ அளித்தக் கடுமையான போட்டியால் தொடர்ந்து புதிய ப்ரீபெய்டு திட்டங்களை டெலிகாம் நிறுவனங்கள் அளித்து வருகின்றன. இந்த வகையில் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இப்புதிய திட்டத்தை MyAirtel ஆப் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த 100 ரூபாய் ப்ரீபெய்டு திட்டம் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்களுக்கு 81.75 ரூபாய் டாக்டைம் அளிக்கிறது ஏர்டெல். இதேபோல், 500 ரூபாய் ப்ரீபெய்டு ப்ளான் மூலம் 28 நாட்களுக்கான வேலிடிட்டி உடன் 420.73 ரூபாய்க்கான டாக்டைம் கிடைக்கிறது.

இந்தப் புதிய ப்ளான்கள் வெறும் டாக்டைம்-க்கு மட்டுமே வசதியாக உள்ளது. எஸ்.எம்.எஸ், டேட்டா ப்ளான் போன்ற அம்சங்கள் குறித்து ஏர்டெல் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.

சில நாள்களுக்கு முன்னர் ஏர்டெல் 1,699 ரூபாய்க்கு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்தது. எல்லையில்லா டாக்டைம், எஸ்.எம்.எஸ் உடன் தினமும் 1ஜிபி டேட்டா உடன் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: இந்து பெண்ணை தொட்டால் கையை வெட்டுங்கள் என்று பேசிய மத்திய அமைச்சர்
First published: January 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...