ஏர்டெல் டெலிகாம் நிறுவனமான ஏர்டெல் சமீபத்தில் அமேசானுடன் கூட்டுசேர்ந்து , Thanksapp செயலியை பயன்படுத்தும் அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு பிரைம் வீடியோ மொபைல் எடிசனை வழங்குகிறது . இதுதவிர ஏர்டெல் அதன் ரூ .219 மற்றும் அதற்கு மேற்பட்ட விலையில் உள்ள சில ப்ரீபெய்ட் திட்டங்களுடன் இலவச டேட்டா கூப்பன்களையும் வழங்குகிறது . ஏர்டெல் வாடிக்கையாளர்கள் 6 ஜிபி இலவச டேட்டாவைப்
பெற விரும்பினால் , அவர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் - ல் உள்ள My Coupons பகுதிக்குச் சென்று ரீசார்ஜ் செய்ய வேண்டும் .
மேலும் , வாடிக்கையாளர்கள் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் மூலம் ரூ .298 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் ரூ .50 தள்ளுபடியை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது . தற்போது , ரூ .298 மற்றும் ரூ .398 ஆகிய இரண்டு அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டங்களும் ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் - ல் தள்ளுபடி கூப்பன்களுக்கு தகுதியானவை என்பதை தெரிவித்துள்ளது . ஆகவே , ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மாதந்தோறும் ரூ .50 தள்ளுபடிக்கு அதே சலுகைகளைப் பெறலாம் . நீங்கள் ஏர்டெல் யூசராக இருந்து தேங்க்ஸ் ஆப்பை பதிவிறக்கம் செய்யவில்லை என்றால் , இப்போதே டவுன்லோடு செய்வதன் மூலம் மேற்கண்ட நன்மைகளைப் பெறலாம் .
டேட்டா , அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் இலவச SMS போன்ற ஏராளமான நன்மைகளை வழங்கும் பிரபலமான ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து இங்கு காண்போம் . இந்த ரீசார்ஜ் திட்டங்களின் மூலம் எல்லா மொபைல் வாடிக்கையாளர்களும் பிரைம் வீடியோவை அணுகலாம் . மேலும் சில ரீசார்ஜ் பிளான்கள் ஸ்ட்ரீமிங் நன்மைகளையும் வாடிக்கையாளர்களுக்கு தருகின்றன . இந்த டெல்கோ ப்ரீபெய்ட் திட்டங்களை முறையே ரூ .300, ரூ .400 மற்றும் ரூ .500 க்கும் குறைவான விலையில் ஏர்டெல் வழங்குகிறது . அந்த வகையில் 28 நாட்கள் வாலிடிட்டி கொண்ட ரூ .500 க்கு கீழ் உள்ள ரீசார்ஜ் திட்டங்களில் வழங்கப்படும் நன்மைகள் குறித்து பார்ப்போம் .
ரூ .219 ப்ரீபெய்ட் திட்டம் : இந்த ரீசார்ஜ் பிளானில் ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டா , அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவை கிடக்கிறது . இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளில் ஏர்டெல் Xstream சந்தா மற்றும் Wynk Music ஆகியவையும் அடங்கும் . இந்தியாவில் மொபைல் எடிசன் திட்டங்களை ரூ .89 என்ற ஆரம்ப விலையில் இருந்து வழங்க Amazon ஏர்டெல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது . தற்போது , மொபைல் - ஒன்லி அமேசான் பிரைம் வீடியோ திட்டம் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக வழங்கப்பட்டு வருகிறது . மேலும் அமேசான் நிறுவனம் தனது மொபைல் - ஒன்லி எடிசன் பிளான்களை அறிமுகப்படுத்திய முதல் நாடும் இந்தியா தான் . இப்போது , ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் எடிசனை 30 நாள் இலவச ட்ரையல் பேக் மூலம் அணுகலாம் . உண்மையிலேயே ஏர்டெல் வழங்கும் அன்லிமிடெட் திட்டங்கள் அனைத்தும் பிரைம் வீடியோவின் மொபைல் நன்மையைக் கொண்டுள்ளது என கூறப்படுகிறது .
ரூ .289 ப்ரீபெய்ட் திட்டம் : ஏர்டெல் ப்ரீபெய்ட் ரூ .249, ரூ . 279, ரூ . 289 மற்றும் ரூ .299 என அனைத்து ரீசார்ஜ் திட்டங்களிலும் தனது வாடிக்கையாளர்களுக்கு 28 நாட்கள் வாலிடிட்டியுடன் அன்லிமிடெட் கால்ஸ் , ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பிற்கான அணுகல் போன்றவற்றை வழங்குகின்றன . குறிப்பாக ரூ .289 ரீசார்ஜ் திட்டம் ஒரு மாதத்திற்கு zee5 பிரீமியத்திற்கான அணுகலை வழங்குகிறது . அதேபோல கூடுதல் நன்மைகளாக Airtel Xstream, Hello Tunes மற்றும் Wynk Music ஆகியவற்றிற்கான இலவச சந்தாக்களை சிறிய வித்தியாசத்துடன் வழங்குகின்றன .
ரூ .298 ப்ரீபெய்ட் திட்டம் : இதன் வாலிடிட்டி 28 நாட்கள் ஆகும் . இந்தத் திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை வழங்குகிறது . இந்த திட்டத்தின் கூடுதல் நன்மைகளில் Airtel Xstream சந்தா மற்றும் இலவச ஆன்லைன் படிப்புகளுக்கான அணுகலுடன் கூடிய Wynk Music மற்றும் Fastag பரிவர்த்தனைக்கு ரூ .150 கேஷ்பேக் ஆகியவையும் அடங்கும் . மேலும் , இந்த திட்டம் பாரதி ஆக்சா ஆயுள் (Bharti Axa life) காப்பீட்டுக்கான அணுகலை வழங்குகிறது .
ரூ .398 ப்ரீபெய்ட் திட்டம் : இதன் வாலிடிட்டி 28 நாட்கள் ஆகும் . இதில் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா , அன்லிமிடெட் கால்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் ஆகியவற்றை பெறலாம் . கூடுதல் நன்மைகளாக Airtel Xstream பிரீமியத்திற்கான சந்தா , Wynk Music மற்றும் ஷா அகாடமியின் சந்தா ஆகியவை கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன . அதேபோல , வாடிக்கையாளர்களுக்கு இலவச ஹலோ டியூன்ஸ் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ .150 கேஷ்பேக் ஆகியவையும் கிடைக்கும் . இந்த திட்டத்துடன் ஸ்ட்ரீமிங் நன்மைகள் எதுவும் இல்லை .
ரூ .448 ப்ரீபெய்ட் திட்டம் : ரூ .500 க்கு கீழ் உள்ள சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது . ஏனெனில் இந்த திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா வழங்குகிறது . இதன் வாலிடிட்டி 28 நாட்கள் ஆகும் . மேலும் ஓராண்டுக்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவையும் இந்த ரீசார்ஜ் பிளான் வழங்குகிறது . மேலும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் Airtel Xstream பிரீமியத்தின் சந்தாவுடன் கூடுதல் நன்மைகளை பெறலாம் . அதேபோல , Wynk Music மற்றும் ஷா அகாடமியின் சந்தாக்களும் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன . வாடிக்கையாளர்களுக்கு இலவச ஹலோ டியூன்ஸ் மற்றும் ஃபாஸ்டாக் பரிவர்த்தனைகளில் ரூ .150 கேஷ்பேக் கிடைக்கும் .
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by: Ram Sankar
First published: February 21, 2021, 20:06 IST